உடற் பயிற்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(உடற்பயிற்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

உடற் பயிற்சி என்பது உடல் நிலையும் நலத்தையும் மேம்படுத்தும் உடல் செயற்பாடுகள் ஆகும். நடத்தல், ஓடுதல், நீந்துதல், பனிச் சறுக்கல், மிதிவண்டி ஓட்டுதல், விளையாடுதல், நடனம் ஆடுதல், யோகாசனம் செய்தல், உடலுழைப்பு என எல்லாம் உடற் பயிற்சிகளே. இதய நோய், சர்க்கரை நோய், உடற்பருமன் போன்ற குறைகளை உடற்பயிற்சியினால் கட்டுப்படுத்த இயலும்.[1][2] உடற்பயிற்சியானது மன வளத்தை மேம்படுத்தி மன அழுத்தத்தை குறைத்து, தன்னம்பிக்கையை ஊட்டி, உடல் தோற்றத்தை மேம்படுத்துகின்றது.[3] குழந்தைக்களுக்கிடையே பெருகி வரும் உடற்பருமனை குறைக்க உடற்பயிற்சி அவசியம்[4][5][6] உடற்பயிற்சி மூலம் அசைவற்றிருக்கும் உறுப்புகளை, அல்லது போதிய அசைவின்றியிருக்கும் உறுப்புகளை சீரான இரத்தச் சுற்றோட்டத்துக்கு உட்படுத்தலாம்.

பயன்கள்[தொகு]

உடற்பயிற்சியின் போது இரத்தத்தில் கொழுப்பின் அளவு குறைகின்றது. உடற்பயிற்சி செய்யும் நேரம் அதிகரிக்கும் போது, கரையும் கொழுப்பின் அளவும் அதிகரிக்கின்றது. இதனால் உடலிலுள்ள கொழுப்பு வேகமாகக் கரைந்து உடலுக்குத் தேவையான சக்தி ஆகிறது. ஆகவே உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சி உதவுகின்றது. உடற்பயிற்சியில் ஈடுபடும் போது, இரத்த ஓட்டம் துரிதப்படுகின்றது. உடல் உஷ்ணமடைகின்றது. அதனால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து, கிருமிகள் அழிக்கப்படுகின்றன. உடலாரோக்கியம் உறுதிப்படுகின்றது. சுறுசுறுப்புடன் உடற்பயிற்சி செய்யும் போது உடல் உஷ்ணமாகி வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையும் செயலாற்றும் திறனும் அதிகரிக்கின்றன.

உடற்பயிற்சி மூலம் வெளியாகும் வியர்வை உடற் கழிவுகளை வெளிப்படுத்துவதில் முக்கிய பங்குவகிக்கின்றது. உடற்பயிற்சி மூலம் இரத்த ஓட்டம் துரிதப்படுத்தப்படுவதால், உடலுக்குச் சக்தி அதிகரிக்கின்றது.உடற்பயிற்சி செய்யும் போது நுரையீரல் வேகமாகச் சுருங்கி விரிவடைவதால், போதிய பயிற்சி பெற்று மற்ற நேரங்களிலும் திறமையாய் செயற்படுகிறது. இது உடல் எப்போதும் சுறுசுறுப்பாய் இருக்கப் பயன்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Stampfer MJ, Hu FB, Manson JE, Rimm EB, Willett WC; Hu; Manson; Rimm; Willett (2000). "Primary Prevention of Coronary Heart Disease in Women through Diet and Lifestyle". New England Journal of Medicine 343 (1): 16–22. doi:10.1056/NEJM200007063430103. பப்மெட் 10882764. 
  2. Hu FB, Manson JE, Stampfer MJ, Colditz G, Liu S, Solomon CG, Willett WC; Manson; Stampfer; Colditz; Liu; Solomon; Willett (2001). "Diet, lifestyle, and the risk of type 2 diabetes mellitus in women". The New England Journal of Medicine 345 (11): 790–797. doi:10.1056/NEJMoa010492. பப்மெட் 11556298. 
  3. "Exercise". medical-dictionary.thefreedictionary.com.
  4. "WHO: Obesity and overweight". who.int.
  5. American Association of Kidney Patients, "Physical Activity and Exercise: The Wonder Drug" Retrieved 29 November 2014
  6. The miracle drug. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உடற்_பயிற்சி&oldid=1905159" இருந்து மீள்விக்கப்பட்டது