உள்ளடக்கத்துக்குச் செல்

இளம் பெண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சிறுமி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இளம்பெண் (girl) என்பது மனிதரின் பெண் பாலினைக் குறிப்பதாகும், பொதுவாக ஒரு பிள்ளை அல்லது பருவ வயதுடையவர்களைக் குறிப்பது . முதிர் அகவையர்களைத் துல்லியமாகக் குறிக்க பெண் எனும் சொல் பயன்படுகிறது. இருப்பினும், பெண் என்ற சொல் இளம் பெண் உட்பட பிற அர்த்தங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது,[1] மேலும் சில சமயங்களில் மகள்,[2] அல்லது பெண் நணபருக்கு [சான்று தேவை] ஒத்த பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.  சில சூழல்களில், இளம்பெண் என்பது பெண்ணுக்கு மாற்றாகப் பயன்படுத்துவது இழிவானதாக கருதப்படலாம்.

ஒவ்வொரு சமூகத்திலும் பெண்களின் சமூக நிலை மற்றும் அவர்கள் நடத்தப்படும் விதமானது பெண்களின் உரிமைகளுடன் நெருக்கமாகத் தொடர்புடையது. சமூக நிலையில் கடைநிலையில் இருக்கும் கலாச்சாரத்தில் பெண்கள் தங்களது பெற்றோர்களுக்குத் தேவையற்றவர்களாகவே கருதப்படுகிறார்கள்.மேலும், பெணகளுக்கான உரிமைகள் வழங்குவதிலும் பாரபட்சம் காட்டப்படுகிறது.

சொற்பிறப்பியல்

[தொகு]

கிபி 1250 முதல் 1300 வரை நடுக்காலத்தில் பெண் என்ற ஆங்கிலச் சொல் முதன்முதலில் தோன்றியது. இது பண்டைய ஆங்கில வார்த்தையான ஜெர்லே ( கேர்லே அல்லது குர்லே என்றும் உச்சரிக்கப்படுகிறது) என்பதிலிருந்து வந்தது.[3] இதற்கு உடை அல்லது ஆடை எனப் பொருள்படும். சில இடங்களில் ஆகு பெயராக பயன்படுகிறது.[1] 1400 களின் பிற்பகுதி வரை, இந்த வார்த்தை இரு பாலின குழந்தை என்றும் 1500 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து 'பெண் குழந்தை' என்றும் அறியப்படுகிறது.[4]

பெண் எனும் சொல்லிற்கான பயன்பாடு

[தொகு]

பெண் என்ற சொல் சில சமயங்களில் வயது வந்த பெண்ணைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது, பொதுவாக இள வயது பெண்களை. இந்த பயன்பாடு தொழில்முறை அல்லது பிற முறையான சூழல்களில் இழிவானதாகவோ அல்லது அவமரியாதைக்குரியதாகவோ கருதப்படலாம், அதே போல் வயது வந்த ஆண்களுக்கு சிறுவன் என்ற சொல்லைப் பயன்படுத்துவது இழிவாகக் கருதப்படலாம். எனவே, இந்த பயன்பாடு பெரும்பாலும் தவிர்க்கப்பட வேண்டியதாகக் கருதப்படுகிறது.[1]

வரலாறு

[தொகு]

உலக வரலாற்றில் இளம் பெண்களின் நிலை பரவலாக அனைத்துக் கலாச்சாரத்திலும் பெண்களின் நிலையுடன் நெருக்கமாக தொடர்புடையது. ஆண்களுக்கு நிகராக பெண்கள் மதிக்கப்படும் இடங்களிலும், அவர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் இடங்களிலும் பெண்கள் மகிழ்ச்சியாக உணர்கிறார்கள்.

பெண்கல்வி

[தொகு]

பெண்களுக்கு கல்வி வழங்கப்படும் முக்கியத்துவமானது ஆண்களை ஒப்பிடுகையில் குறைவாகும். ஐரோப்பாவில், அச்சு இயந்திரம் மற்றும் கிறித்தவச் சீர்திருத்த இயக்கம் ஆகியவற்றின் பரவலாக்கத்திற்கு முன்னர் பெண்கள் கல்வியறிவு பெறுவது என்பது அரிதானதாகவே இருந்தது. இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் பெண்கள் கல்வியறிவு பெறக்கூடாடது என்பதற்கு விதிவிலக்காக இருந்த குறிப்பிடத்தகுந்த பெண் ஆவார். இவரது தாய் ஆன் பொலின் துக்கிலிடப்பட்ட பின்னர் அரியணைக்கான வாரிசாக இருந்த இவர் அரசியல் சூழ்ச்சியால் ஆபத்தான நிலையில் இருந்தார்.மேலும் முறைகேடாகப் பிறந்தவராக கருதப்பட்டார். இவரது கல்வி பெரும்பாலும் இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியால் புறக்கணிக்கப்பட்டது. இவரது மரணத்திற்குப் பிறகு அவரது மனைவியான கேத்தரின் பார், எலிசபெத்தின் உயர் அறிவுத்திறனில் ஆர்வம் காட்டினார், மேலும் எலிசபெத்தின் 9 வயதில் இருந்து அவருக்கு மனநிறைவு ஏற்படக்கூடிய கல்வியை வழங்குவதற்கான முடிவை ஆதரித்தார்.[5] அந்த சமயத்தில் உயர்குடி ஆண்களுக்கு இணையான கல்வியறிவைப் பெற்றார். இவர் இலத்தீன், கிரேக்கம், எசுப்பானியம், பிரெஞ்சு, தத்துவவியல், வரலாறு, கணிதம் மற்றும் இசை ஆகியவற்றில் கல்வி கற்றார். எலிசபெத்தின் உயர்தரக் கல்வி அவர் வெற்றிகரமான மன்னராக வளர உதவியது என்று கருதப்படுகிறது.[6]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
பெண்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Dictionary.com, "Girl". Retrieved January 2, 2008.
  2. "Girl - Definition and More from the Free Merriam-Webster Dictionary". Merriam-webster.com. 2012-08-31. பார்க்கப்பட்ட நாள் 2014-06-04.
  3. Webster's Revised Unabridged Dictionary (1913), girl பரணிடப்பட்டது 2009-01-22 at the வந்தவழி இயந்திரம், retrieved 2 January 2008
  4. Online Etymology Dictionary, girl, retrieved 2 January 2008
  5. The childhood and education of Elizabeth I (Radio Broadcast). August 30, 2012. Archived from the original on 2012-11-16.
  6. Briscoe, Alexandra (2011-02-17). "BBC - History - Elizabeth I: An Overview". பிபிசி (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இளம்_பெண்&oldid=3774928" இலிருந்து மீள்விக்கப்பட்டது