சிறுநீரகவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறுநீரகவியல்
மனித சிறுநீரகம் (விவரமறிய படிமத்தைச் சொடுக்கவும்).
அமைப்புசிறுநீரகங்கள்
குறிப்பிடத்தக்க நோய்கள்உயர் இரத்த அழுத்தம், சிறுநீரகப் புற்றுநோய்
குறிப்பிடத்தக்க சோதனைகள்சிறுநீரகத் திசு ஆய்வு, சிறுநீர்ச் சோதனை
சிறப்பு வைத்தியர்சிறுநீரகவியலாளர்

சிறுநீரகவியல் (Nephrology, கிரேக்க மொழியில் நெஃப்ரோசு "சிறுநீரகம்" + -லாஜி, "கல்வி") சிறுநீரகத்தின் செயற்பாடு, சிறுநீரக பிரச்சினைகள், மற்றும் சிறுநீரக குறைபாடுகளுக்கான சிகிட்சை சிறுநீரக மாற்றமைப்பு சிகிச்சை (கூழ்மப்பிரிப்பு மற்றும் சிறுநீரகக் கொடை) ஆகியவற்றை ஆய்வுசெய்யும் மருத்துவ மற்றும் குழந்தை மருத்துவத்தில் சிறப்புத்துறையாகும். சிறுநீரகங்களை பாதிக்கும் (நீரிழிவு நோய், தன்னுடல் தாக்குநோய் போன்ற) உடலியங்கியல் குறைபாடுகளையும் சிறுநீரகக் கோளாறுகளால் உடலில் ஏற்படும் ( சிறுநீரகக் கோளாறால் எலும்பு ஊறுபாடு, உயர் இரத்த அழுத்தம் போன்ற) குறைபாடுகளையும் இத்துறையில் கற்கிறார்கள். இத்துறையில் சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவர் சிறுநீரகவியல் வல்லுநர் எனவும் சிறுநீரகவியலாளர் அல்லது சிறுநீரக மருத்துவர் என்று அழைக்கப்படுகின்றனர்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுநீரகவியல்&oldid=3584130" இலிருந்து மீள்விக்கப்பட்டது