உடலியக்க மருத்துவம்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபிற்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபிற்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபிற்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. "பிசியோதெரபி /இயன்முறை மருத்துவம்" என்பது இக்கட்டுரையின் மாற்றுத்தலைப்பாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உங்கள் கருத்துகளை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
| இயன்முறை மருத்துவம் Physical therapy / physiotherapy | |
|---|---|
உடற்பயிற்சி -தசைகளை பலம் பெற செய்யும் பயிற்சி முறைகள் |
முன்னுரை
[தொகு]பிசியோதெரபி /இயன்முறை மருத்துவம் (physical therapy, physiotherapy) முற்றிலுமாக மருத்துவத்துறை சார்ந்த மருந்தில்லா சிறப்பு மருத்துவ பிரிவு ஆகும். இயன்முறை மருத்துவம் என்பது வலி மற்றும் நாள்பட்ட செயல் இழந்த பாகங்களை இயக்க செய்யும் மருத்துவ முறை ஆகும். மனிதர்கள் வாழ்நாள் முழுமையும் தங்கள் உறுப்புகளின் இயக்கத்தையும் பயன்பாட்டையும் மீட்கவும், பராமரிக்கவும், மேம்படுத்தவும் உதவுகின்ற மருத்துவத்துறையாகும்.அடி , வீக்கம் , தசை முறிவு , சவ்வு முறிவு,விபத்து அல்லது சூழல் காரணமாக உறுப்புகளின் இயக்கமும் பயன்பாடும் பாதிக்கப்படும்போது அளிக்கப்படும் மருத்துவ முறைகளைக் கொண்டது.[1]
இம்மருத்துவம் வாழ்வின் தரத்தை அறியவும் கூடுதலாக்கவும் ஆய்வு செய்கிறது. இயக்கத்தை மேம்படுத்த, காயங்களை தவிர்த்திட, அடிபடும்போது காயத்தின் தீவிரத்தைக் குறைத்தல், ஊனத்தைச் சரிசெய்ய மற்றும் ஊனமுற்றவர் மீளவும் தமது வாழ்க்கைத்தரத்தை பெற்றிட வேண்டிய மருத்துவமுறைகளை குறித்து இம்மருத்துவம் அமைந்துள்ளது. அப்போது எழும் உடல் மற்றும் உளவியல், சமூகநலம் குறித்தும் கவனத்தில் கொள்கிறது. இம்மருத்துவமுறையில் இயங்கு மருத்துவர்கள், நோயாளிகள், பிற மருத்துவர்கள், குடும்பங்கள், நலம்விரும்பிகள் மற்றும் சூழ்ந்துள்ள சமூகம் முதன்மை பங்கு வகிக்கின்றனர்.[2] இயன்முறை மருத்துவம் (physical medicine)[3] என்பது நவீன உலகில் வளர்ந்து வரும் ஒரு சிறந்த சிறப்பு மருத்தவ துறை & மருத்துவ முறையாகும்.
விளக்கம்
[தொகு]
பிசியோதெரபி என்பது தசை சக்தி மற்றும் இயக்கங்கள் உடல் -இயக்கவியல், கை சிகிச்சை, உடற்பயிற்சி சிகிச்சை மற்றும் குறைந்த அதிர்வெண் மின்னோட்டம் (எலெக்ட்ரோதெரபி),மசாஜ் சிகிச்சை, ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் குறைபாடுகளை சரிசெய்து, நோயாளிகளின் இயக்கம் மற்றும் செயல்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் இது இணைந்த ஆரோக்கியமான மருத்துவ முறை ஆகும். நோயாளிகளின் உடல் பரிசோதனை, நோய் கண்டறிதல், முன்கணிப்பு மற்றும் உடல் பயிற்சி சிகிச்சை மூலம் நோயாளியின் தரத்தை மேம்படுத்துவதற்கு இயன்முறை மருத்துவம் பயன்படுத்தப்படுகிறது.[4]
சிகிச்சைகள்:
[தொகு]இயன்முறை சிகிச்சை ஒரு மருத்துவ கல்வி ஆகும். இது தசைகள், உடல் திறன் விளையாட்டு, நரம்பியல், காயம் பாதுகாப்பு, குழந்தைகள் நலன், இதயவியல் நுரையீரல், வயது மூப்பு, எலும்பியல், பெண்கள் ஆரோக்கியம், போன்ற பல சிறப்பு அம்சங்களைக் கொண்ட கல்வி. இது குறிப்பாக நரம்பியல் மற்றும் மறுவாழ்வுத் துறையில் வேகமாக வளர்ந்துவரும் சிகிச்சை முறை ஆகும். இயன்முறை மருத்துவத்தை வழங்குபவர் இயன்முறை மருத்துவர் (Physiotherapist or physical therapist) ஆவார். [5]
இளநிலை கல்விக்காண தகுதி :
[தொகு]| பாடங்கள் | |
|---|---|
| மேல்நிலை பள்ளியில் | கணிதவியல் ,இயற்பியல் ,வேதியியல், உயிரியல் அல்லது தாவரவியல் & விலங்கியல் |
இந்தியாவில்
[தொகு]இளநிலை இயன்முறை பட்டய படிப்பு:
[தொகு]தமிழ்நாட்டில் இயன்முறை சிகிச்சை (Physiotherapy) மாணவர்களின் கலந்தாய்வு மதிப்பெண் பட்டியலின் அடிப்படையில் அரசு நடத்துகிறத.நான்கு ஆண்டுகள் மற்றும் 12 மாதங்கள்.[6]
| ஆண்டு-1 | உளவியல், சமூகவியல், உடற்கூறியல், உடலியங்கியல்,அடிப்படை இயற்பியல் பாடங்களை கற்று தேர்வு எழுதவேண்டும். |
| ஆண்டு-2 | உயிர்விசையியல், பொதுமருத்துவம், நுண்ணுயிரியல், நோயியல், உடற்பயிற்சி சிகிச்சை-1, உடற்பயிற்சி சிகிச்சை-2 பாடங்களை கற்று தேர்வு எழுதவேண்டும். |
| ஆண்டு-3 | "மின்னாற்றல் சிகிச்சை-1, மின்னாற்றல் சிகிச்சை-2, இதயவியல், இயன்முறை மருத்துவத்திற்கான இதயவியல்,பொது உடல்நலவியல் பாடங்களை கற்று தேர்வு எழுதவேண்டும். |
| ஆண்டு-4 | எலும்பியல், நரம்பியல்,இயன்முறை சிகிச்சைக்கான நரம்பியல், இயன்முறை சிகிச்சைக்கான எலும்பியல் மறுவாழ்வு பாடங்களை கற்று தேர்வு எழுதவேண்டும். |
| ஆண்டு-5 | நான்காண்டு பாடங்களை தேர்ச்சி பெற்ற பின் கட்டாய சுழற்சி முறையில் ஆறு மாதங்கள் மருத்துவமனையில் எல்லாத் துறையிலும் பணிபுரியவேண்டும். |
முதுநிலை இயன்முறை பட்டய படிப்பு -இரண்டு வருடங்கள்:
[தொகு]| 1 | எலும்பியல் |
| 2 | நரம்பியல் |
| 3 | இதயவியல் |
| 4 | உடல் திறன் விளையாட்டு |
| 5 | பெண்ணோயியல் |
இயன்முறை முனைவருக்கான பட்டய படிப்பு:
[தொகு]| இயன்முறை சிகிச்சை ஆராய்ச்சிப் படிப்பு மற்றும் இயன்முறை சிகிச்சை தத்துவப் படிப்பாகும் | |
|---|---|
| PhD in PHYSIOTHERAPY) | |
| இது இயன்முறை சிகிச்சையைத் வளர்ச்சிக்கும், புதிய தத்துவ முறை உருவாக வழிவகுக்கிறது.[7] |
பிசியோதெரபி கல்லூரிகள்
[தொகு]- அரசு புனர்வாழ்வளிக்கும் மருத்துவ நிறுவனம், சென்னை.[8]
- அரசு பிசியோதெரபி கல்லூரி, திருச்சி.
- ஆதிபராசக்தி பிசியோதெரபி கல்லூரி, மேல்மருவத்தூர்
- சுவாமி விவேகானந்தா பிசியோதெரபி கல்லூரி, திருச்செங்கோடு.
- அப்பல்லோ பிசியோதெரபி கல்லூரி,ஹைதராபாத்.[9]
- ஸ்ரீ ராமகிருஷ்ண பிசியோதெரபி கல்லூரி, கோயம்புத்தூர்.[10]
- சேரன் பிசியோதெரபி கல்லூரி, கோயம்புத்தூர்.[11]
- விநாயக மிஷன் பிசியோதெரபி கல்லூரி, சேலம்.[12]
- ஆர்.வி.எஸ். பிசியோதெரபி கல்லூரி, கோயம்புத்தூர்.
- பிசியோதெரபி கல்லூரி, அகமதுநகர்.[13]
- மகாத்மா காந்தி பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி, கோட்டயம்.[14]
- கஸ்தூர்பா மருத்துவக் கல்லூரி, மணிபால்.
- அரசு மருத்துவக் கல்லூரி, நாக்பூர்
புனர்வாழ்வு
[தொகு]புனர்வாழ்வு என்பது நோயுற்ற பிறகு பயிற்சி மற்றும் சிகிச்சையின் மூலம் உடல், மனது மற்றும் சமூக அடிப்படையில் ஆரோக்கியமான அல்லது சாதாரண வாழ்க்கைக்கு ஒருவரை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கை. இதில் இயன்முறை மருத்துவம் பெரும் பங்கு வகிக்கிறது.[15]
மேற்கோள்
[தொகு]- ↑ "introduction".
- ↑ [http://www. https://www.iapmr.in}
- ↑ Oliver, Zayne (2021). "Essentials of Physical Medicine and Rehabilitation" (PDF). பிழை காட்டு: Invalid parameter "&r" in
<ref>tag. The supported parameters are: details, dir, follow, group, name. - ↑ "define".
- ↑ "types".
- ↑ "bpt eligibility" (PDF).
- ↑ "Ph.D. (Physiotherapy) Colleges in India | list of Doctor of Philosophy in Physiotherapy colleges in India". targetstudy.com. Retrieved 2026-06-10.
- ↑ "பிசியோதெரபி கல்லூரிகள்".
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-07-03. Retrieved 2018-04-25.
- ↑ "Principal Profile, Principal Desk, College of Physiotherapy, Sri Ramakrishna Institute of Paramedical Sciences,". www.sriramakrishnacollegeofphysiotherapy.com. Retrieved 2026-06-10.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-03-27. Retrieved 2018-04-25.
- ↑ "WELCOME TO VINAYAKA MISSION'S RESEARCH FOUNDATION". www.vinayakamission.com (in ஆங்கிலம்). Retrieved 2026-06-10.
- ↑ "Ahmedabad Physiotherapy College | Parul University Gujarat". www.paruluniversity.ac.in (in ஆங்கிலம்). Retrieved 2026-06-10.
- ↑ "SME | SCHOOL OF MEDICAL EDUCATION MAHATMA GANDHI UNIVERSITY". sme.edu.in. Retrieved 2026-06-10.
- ↑ "Government College of Rehabilitation Medicine, Chennai : Admission, Counselling, About, Reservation, Courses, Fees - Admission Physiotherapy". admissionphysiotherapy.com (in ஆங்கிலம்). Retrieved 2026-06-10.
வெளி இணைப்புகள்
[தொகு]- ஐரோப்பா: Regulated professions database – Physiotherapist, ஐரோப்பிய ஆணையம்
