ஆண் (மனிதர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மைக்கலாஞ்சலோவின் டேவிட் மேல்நாட்டுக் கலையில் இளமையான ஆண் அழகனுக்கு உரிய ஒரு வடிவத்தை இது காட்டுகிறது.

இக் கட்டுரை மனித இனத்தின் வளர்ந்த ஆண் பாலாரைப் பற்றியது. சிறுவயது ஆண்பால் மனிதர்களைப் பொதுவாகச் சிறுவன், பையன் போன்ற சொற்களால் குறிப்பிடுவது வழக்கம். வளர்ந்த ஆண்களைக் குறிப்பிடுவதற்குப் தமிழ்ப் பேச்சு வழக்கில் ஆம்பளை, ஆம்பிளை போன்ற சொற்களைப் பயன்படுத்துவர். ஆண் என்னும் சொல், வளர்ந்த ஆண் மனிதரை மட்டுமன்றி, பிற ஆண்பால் உயிரினங்களைக் குறிக்கவும், மனித இனத்தில் [[வயது] வேறுபாடில்லாமல் எல்லா ஆண்களையும் குறிக்கவும் கூடப் பயன்படுகின்றது. ஆணுக்கு உரிய இயல்புகளைப் பொதுவாக ஆண்மை என்னும் சொல்லால் குறிப்பர்.

ஆண்பால் மனிதன், சிறுவன் நிலையைக் கடந்து பராயம் அடையும் போது அவன் ஆண் எனப்படுகிறான். ஆணுக்குரிய பாலியல் இயல்புகளை அவன் அடைந்துவிடுகிறான்.

உயிரியலும், பாலும்[தொகு]

மனிதர்களில் பால் அடிப்படையிலான ஈருருத்தோற்ற இயல்புகள் காணப்படுகின்றன. இவற்றுட் பல நேரடியான இனப்பெருக்கத் தேவைகள் தொடர்பானவையாக இல்லாவிட்டாலும், பாலியல் கவர்ச்சிக்கு இவ்வியல்புகள் பல உதவுகின்றன எனலாம். மனிதர்களில் பாலியல் ஈருருத்தோற்றத்தின் வெளிப்பாடுகள் பெரும்பாலும், உயரம், நிறை, உடற்கட்டு என்பவை சார்ந்தனவாக உள்ளன. இது மிகவும் பொதுமைப் படுத்தப்பட்ட ஒரு கூற்று. எல்லா வேளைகளிலும் இது சரியாக இருக்கும் என்றில்லை. எடுத்துக்காட்டாக, ஆண்கள் பொதுவாகப் பெண்களிலும் உயரமானவர்கள் எனலாம். ஆனால் எல்லா ஆண்களும் எல்லாப் பெண்களிலும் உயரமானவர்கள் அல்ல.

மனிதர்களில் ஆண்களுக்குரிய துணைப் பாலியல் இயல்புகள்:

இனப்பெருக்க உறுப்புக்கள்[தொகு]

ஆணுக்குரிய பாலுறுப்புக்கள், இனப்பெருக்கத் தொகுதியின் பகுதிகள் ஆகும். இவற்றுள், ஆணுறுப்பு, விதைகள், விந்துக் குழாய், விந்துச் சுரப்பி என்பன அடங்குகின்றன. ஆண் இனப்பெருக்க உறுப்புக்களின் வேலை, விந்துக்களை உண்டாக்கி அவற்றைப் பெண்ணின் இனப்பெருக்க உறுப்புக்களுள் அனுப்பி வைப்பதே. பெண்ணின் உடலுக்குள் செல்லும் விந்து, பெண் முட்டையுடன் கலந்து கருவாகிக் குழந்தையாக வளர்கிறது. கரு வளர்ச்சிக் காலத்தில் ஆண்களின் இனப்பெருக்க உறுப்புக்களுக்கு எவ்வித பங்களிப்பும் கிடையாது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்_(மனிதர்)&oldid=2303067" இருந்து மீள்விக்கப்பட்டது