இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
முதலாம் எலிசபெத்
இங்கிலாந்தினதும், அயர்லாந்தினதும் அரசி (more...)
முதலாம் எலிசபெத் , "டார்ன்லி உருவப்படம்", c. 1575
முதலாம் எலிசபெத் , "டார்ன்லி உருவப்படம்", c. 1575
ஆட்சி 17 நவம்பர் 1558 – 24 மார்ச் 1603
முடிசூடல் 15 ஜனவரி 1559
முன்னிருந்தவர் முதலாம் மேரி
பின்வந்தவர் முதலாம் ஜேம்ஸ்
வேந்திய மரபு டியூடர் இல்லம்
தந்தை எட்டாம் ஹென்றி
தாய் ஆன் போலீன்
பிறப்பு 7 செப்டெம்பர் 1533
கிரீனிச், இங்கிலாந்து
இறப்பு 24 மார்ச்சு 1603(1603-03-24) (அகவை 69)
ரிச்மண்ட், இங்கிலாந்து
அடக்கம் வெஸ்ட்மின்ஸ்டர் குருமடம்


முதலாம் எலிசபெத் (7 செப்டெம்பர் 1533 – 24 மார்ச் 1603) இங்கிலாந்தின் அரசியாகவும், 1558 நவம்பர் 17 முதல் இறக்கும் வரை அயர்லாந்தினதும் அரசியாகவும் இருந்தார். கன்னி அரசி, குளோரியானா அல்லது நல்ல அரசி பெஸ் என்றும் அழைக்கப்பட்ட இவர் டியூடர் வம்சத்தின் ஐந்தாவதும், கடைசியுமான ஆட்சியாளர் ஆவார். எட்டாம் ஹென்றியின் மகளான இவர் இளவரசியாகவே பிறந்தார். ஆனால் இவரது தாய் ஆன் போலீன், எலிசபெத் பிறந்த மூன்றாவது ஆண்டே மரண தண்டனை விதித்துக் கொல்லப்பட்டதுடன் எலிசபெத் முறையின்றிப் பிறந்தவராகவும் அறிவிக்கப்பட்டார். இவரது சகோதரர் ஆறாம் எட்வார்ட் எலிசபெத்தை வாரிசு வரிசையில் இருந்து நீக்கிவிட்டார். எனினும் அவருடைய விருப்பம் புறந் தள்ளப்பட்டதுடன், 1558 ஆம் ஆண்டில் எலிசபெத் தனது அரைச் சகோதரியான கத்தோலிக்க மேரியைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தார். மேரியின் ஆட்சிக் காலத்தில் புரட்டஸ்தாந்தக் கலகக் காரருக்கு உதவினார் என்னும் ஐயப்பாட்டின் பேரில் எலிசபெத் ஓராண்டு சிறையிலும் இருந்தார்.

முதலாம் எலிசபெத் நல்ல ஆலோசனைகளின் பேரில் ஆட்சி நடத்தியதுடன், பேர்க்லேயின் பாரனான வில்லியம் சிசில் என்பவரின் தலைமையிலான ஆலோசனைக் குழுவின் வழிகாட்டல்களில் பெரிதும் தங்கியிருந்தார். அரசியானதும் அவர் செய்த முதல் வேலை, ஆங்கிலேயப் புரட்டஸ்தாந்தத் திருச்சபையை நிறுவ ஆதரவு அளித்ததாகும். எலிசபெத்தே அதன் உயர் ஆளுனராகவும் இருந்தார். எலிசபெத் திருமணம் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நாடாளுமன்றம் பல வேண்டுகோள்களை விடுத்தும் அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. இதற்கான காரணங்கள் பற்றிப் பல கருத்துக்கள் நிலவியபோதும், உண்மையான காரணம் தெரியவில்லை.