பிறபொருளெதிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எதிர்ப்பான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இக்கட்டுரையின் தலைப்பில் அல்லது உள்ளடக்கத்தில் பொது பயன்பாட்டில் இல்லாத அல்லது புதிய தமிழ் சொற்கள் அல்லது சொற்தொடர்கள் உள்ளன. அவற்றுக்கு இணையான பொது பயன்பாட்டில் இருக்கும் அல்லது பொருள் இலகுவில் புலப்படக்கூடிய அல்லது எளிய சொற்கள் இருந்தால் தயவுசெய்து இங்கே தெரிவியுங்கள். நீங்களே கட்டுரையில் மாற்றங்களை ஏற்படுத்தி இங்கே விளக்கம் தந்தாலும் நன்றே.

ஒவ்வொரு பிறபொருளெதிரியும், குறிப்பிட்ட ஒரு பிறபொருளெதிரியாக்கியுடன், பூட்டும் சாவியும் பிணைவதுபோல் பிணையும்

பிறபொருளெதிரி (Antibody) என்பது முதுகெலும்பிகளில் உடலினுள்ளே வரும் பாக்டீரியா தீ நுண்மம் அல்லது வைரசு போன்ற நோயை உருவாக்கும் வெளிப் பொருட்களை அடையாளம்கண்டு, அவற்றை அழிக்கவோ அல்லது செயலற்றதாகவோ ஆக்குவதற்காக, நோய் எதிர்ப்பாற்றல் முறைமையால் பயன்படுத்தப்படும், குருதியிலும், வேறு உடல் திரவங்களிலும் காணப்படும் ஒரு வகைப் புரதம் ஆகும். இது Ig என சுருக்கமாகச் சொல்லப்படும் Immunoglobulin[1] எனவும் அழைக்கப்படும் Gamma Globulin வகைப் புரதமாகும். இவை இரத்த வெள்ளையணுக்களின் ஒரு விசேட பிரிவான பிளாசுமா கலங்கள் (Plasma cells) எனப்படும் இரத்த திரவவிழைய உயிரணுக்களால் உருவாக்கப்படும்.

இந்த மூலக்கூறின் பொதுவான அடிப்படை அமைப்பானது, இரண்டு பாரமான சங்கிலிகளையும், இரண்டு பாரமற்ற, இலகுவான சங்கிலிகளையும் கொண்டிருக்கும். பல வேறுபட்ட பாரமான சங்கிலிகளையும், அதனால் பல வேறுபட்ட பிறபொருளெதிரிகளையும் உடல் கொண்டிருக்கும். பாரமான சங்கிலிகளீன் அமைப்பைப் பொறுத்து, இவை வெவ்வேறு Isotype குழுக்களாக வகுக்கப்படும்.

பிறபொருளெதிரிகளின் பொதுவான அமைப்பு ஒன்றாக இருப்பினும், பிறபொருளெதிரியாக்கிகளுடன் பிணையும் பகுதியான, சங்கிலிகளின் நுனிப்பகுதியின் அமைப்பு ஒவ்வொரு தனி பிறபொருளெதிரியிலும் தனித்துவமானதாக வேறுபட்டு இருக்கும். அதனால் ஒவ்வொரு பிறபொருளெதிரியாக்கிக்குமான, பிறபொருளெதிரி ஒவ்வொன்றும் தனித்துவமான விசேட அமைப்பைக் கொண்டிருக்கும். இதனால் ஒவ்வொரு உடலிலும் மில்லியன்கள் அளவில் ஒன்றிலிருந்து ஒன்று முற்றாக வேறுபட்ட பிறபொருளெதிரிகள் காணப்படும். ஒரு குறிப்பிட்ட பிறபொருளெதிரி, குறிப்பிட்ட பிறபொருளெதிரியாக்கியுடன் மட்டுமே பிணையும்[2].

அடிக்குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிறபொருளெதிரி&oldid=3612630" இலிருந்து மீள்விக்கப்பட்டது