நீரிழிவு நோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நீரிழிவு
Blue circle for diabetes.svg
நீரிழிவுக்கான உலகளாவிய நீல வளைய இலச்சினை[1]
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்பு diabetology
ICD-10 E10.E14.
ICD-9-CM 250
MedlinePlus 001214
ஈமெடிசின் med/546 emerg/134
Patient UK நீரிழிவு நோய்
MeSH C18.452.394.750

நீரிழிவு (diabetes) என்பது வளர்சிதைமாற்ற நோய்களின் ஒரு தொகுப்பாகும். இலங்கையில் இது சீனி வியாதி அல்லது சர்க்கரை நோய்என்றும் அழைக்கப்படுகிறது. தேவையான இன்சுலினை உடல் உற்பத்தி செய்யாத அல்லது உற்பத்தி செய்த இன்சுலினைப் பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்த இயலாத நிலைமையில், இந்நோய் உள்ளவர்களின் இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருக்கும். ஆனால், நீரிழிவு என்பது ஒரு நோயல்ல; இன்சுலின் சமசீர் நிலையை இழப்பதால் ஏற்படுவதாகும். மனித உடம்பில் சர்க்கரையை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்ற இன்சுலின் அத்தியாவசியமாக உள்ளது. குறிப்பாக, இரத்த சர்க்கரை அளவு சரியாகக் கட்டுப்படுத்தப்படவில்லை எனில் உயர் இரத்த அழுத்தம், நாடிகளின் சுவர்களில் கொழுப்பு படிந்து நாளடைவில் அடைபடுதல், இருதயத் தசைகளுக்கு குருதி வழங்கும் நாடிகளில் ஏற்படும் நோய் மற்றும் பாரிசவாதம் ஆகியவை ஏற்படக் கூடிய ஆபத்தை அதிகரிக்கிறது. இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருப்பது அடிக்கடி சிறுநீர் கழித்தல் (polyuria), அதிகமாக தாகமெடுத்தல் (polydipsia), அளப்பரிய பசி (polyphagia) ஆகிய மரபார்ந்த அறிகுறிகளை உருவாக்குகின்றது.

நீரழிவு நோயின் அனைத்து வகைகளும் 1921-ஆம் ஆண்டு இன்சுலின் உபயோகத்திற்கு வந்ததிலிருந்து சிகிச்சை அளிக்கக் கூடியவையாகவே உள்ளன. இரண்டாம் வகை நீரழிவு நோயினை மருந்துகளின் மூலம் கட்டுபடுத்த முடியும். இருந்தபோதிலும் முதலாம், இரண்டாம் வகை நீரழிவு நோய்கள் இரண்டுமே நாள்பட்ட நோய்களாததால், இவற்றைச் சாதாரணமாக முற்றிலுமாகக் குணமாக்க முடியாது. கணைய மாற்ற சிகிச்சை முதலாம் வகையில் முயற்சிக்கப்பட்டது. ஆனால், பெரும் வெற்றியைச் சாதிக்க முடியவில்லை. பல நோயுறுவான பருமனைக் கொண்டவர்களிலும், இரண்டாம் வகை நீரிழிவுக்காரர்களிலும் இரையக மாற்று வழி இணைப்பறுவை செய்வது வெற்றியைக் கொடுத்துள்ளது. கர்ப்பகால நீரிழிவானது பெரும்பாலும் குழந்தை பிறந்த பின் மறைந்துவிடுகிறது.

பொருளடக்கம்

பாதிக்கப்பட்டவர்கள்[தொகு]

உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 11 பேரில் ஒருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2014இல் கிட்டத்தட்ட 422 மில்லியன் மக்கள் நீரிழுவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. [2]

வகைப்பாடு[தொகு]

நீரிழிவு நோயை இரண்டாக வகையாக வகைப்படுத்தியுள்ளனர்.

நீரிழிவில் முதலாவது மற்றும் இரண்டாவது வகைகளின் ஒப்பீடு[3]
சிறப்பியல்புகள் முதலாவதுவகை இரண்டாவது வகை
தோற்றம் திடீரென்று படிப்படியாக
தோன்றும் வயது பெரும்பாலும் குழந்தைகளில் பெரும்பாலும் பெரியவர்களில்
உடல்வாகு மெலிந்த அல்லது சாதாரணமான[4] பருமனான
கீட்டோ அமிலத்துவம் சாதாரணம் அரிது
தன்னெதிர்ப்பிகள் வழக்கமாக உண்டு இல்லை
அகவழி இன்சுலின் குறைவு (அ) இல்லை சாதாரணம், குறைவு
(அ) அதிகம்
இரட்டைக் குழந்தைகளில்
இசைவு
50% 90%
நீரிழிவு பரவியுள்ளமை ~10% ~90%

நீரிழிவில் மூன்று வகைகள்[தொகு]

முதலாவதுவகை[தொகு]

முதலாவதுவகை நீரிழிவானது (Type I Diabetes-IDDM- Insulin Dependent Diabetes Mellitus) குழந்தைகள், சிறுவர், சிறுமிகள், இளம் பருவத்தினர் ஆகியோருக்கு ஏற்படுகின்றது. இவர்களுக்கு இன்சுலின் கொண்டுதான் சிகிச்சை அளிக்கவேண்டும். ஏனென்றால் இவர்களது இன்சுலின் சுரப்பிகள் இன்சுலின் சுரக்கும் தன்மையை முற்றிலும் இழந்திருக்கின்றன. 10% வீதமான நீரிழிவு நோயாளிகள் வகை ஒன்றினால் பாதிக்கப்பட்டவர்களாவார்கள்.

இரண்டாவது வகை[தொகு]

இரண்டாவது வகை நீரிழிவு (Type II- NIDDM- Non Insulin Dependent Diabetes Mellitus) இன்சுலின் சுரப்பிகள் போதிய அளவு இன்சுலின் சுரக்காததாலோ அல்லது அப்படி சுரக்கப்படும் இன்சுலினுக்கு எதிர்வினை ஏற்படுவதாலோ ஏற்படுகின்றது. இந்த வகை நீரிழிவு கிட்டத்தட்ட 90 வீதமான நோயாளிகளில் காணப்படுகிறது. இந்தவகை நீரழிவை வயது வந்தவர்களுக்கு ஏற்படும் நீரிழிவு என்றும் கூறுவார்கள். இந்த வகை அதிக உடற்பருமன் உள்ளவர்களிடம் காணப்படுகின்றது. இந்த வகை நீரிழிவை உடல் எடையைக் குறைப்பதாலும் சாப்பாட்டுக் கட்டுப்பாட்டாலும் மற்றும் உடற்பயிற்சியினாலும் சிலசமயம் கட்டுப்படுத்தலாம்.

மூன்றாவது வகை[தொகு]

மூன்றாவது வகையான கர்ப்பக் கால நீரிழிவானது 2 சதவீதம் முதல 4 சதவீதமான பெண்களுக்கு கர்ப்பக் காலத்தின் போது ஏற்படுகிறது. குழந்தை பிறந்தவுடன் இது மறைந்து விடுகிறது. இருந்தபோதிலும், பிற்பாடு வாழ்க்கையில் குழந்தைக்கும் தாய்க்கும் நீரிழிவு உண்டாகும் வாய்ப்பை அதிகரிக்கக் கூடும். நமது இரைப்பையும் குடலும் உணவிலிருந்து குளுக்கோஸ் எனும் வெல்லத்தை எடுத்து குருதியில் செலுத்துகிறது. அதே சமயம் கணையத்திலிருந்து இன்சுலின் உற்பத்தியாகி குருதியில் கலக்கிறது.

நீரிழிவின் பெரும்பாலான முக்கிய அறிகுறிகளின் மீள்பார்வை

குருதியில் உள்ள சர்க்கரை கலன்களுக்குள் நுழைய முடியாததன் காரணம்?[தொகு]

பல காரணங்களால் இது நிகழலாம்.

 • தேவையான அளவு இன்சுலின் கணையத்திலிருந்து உற்பத்தியாகாமல் போகலாம்.
 • இன்சுலின் தேவையான அளவு இருந்தும் சரியாக செயல்படாமல் இருத்தல் போன்ற காரணங்களால் ஏற்படலாம்.

நீரிழிவு நோய் யாருக்கு ஏற்படும்?[தொகு]

யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இருப்பினும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், பரம்பரையில் நீரிழிவு நோய் இருப்பவர்கள், உடல் எடை அதிகமாக இருப்பவர்கள், ஆகியவர்களுக்கு நீரிழிவு நோய் வர அதிக வாய்ப்புண்டு. இவர்கள், தங்களுடைய மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.

நீரிழிவு நோயின் அறிகுறிகள்[தொகு]

பல சமயங்களில் அறிகுறிகள் சரியாக தென்படாமல் போகிறது. சில பொதுவான அறிகுறிகள்

நீரிழிவு நோயால் ஏற்படக்கூடிய விளைவுகள்[தொகு]

இரண்டாம் வகை நீரிழிவு நோயால் ஏற்படக்கூடியவை.

நீரிழிவு நோயினை உறுதி செய்யும் சோதனை முறைகள்[தொகு]

நீரிழிவு நோயினை உறுதிசெய்வதற்கு இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அல்லது சர்க்கரையின் அளவானது அளவிடப்படுகின்றது. உண்ணாநிலை குருதிச் சர்க்கரை அளவு (Fasting plasma glucose) 7.0 மில்லி மோல்/லிட்டர் (126 மில்லி கிராம்/டெசிலிட்டர்)-லும் அதிகமாக அல்லது எதேச்சையான குருதிச் சர்க்கரையின் அளவு (Random plasma glucose) 11.1 மில்லி மோல்/லிட்டர் (200 மில்லி கிராம்/டெசிலிட்டர்) --லும் அதிகமாக காணப்பட்டால் ஒருவருக்கு நீரிழிவு நோய் உள்ளது என உறுதி செய்யப்படும்.

விழிப்புணர்வு[தொகு]

சர்க்கரை நோயினால் பாதிக்கப்படுகின்ற சிறார்களுக்கு, அந்த நோயின் அறிகுறிகள் பற்றி அறிவூட்டும் முயற்சியாக ரோபோ ஒன்று உருவாக்கப்படுகின்றது. 7 வயது முதல் 12 வயதுக்கு இடைப்பட்ட சிறார்களுக்கு உதவக்கூடிய வகையிலான இந்த ரோபோவை பிரிட்டனில் உள்ள ஹெர்ட்ஃபோட்ஷைர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உருவாக்குகின்றனர்.[5]

நீரிழிவு நோயும் உணவுக் கட்டுப்பாடும்[தொகு]

நீரிழிவு நோயாளர்கள் தனியாக உணவு உட்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அளவோடு பிறருடன் சேர்ந்தே உணவை உட்கொள்ளலாம். பத்திய உணவுகள் மற்றும் சிறப்பாக தயாரிக்கப்பட்ட உணவுவகைகள் எனத் தனிக்கவனம் காட்டவேண்டிய அவசியம் இல்லை.

• நார்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் ஆகியவற்றை உணவில் மிகுதியாகச் சேர்த்துக்கொள்வதன் மூலமாக, சர்க்கரையின் மற்றும் கொழுப்புச் சத்தின் அளவுகளைக் குறைக்கச் செய்யமுடியும்.

• கோதுமையும் கேழ்வரகும் நீரிழிவு நோய்க்கான உணவு அல்ல. இரண்டையும் அளவுடன் உண்ணுதல் நலம். ஏனெனில் அரிசி, கோதுமை, கேழ்வரகு ஆகியவை ஒரே சக்தியை தருபவை.

• உணவு முறையை கடைப்பிடித்தால் மட்டுமே மாத்திரைகளும், இன்சுலின் ஊசியும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும்.

• மாற்று உணவு முறையைக் கடைப்பிடித்தலும் மேற்கொள்ளுதலும் சிறந்த வழிகளாகும்.

• சைவ உணவே நீரிழிவு நோய்க்கு நல்லது. அசைவ உணவு உண்பவர்கள், அது கொடுக்கும் சக்தியைக் கணக்கிட்டு அளவாக உட்கொள்ளப் பழகுதல் நல்லது.

• இத்தகையோர் கொழுப்புச் சக்தி அதிகம் உள்ள உணவுவகைகளான முட்டையின் மஞ்சள் கரு, மாட்டிறைச்சி, ஈரல், மூளை, ஆட்டுக்கறி, இறால், நண்டு, முந்திரி, பாதாம்பருப்பு, நிலக்கடலை, ஆட்டுக்கால் சூப், பழ வகைகள், கிழங்குகள் முதலானவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதைத் தவிர்க்க முயற்சிக்க வேண்டும்.[6]

மனிதர்களுக்கான உணவு முறையில் மாவுச் சத்து, கொழுப்பு மற்றும் புரதம் ஆகியவை 60:20:20 என்னும் விகிதத்தில் இருக்க வேண்டும். இப்போது நீரிழிவு நோய்க்கான மருத்துவர் மற்றும் உணவியல் வல்லுநர்கள், நீரிழிவு நோயினைக் கட்டுப்படுத்திட பரிந்துரைக்கும் சில யோசனைகளாவன:

வெந்தயம்[தொகு]

வெந்தயத்தை, இரவில் ஊற வைத்து விட்டு, மறுநாள் அதை உட்கொண்டால் உடலில் சர்க்கரை அளவானது கட்டுப்படும்.

தக்காளி[தொகு]

நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த, உப்பு மற்றும் மிளகு கலந்த தக்காளிச் சாற்றை, நாள்தோறும் காலையில் வெறும் வயிற்றில் பருகுதல் நல்லது.

பாதாம்[தொகு]

நாள்தோறும் குடிநீரில் ஊற வைத்த ஆறு பாதாம் பருப்பைச் சாப்பிட்டுவர, சர்க்கரையின் அளவு அதிகரிக்காது.

தானிய வகைகள்[தொகு]

சிறு தானிய வகைகள், ஓட்ஸ், கடலை மாவு மற்றும் இதர நார்ச்சத்து அடங்கிய உணவுகளை அன்றாடம் சேர்த்துக்கொள்ளுதல் நல்லது. முளைக் கட்டிய தானியங்கள் நீரிழிவு நோயாளிகளுக்குச் சிறந்த உணவாகும்.

பால்[தொகு]

பாலில் மாவுச் சத்து மற்றும் புரதத்தின் கலவை சரியான அளவில் காணப்படும். ஆதனால், பாலானது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. எனவே, நாள்தோறும் இரண்டு முறை பால் அருந்துவது நலம்.

காய்கறிகள்[தொகு]

நீரிழிவு பாதிப்பிற்கு ஆட்பட்டோர் அதிக நார்ச்சத்துள்ள காய்கறிகளான பட்டாணி, பீன்ஸ், ப்ராக்கோலி மற்றும் கீரை வகைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை வெகுவாகக் குறைக்க முடியும்.

பருப்பு வகைகள்[தொகு]

உளுந்து, பயறு, கொண்டைக்கடலை முதலான பருப்பு வகைகளை முளைகட்டி உணவோடு சேர்த்து கொள்ளுதல் அவசியம். மாவுச்சத்து கலந்த மற்ற உணவுகளை விட, புரதச் சத்து மிகுதியான பருப்பு வகைகளால் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைவாகவே காணப்படும்.

ஒமேகா-3[தொகு]

ஒமேகா-3 மற்றும் ஒருபடித்தான நிறைவுறா கொழுப்பு போன்ற நல்ல கொழுப்புகள் அடங்கிய உணவை உட்கொண்டால் உடலுக்கு நன்மையானது. மேலும், கனோலா எண்ணெய், சணல் எண்ணெய், கொழுப்பு மீன் மற்றும் பருப்பு வகைகள் போன்றவற்றில் இயற்கையாகவே இந்த வகையான கொழுப்புகள் மிகுந்துள்ளன. இவை சர்க்கரையின் அளவைக் குறைக்கின்றன.

பழங்கள்[தொகு]

நீரிழிவு பாதிப்பிற்குள்ளானோர் அதிக நார்ச்சத்துள்ள பழங்களான பப்பாளி, ஆரஞ்சு, பேரிக்காய் மற்றும் கொய்யாப் பழத்தை உட்கொள்ள வேண்டும். சர்க்கரையின் அளவு கூடுதலாகக் காணப்படும் மா, பலா, வாழை மற்றும் திராட்சை போன்ற பழ வகைகளை மிகுதியாக உண்ணக் கூடாது.

சீரான உணவுப் பழக்கவழக்கம்[தொகு]

அதிக உணவை ஒருவர் எடுத்துக்கொள்வதால் இரத்த சர்க்கரையின் அளவு கூடுவதற்கு வாய்ப்புகள் மிகுதியாக உள்ளன. ஆதலால், ஒருவேளைக்குரிய முழு உணவையும் சமமாகப் பங்கிட்டு அவற்றைப் போதிய இடைவெளியில் அவ்வப்போது உட்கொள்ளப் பழகுதல் நன்மைப் பயக்கும். இதனால் சர்க்கரை அளவு கூடுவது தவிர்க்கப்படும். மேலும், குறையாமலும் இருக்கும். வேண்டுமெனில் இடையே நொறுக்குத் தீனியாக பழங்கள், நார்ச்சத்துள்ள பிஸ்கட், மோர், தயிர், காய்கறியுடன் கலந்த உப்புமா போன்றவற்றை உட்கொண்டு பசியைப் போக்கிக்கொள்ள வேண்டும்.

முக்கியமான உணவுகள்[தொகு]

நீரிழிவு நோய் உள்ளவர்கள் குறைவான மாவுச் சத்து, அதிகமான நார்ச்சத்து, தேவையான அளவு புரதம், உயிர்ச்சத்துகள் மற்றும் கனிமங்கள் அடங்கிய சரிவிகித உணவையே எப்போதும் உண்ண வேண்டும். இனிப்பு மற்றும் கொழுப்பு அதிகமுள்ள தின்பண்டங்களை தின்னுதல் கூடாது. போதிய இடைவேளையில்(ஐந்து வேளை)சிறிய அளவிலான உணவை உட்கொள்ள முயற்சித்தல் நல்லது.

தேன்[தொகு]

நீரிழிவு நோயாளிகள், செயற்கையான சர்க்கரைக்குப் பதிலாக தேவையான அளவு இயற்கை இனிப்பான தேனை உணவில் குறைந்த அளவில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நன்னீர்[தொகு]

நீரிழிவு வந்தவர்கள் நிறைய தண்ணீர், பச்சைக் காய்கறி மற்றும் பழச்சாறுகள் பருகுவதைப் பழக்கப்படுத்திக் கொள்ளுதல் நல்லது. இவர்கள் மது அருந்துதல் கூடாது.

அசைவ உணவு[தொகு]

இவர்கள் அசைவ உணவுகளில் மீன் மற்றும் கோழியிறைச்சியை அளவாக அவித்து உண்ணலாம்.பொரித்தல் அல்லது வறுத்தல் கூடாது.

முறையான உடற்பயிற்சி[தொகு]

நீரிழிவு நோயாளிகள் சரிவிகித உணவுமுறையைத் தவறாது கடைப்பிடித்திடுதல் வேண்டும். அதேசமயம், முறையான உடற்பயிற்சியையும் மேற்கொண்டு இரத்தத்தில் இன்சுலின் அளவைக் குறையாமல் காத்துக் கொள்ளவியலும்.[7]

நீரிழிவு நோய்க்குச் சிகிச்சை முறைகள்[தொகு]

நீரிழிவு நோய்க்கான இரண்டு விதமான சிகிச்சை முறைகள் இருக்கின்றன. ஒன்று, இயல்பு நிலைக்கு அருகாமையில் இரத்தத்தில் சக்கரையின் அளவைக் கட்டுப்படுத்தி வைத்துக்கொள்வதாகும். இரண்டாவது, நீரிழிவு நோயுடன் வாழ்வதாகும்.

நீரிழிவு நோய் வகை-1-க்கான சிகிச்சை முறைகள்[தொகு]

நீரிழிவு நோய் வகை-1 க்கான அடிப்படைச் சிகிச்சை முறைகள் பின்வருவனவற்றை உள்ளடக்கியதாகும்.

 • ஒரு நாளில் இன்சுலின் மருந்தை பல முறைகள் எடுத்துக்கொள்ளுதல்.
 • உணவு வேளைகளில் பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகளையும் மற்ற நேரங்களில் இன்சுலினை ஒரே சீராக வழங்கும் ஓர் உட்செலுத்தியைப் பயன்படுத்துதல்.
 • தொடர்ந்து இரத்தத்தில் சக்கரையின் அளவைக் கண்காணித்து வருதல்.
 • பரிந்துரைக்கப்பட்ட உணவுத் திட்டத்தை முறையாகக் கடைப்பிடித்தல்.
 • உடல்நலப் பராமரிப்புக்குழுக்கள் ஆகியவற்றுடன் கலந்தாலோசனை செய்தல்.

நீரிழிவு நோய் வகை-2 க்கான சிகிச்சை முறைகள்[தொகு]

 • ஆரோக்கியமான உணவு முறை
 • நாள்தோறும் எளிய உடற்பயிற்சி மேற்கொண்டு வருதல்.
 • உடற்பருமனைக் குறைத்தல்.
 • கணையத்தை நன்கு முடுக்கிவிட்டு இன்சுலின் சுரப்பை அதிகப் படுத்தவல்ல மருத்துவ சிகிச்சை முறைகளைப் பின்பற்றுதல்.[8]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

இவற்றையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீரிழிவு_நோய்&oldid=2305444" இருந்து மீள்விக்கப்பட்டது