உயிர்வேதியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

உயிர்வேதியியல் (Biochemistry) என்பது உயிரினங்களுள் நிகழும் வேதியியல் செயல் முறைகள் பற்றிய கற்கைத்துறை ஆகும்[1]. இது, உயிரணுக்கள் சார்ந்த புரதங்கள், காபோவைதரேட்டுகள், கொழுமியங்கள், கருவமிலங்கள், பிற உயிர்மூலக்கூறுகள் போன்ற கூறுகளின் அமைப்பு அவற்றின் செயல்பாடுகள் என்பவை குறித்துக் கவனம் செலுத்துகின்றது. பெரும் எண்ணிக்கையில் வெவ்வேறான உயிர்மூலக்கூறுகள் இருப்பினும், இவற்றுட் பெரும்பாலானவை சிக்கலானவையாகவும், பெரியனவுமாகவும் உள்ளன. இப் பெரிய மூலக்கூறுகள் பல்பகுதியங்கள் (Polymer) எனப்படுகின்றன. பல்பகுதியங்கள் பல சிறிய மூலக்கூறுகளால் ஆனவை.

உயிர்வேதியிய சமிக்ஞை கடத்துகைகளைக் கட்டுபடுத்தி உயிரணுக்களுக்கிடையில் நிகழும் செய்தி பரிமாற்றத்தைக் ஒழுங்குச் செய்வதன் மூலமும், வளர்சிதைமாற்றம் வழியாக வேதியல் ஆற்றல் பாய்வைக் கட்டுபடுத்துவதன் மூலமாகவும் உயிவேதியிய நிகழ்முறைகள் உயிரின் சிக்கலான கட்டமைப்புகளுக்கு வழி வகுக்கின்றன. கடந்த நாற்பது ஆண்டுகளாக உயிர் நிகழ்முறைகளை விளக்குவதில் உயிவேதியியல் பெரும் வெற்றி கண்டுள்ளது எனலாம். இதனால், தாவரவியல் முதற்கொண்டு மருத்துவம் வரை பல்வேறு வாழ்வியல் துறைகளில் உயிர்வேதியல் ஆய்வுகள் நடந்தவண்ணம் உள்ளன[2]. உயிரணுக்களில் நிகழும் செயற்பாடுகளில் உயிரிய மூலக்கூறுகள் எவ்விதம் பங்கேற்கின்றன என்பது குறித்த புரிதல்களை நோக்கி ஆராய்வதே தற்கால உயிவேதியியல் துறையின் முதன்மைப் பணியாக உள்ளது. இத்தகு ஆய்வுகள் உயிரினத்தை முழுமையாக அறிந்து கொள்வதற்கும், படிப்பதற்கும் வழிவகுக்கின்றன.

உயிர்வேதியியலானது மூலக்கூறுகளின் இயங்கமைவுகள் எவ்விதம் ஆக்சிசனற்ற ரைபோ கரு அமிலங்களில் (டி.என்.ஏ) பொதிந்துள்ள மரபியல் குறிப்புகளை (செய்திகள்) உயிர்வினைகளாகப் பரிணமிக்கச் செய்கிறது என்பதைப் பற்றி அறிந்து கொள்ளும் மூலக்கூற்று உயிரியலுடன் நெருங்கியத் தொடர்புடையதாக உள்ளது. வரையறைகளைப் பொருத்து, மூலக்கூற்று உயிரியலை உயிர்வேதியியலின் ஒரு பிரிவாகவோ அல்லது, மூலக்கூற்று உயிரியலைப் பற்றி படிக்கவும், அத்துறையில் ஆய்வுகள் செய்யவும் உயிர்வேதியியலை ஒரு கருவியாகவோப் பயன்படுத்தலாம்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிர்வேதியியல்&oldid=2309830" இருந்து மீள்விக்கப்பட்டது