உயிரியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
உயிரியல்

உயிரியல் என்பது வாழ்க்கை மற்றும் உயிரினங்கள் பற்றிய இயற்கை அறிவியலாகும். உயிரியலில் அனைத்து உயிரினங்களினதும் கட்டமைப்பு, தொழிற்பாடு, வளர்ச்சி, தோற்றம், கூர்ப்பு, பரம்பல், மற்றும் உயிரியல் வகைப்பாடு போன்றவை ஆராயப்படுகின்றது.[1][2]. இது உயிரினங்களுடைய இயல்புகள் மற்றும் நடத்தைகள், எப்படி தனிப்பட்ட உயிரினங்களும், உயிரின இனங்களும், தோற்றம் பெற்றன, அவை தங்களுக்குள்ளும், ஒன்று மற்றொன்றுடனும், சூழலுடனும் கொண்டுள்ள தொடர்புகள் என்பன பற்றிக் கருத்தில் கொள்கிறது.

உயிரியலின் வரலாறு[தொகு]

நவீன உயிரியல் ஒப்பீட்டளவில் சமீபத்திய வளர்ச்சி அடைந்து இருப்பினும் உயிரியலை உள்ளடக்கியதும் அதனுடன் தொடர்பானதுமான விஞ்ஞானம் ஆதி காலத்திலிருந்தே கற்கப்பட்டது. இயற்கை தத்துவம் மொசப்பத்தேமிய, எகிப்திய, சிந்துவெளி மற்றும் சீன நாகரிகங்களில் இருந்தே கற்கப்பட்டது. இருப்பினும், நவீன உயிரியல் மற்றும் இயற்கை ஆய்வு, அதன் அணுகுமுறை தோற்றம் என்பன பெரும்பாலும் பண்டைய கிரேக்க தத்துவங்களை ஒத்து காணப்படுகின்றன. அதேவேளை மருத்துவ முறையான கல்வி Hippocrates காலம் (கி.மு.460-கி.மு.370) வரை பின்னோக்கி செல்கிறது. அரிஸ்டாடில் உயிரியல் வளர்ச்சிக்கு மிக அதிகமாக பங்களித்தார்.

மத்திய இசுலாமிய உலக அறிஞர்களான al-Jahiz (781–869), Al-Dinawari (828–896) போன்றோர் தாவரவியல் பற்றியும் , Rhazes (865–925) உடற்கூறியல் மற்றும் உடலியங்கியல் பற்றியும் நூல்களை எழுதினர். குறிப்பாக கிரேக்க தத்துவஞானி மரபுகளை ஆய்வு செய்த இஸ்லாமிய அறிஞர்களால் மருத்துவம் சிறப்பாக கற்கப்பட்டது. ஆன்டன் வான் லியூவன்ஹூக் (Antony van Leeuwenhoek) நுண்ணோக்கியை மேம்படுத்திய பின் உயிரியல் விரைவில் அபிவிருத்தியடைய மற்றும் வளர தொடங்கியது. இதன் பின்னரே விந்தணுக்கள், பாக்டீரியா போன்றவையும் நுணுக்குக்காட்டிக்குரிய அங்கிகளின் பாகுபாடும் கண்டுபிடிக்கப்பட்டன. நுண் நோக்கியியல் முன்னேற்றங்கள் உயிரியல் சிந்தனையில் மேலும் ஒரு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியன.

19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் உயிரியலாளர்கள் பலர் கலத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினர். 1838 மற்றும் 1839 இல், ச்செல்டியன் மற்றும் சுவான் பின்வரும் கருத்துக்களை ஊக்குவிக்க தொடங்கினர். 1) உயிரினங்களின் அடிப்படை அலகு கலம் ஆகும் 2) தனிப்பட்ட கலங்களில் வாழ்வின் அனைத்து பண்புகள் உண்டு 3) அனைத்து கலங்கள் மற்ற கலங்களின் பிரிவில் இருந்தே வரும் இவை பின்னர் கலக்கொள்கை ஆக ஏற்றுக்கொள்ளப்பட்டன .

உயிரியல் பற்றிய நோக்கு[தொகு]

உயிரியல் ஒரு பரந்த அளவிலான, தனித்தனித் துறைகளாகக் கருதப்படுகின்ற, பல்வேறு கல்வித் துறைகளை உள்ளடக்கிய ஒன்றாகும். அவையனைத்தும் ஒட்டுமொத்தமாக பரந்த மட்டங்களில் உயிரினங்கள் பற்றியும், அவை வாழும் சூழல் பற்றியும் ஆய்வு செய்கின்றன:

இவ்வாறு மேலும் பல கற்கைத்துறைகளின் ஊடாக உயிரியல் தொடர்ச்சியாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது.

நவீன உயிரியலின் அடிப்படைகள்[தொகு]

உயிரியலில் பல கொள்கைகள் இருந்தாலும், நவீன உயிரியலுக்கு அடிப்படையாக முக்கியமான ஐந்து கொள்கைகள் கருதப்படுகின்றன:[3]

  • கலக்கொள்கை - கலங்களுடன் தொடர்புடைய சகல கற்கைகளும் கலக்கொள்கையில் அடங்கும். சகல உயிரினங்களும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலங்களைக் கொண்டிருக்கும். உயிரிகளின் கட்டமைப்பு ரீதியானதும் தொழிற்பாட்டு ரீதியானதுமான அடிப்படை அலகு கலமாகும். சகல கலங்களும் முதலுள்ள கலங்களிலிருந்தே தோன்றும்.
  • படிவளர்ச்சிக் கொள்கை - மரபணுவில் ஏற்படும் மாற்றங்களாலும், இயற்கைத் தேர்வினாலும், ஒரு சனத்தொகையினது பரம்பரைக் குணவியல்புகள் தலைமுறைக்குத் தலைமுறை மாற்றமடையும். இதனால் புதிய இனங்களும், பரம்பரையாகக் கடத்தப்படக்கூடிய இயல்புகளும் உருவாகின்றன.
  • சக்தி - அனைத்து உயிரினங்களினதும் நிலைப்பாட்டிற்கு சக்தியானது தேவைப்படுகின்றது. அந்த சக்தியை ஒரு வடிவத்தில் உள்ளெடுத்து, தமக்குத் தேவையான வடிவத்தில் உருமாற்றம் செய்துகொள்ளும் தன்மையை உயிரினங்கள் கொண்டிருக்கின்றன.
  • ஒருசீர்த்திடநிலை - அனைத்து உயிரினங்களும் தமது உட்ச்சூழலை நிலையாகவும், மாறாமலும் பேணுவதற்கான சீரமைக்கும் தன்மையைக் கொண்டிருக்கும்.
  • மரபணு - மரபணுவே பாரம்பரியத்திற்கான அடிப்படை அலகாகும். ஒரு உயிரினத்தின் குணவியல்புகள் அனைத்தும் டி.என்.ஏ இல் இருக்கும் இந்த மரபணுவிலேயே குறியிடப்பட்டுள்ளது.

உயிரியலில் படிநிலை அமைப்பு[தொகு]

Levels of Organization-ta.svg

உயிரியல் அமைப்பானது, பல்வேறு படிநிலைகளில் ஒழுங்குபடுத்தப்படுகின்றது. வாழ்வின் மிக அடிப்படையான கூறிலிருந்து, சிக்கலான அமைப்புக்கள்வரை இந்தப் படிநிலைகள் விரிந்து செல்கின்றன. இந்தப் படிநிலைகளில் மிகவும் அடிப்படையான படிநிலையாக அணுவும், மிக உயர்ந்த படியாக சூழலியல் அமைப்பும் இருக்கின்றன.

உயிரியல் கற்கைத் துறைகள்[தொகு]

குருத்தணு ஆராய்ச்சிகளில் மனித நகலெடுப்பதற்கும், நோயாலோ அல்லது காயப்பட்டு சிதைந்து போவதாலோ அழியும் திசுக்களைத் திரும்ப வளரச் செய்வதற்கும், குருத்துத் திசுள்களை உபயோகிப்பதை ஆராய்ந்து வருகிறார்கள்.

படங்களின் தொகுப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Based on The Free Dictionary The Free Dictionary
  2. Based on definition from Aquarena Wetlands Project glossary of terms.
  3. Avila, Vernon L. (1995). Biology: Investigating life on earth. Boston: Jones and Bartlett. பக். 11–18. ISBN 0-86720-942-9. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிரியல்&oldid=2242892" இருந்து மீள்விக்கப்பட்டது