உள்ளடக்கத்துக்குச் செல்

இரையகக் குடலியவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரையகக் குடலியவியலாளர்
தொழில்
பெயர்கள் மருத்துவர், சிறப்பு மருத்துவர்
வகை சிறப்புத்துறை
செயற்பாட்டுத் துறை மருத்துவம்
விவரம்
தேவையான கல்வித்தகைமை MBBS, MD
தொழிற்புலம் மருத்துவமனைகள், கிளினிக்

இரையகக் குடலியவியல் (Gastroenterology) என்பது மருத்துவத்தின் ஒரு பிரிவாகும், சமிபாட்டுத்தொகுதி, அதன் நோய்கள் பற்றிய கல்வியறிவு, பயிற்சி இப்பிரிவின் கீழ் வழங்கப்படுகின்றது. இப்பிரிவில் சிறப்புப் பயிற்சிபெற்ற மருத்துவர் இரையகக் குடலியவியலாளர் (gastroenterologist) என அழைக்கப்படுகின்றார்.[1][2][3]

வாயில் இருந்து குதம் வரையான இரையகக் குடலியப் பாதையில் ஏற்படும் சமிபாட்டுத்தொகுதி நோய்கள் பற்றிய சிறப்புப் பயிற்சியை மருத்துவத்தில் பட்டம் பெற்றவர்கள் மேலதிகமாகப் பெறுகின்றனர். அடிப்படை மருத்துவக் கல்வியின் காலம் நாடுகளைப் பொறுத்தவரை மாறுபடுகின்றது, இது பொதுவாக ஐந்து வருடம் தொடக்கம் எட்டு வருடங்கள் வரை நீடிக்கும். இந்த அடிப்படை மருத்துவக் கல்வியில் தேர்ச்சி பெற்று மருத்துவக்கலாநிதி (MBBS, MD) பட்டம் பெற்றவர்கள் மேலும் சிறப்பாக ஒரு குறிப்பிட்ட துறையில் பயிற்சி பெறுவதுண்டு. இரையகக் குடலியவியல் துறையில் பயிற்சி பெறும் ஒரு மருத்துவர் ஒருவருடம் உள்ளகப் பயிற்சிக் காலம் முடிவடைந்ததும் மேலும் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு சிறப்புப் பயிற்சியைத் தொடருவர். சில சந்தர்ப்பங்களில் ஒருவருடம் உள்ளகப் பயிற்சிக் காலத்தில் இருந்தே இரையகக் குடலியவியல் கற்கத் தொடங்குவதும் உண்டு, இச்சந்தர்ப்பத்தில் மேலும் இரண்டு வருடங்கள் மருத்துவர் பயிற்சி பெற வேண்டியிருக்கும். இரையகக் குடலியவியலில் அறுவைச்சிகிச்சை புரிவோர் இவற்றுள் உள்ளடங்க மாட்டார்கள், அறுவைச்சிகிச்சை பயிலுவது பிறிதொரு துறையாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "What is a Gastroenterologist?". American College of Gastroenterology (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-12-06.
  2. "Gastrointestinal Tract MeSH Descriptor Data". meshb.nlm.nih.gov. Retrieved 2022-12-12.
  3. "Digestive System MeSH Descriptor Data". meshb.nlm.nih.gov. Retrieved 2022-12-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரையகக்_குடலியவியல்&oldid=3768998" இலிருந்து மீள்விக்கப்பட்டது