குழந்தை அறுவை சிகிச்சை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குழந்தை அறுவை சிகிச்சை மருத்துவர்
Gupta Ford Vinson surgery.jpg
தொழில்
பெயர்கள் மருத்துவர்
வகை சிறப்புத்தொழில்
செயற்பாட்டுத் துறை அறுவை சிகிச்சை
விவரம்
தேவையான கல்வித்தகைமை *மருத்துவர் (M.D.)
  • மருத்துவம் (D.O.)
தொழிற்புலம் மருத்துவமனைகள்
சராசரி ஊதியம் USD $344,000 (M.D.)

குழந்தை அறுவை சிகிச்சை (Pediatric surgery) துறை பிறக்காத மற்றும் பிறந்த சிறு குழந்தைகள், கைக்குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள் இவர்களுக்கான அறுவை சிகிச்சை பற்றிய துறையாகும். புதிதாய்ப் பிறந்த (நான்கு வாரத்திற்குட்பட்ட) குழந்தைகளுக்கான அறுவைச் சிகிச்சை (neonatal surgery), கரு அறுவைச் சிகிச்சை (fetal surgery) ஆகியவை சிறப்பு உட்பிரிவுகளாகும். பிறப்புக் குறைபாடுகளுக்கான அறுவைச் சிகிச்சை முறைகளுக்காகப் புதுமையானச் செய்நுட்பங்களும் வழிமுறைகளும் தேவைபட்டதனால், குழந்தைகளுக்கான அறுவைச் சிகிச்சை துறை 20ம் நூற்றாண்டின் நடுவில் சிறப்பான முன்னேற்றம் கண்டது.