மிக அருகிய இனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மிக அருகிவிட்ட இனம் (CR - Critically endangered) என்பது, பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் வழங்கப்படும் சிவப்புப் பட்டியலில் வாழிடத்தில் மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளான, அல்லது அதிக சூழ் இடர் கொண்ட இனமாக அடையாளப்படுத்தப்படும் இனம் ஆகும்.[1] இது ஒரு உயிர்வாழும் இனத்திற்கு வழங்கப்படும் காப்பு நிலைகளில் ஒன்றாகும்.

மூன்று சந்ததிகளில் இனத்தின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 80% ஆக குறைந்திருப்பின், அல்லது குறைவதற்கான சாத்தியம் அதிகரித்திருப்பின், அவை மிக அருகிவிட்ட இனமாகக் கொள்ளப்படும். குறிப்பிட்ட இனத்தில் பரந்த அளவிலான, இலக்கு வைத்த மதிப்பீடு நடத்தப்படாத வரை ஒரு இனத்தை 'அற்றுவிட்ட இனமாக' சிவப்புப் பட்டியலில் குறிப்பிடுவதில்லை. ஆனாலும் மிக அருகிவிட்ட இனங்கள் பட்டியலில் இருக்கும் சில இனங்கள், 'அற்றுவிட்ட இனமாக இருக்கக்கூடிய சாத்தியமுடையவை'.

2014 ஆண்டு நிலவரப்படி, இந்தக் காப்புநிலையில் 2464 விலங்குகளும், 2104 தாவரங்களும் இடம்பெற்றிருந்தன. 1998ல் இந்த எண்ணிக்கைகள் முறையே 854 ஆகவும், 909 ஆகவும் இருந்தன.[2]

குறிப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிக_அருகிய_இனம்&oldid=2846146" இருந்து மீள்விக்கப்பட்டது