பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெரூசலம் நகரின் வாயிலருகே இருக்கும் பிள்ளைகள்
2 வது நூற்றாண்டின் ரோமானிய கலைப்படைப்பு: சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த பந்து விளையாட்டுக்கள்.

உயிரியல் ரீதியாக, ஒரு பிள்ளை அல்லது பிள்ளைப் பருவம் என்பது மனிதனின் பிறப்புக்கும், பருவமடைந்த நிலைக்கும் இடையேயுள்ள ஒரு வளர்ச்சி நிலை ஆகும். இது ஆண், பெண் ஆகிய இரு பாலருக்கும் பொதுவானதாகும்.[1][2] இதனை, குழந்தைக்கும் (infant), பருவமடைந்த நிலைக்கும் இடையிலான வளர்ச்சி நிலை எனவும் குறிப்பிடலாம். குழந்தை, பிள்ளை ஆகிய இரு சொற்களும் சரியான வரயறையின்றிப் பயன்படுத்தப்படுகின்றன.

பிள்ளைகள் தங்கள் பெற்றோருடன் எந்த வயதிலும் மகன்களாகவும் அல்லது மகள்களாகவும்[3] வாழ்கின்றனர். இவர்கள், ஒரு குலத்திலோ, அல்லது ஒரு குழுவிலோ, அல்லது ஒரு இனத்திலோ, அல்லது ஒரு மதத்திலோ உறுப்பினராக இருப்பர். குழந்தை என்றால் பிறக்காத மற்றும் கரு நிலையில் உள்ள சிசுவையும் குறிப்பதாக சில ஆங்கில வரையறைகள் பதிவுசெய்கின்றன[4].

ஐக்கிய நாடுகள் அவையினால் முற்படுத்தப்பட்ட குழந்தைகள் உரிமைகளுக்கான உடன்படிக்கையின்படி, குழந்தை எனப்படுவது, 18 வயதுக்குக் குறைவான ஒரு மனிதர்[5] ஆகும். இக்கருத்து 194 நாடுகள் பங்கு கொண்ட மாநாட்டில், 192 நாடுகளால் ஏற்றுக்கொண்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தாவரம் மற்றும் விலங்குகளில் பெயர்ப் பயன்பாடு[தொகு]

தமிழில் பிள்ளை என்ற சொல் தென்னை போன்ற இளம் தாவரங்களையும், கீரி போன்ற விலங்குகளின் குட்டிகளையும் குறிப்பிடப் பயன்படுத்தப்படுவதுண்டு.

குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளும், ஆதரவுகளும்[தொகு]

"இயற்கையின் குழந்தை" அல்லது "அறுபதுகளின் குழந்தை"[6] போன்றவற்றில் குறிப்பிடப்படுவது போல் ஒரு குறிப்பிட்ட நேரம், இடம் அல்லது சூழ்நிலை ஆகியவற்றால் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவதாக அறியப்பட்டுள்ளது.

பல சமூகப் பிரச்சினைகள் குழந்தைகளை பாதிக்கின்றன. அவற்றுள் சில:

 • குழந்தைப் பருவக் கல்வி
 • குழந்தைகளைக் கொடுமைப்படுத்துதல்
 • வறுமை நிலையில் உள்ள குழந்தைகள்
 • செயலிழந்த குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகள்
 • குழந்தைகள் உழைப்பு
 • பட்டினி, மற்றும்
 • வீடில்லாத குழந்தைகள் போன்றவை

குழந்தைகளுக்கு ஆதரவாக உள்ள(வை)வர்கள்:

 • குழந்தைகளின் பெற்றோர்கள்,
 • குழந்தைகளை வளர்ப்பவர்கள்,
 • குழந்தைப் பாதுகாவலர்கள்
 • பகல் நேரப் பராமரிப்பு மையங்கள்

வளர்ச்சி[தொகு]

ஒவ்வொரு குழந்தையும் சமூக வளர்ச்சியின் பல நிலைகளையும் கடந்து வளர்கிறது. ஒரு சிசு அல்லது குழந்தை தனியாக விளையாடுவதை மிகவும் சந்தோஷமாக அனுபவிக்கிறது. தன் பாதையில் மற்றொரு குழந்தை குறுக்கிட்டால், அக்குழந்தையை உடல் ரீதியாக தாக்கவோ அல்லது வெளியேற்றவோ முற்படுகிறது. பின்னர், மற்றொரு குழந்தைடன் விளையாடவும், படிப்படியாக பொருட்களைப் பகிர்ந்து கொள்ளவும், திருப்பங்களை ஏற்கவும் கற்றுக்கொள்கிறது. இறுதியில், இக்குழு மூன்று அல்லது நான்கு குழந்தைகள் என பெரியதாக வளர்கிறது. அக்குழந்தை மழலையர் பள்ளியில் நுழைகையில்,[7] தன் வயதொத்த குழந்தைகளுடன் எளிதாகச் சேரவும், குழு அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும் கற்றுக்கொள்கிறது.

அவதானக் குறை மிகையியக்க குறைபாடு மற்றும் கற்றல் குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு சமூக திறன்களை வளர்த்துக்கொள்ள கூடுதல் உதவிகள் தேவைப்படலாம். அவதானக் குறை மிகையியக்க குறைபாடுள்ள குழந்தைகள், மனமுடைந்த நிலையில் தன் வயதொத்த குழ்ந்தைகளுடன் குறைவான பழகுதலையும், உறவுகளையும், புரிதல்களையும் பெற்றிருப்பர். எதிலும் குறைவான அளவு கவனத்தைச் செலுத்தும் குழந்தைகள் தங்கள் சூழலில் சமூக நல்லுறவுகளைப் பெற்றிருப்பதில்லை. அவர்களுக்கு அனுபவத்தின் மூலம் சமூக திறன்களைக் கற்றுக் கொள்வது கடினமாக உள்ளது.[7]

இனப் பெயர்[தொகு]

இது தவிர பிள்ளை என்பது தமிழ் நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் காணப்படும் ஒரு இனப் பெயராகவும் உள்ளது. சோழிய வெள்ளாளர், இசை வெள்ளாளர் போன்றோர் தங்கள் பெயருக்குப் பின் பிள்ளை என்ற பட்டத்தை சேர்த்துக் கொண்டுள்ளார்கள். இதை அவர்கள் மரியாதைக்குரியதாகக் கருதினர்கள். மற்றவர்கள், இவர்களின் பெயருடன் இனப் பெயரையும் சேர்த்து பிள்ளைவாள் என்றும் விளிப்பதுண்டு. பழங்கால இலக்கியங்களிலும், திரைப்படங்களிலும் கூட இந்த பிள்ளை என்ற பெயர் அதிகம் பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது. பிள்ளைமார் என்றும் அழைப்பது உண்டு, நாமதாரி பிள்ளைமார், இல்லத்துப் பிள்ளைமார், கோட்டைப் பிள்ளைமார் என சில சமூகங்களும் இருக்கின்றன.

பிள்ளை இறப்பு[தொகு]

2012ஆம் ஆண்டில் உலக சராசரி குழந்தை இறப்பு விகிதம்.[8]

இங்கிலாந்தில் 7 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகள் நான்கு வயதிற்கு முன்பே இறந்தன. குழந்தைகள் பெறுதல் மற்றும் பராமரிப்பில் போதிய விழிப்புணர்வு இல்லாதிருந்ததே இதற்குக் காரணம் ஆகும். இதனால், இங்கிலாந்தில் 7 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மனிதனின் சராசரி ஆயுட்காலம் சுமார் 35 ஆண்டுகளாக இருந்தது.[9]

ஆனால் தொழில் புரட்சியின் போது, குழந்தைகளின் ஆயுட்காலம் திடீரென்று அதிகரித்தது.[10]

மக்கள்தொகை மற்றும் சுகாதார வல்லுனர்களின் கருத்துப்படி 1990 களில் இருந்து குழந்தைகளின் இறப்பு விகிதம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. உலகளவில், 1990 ஆம் ஆண்டில் 12.6 மில்லியனுக்கும் குறைவான குழந்தைகளே இறந்துள்ளனர். 2012ல் 6.6 மில்லியன் குழந்தை இறப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது இறப்பு விகிதம் குறைந்துள்ளது. குழந்தை இறப்பு விகிதம் 1990ல் 1,000 பிறப்புக்களில் 90 இறப்புகளாக இருந்தது. 2012 இல் 1,000 பிறப்புக்களில் 48ஆக குறைந்துள்ளது. உலகின் சராசரி குழந்தை இறப்பு விகிதம் 1,000 பிறப்புக்களில் 48 இறப்புகள். ஆப்பிரிக்காவில் சஹாரா பகுதியில் சராசரி குழந்தை இறப்பு விகிதம் 1,000 பிறப்புக்களில் 98 இறப்புகள். இது உலகின் சராசரி குழந்தை இறப்பு விகிதத்தை விட மிக அதிகம்.[8]

கல்வி[தொகு]

மூலக் கட்டூரை: கல்வி

பொதுவாகக் கல்வி என்பது, அறிவு, பொது அறிவைப் பெறுதல், பகுத்தறிதல், காரணம் அறியும் திறனை வளர்த்தல், நடுநிலை வகித்தல், வாழ்வில் அறிவார்ந்த முதிர்ச்சியடைதல்[11] போன்றவற்றில் ஒன்றைத் தனித்தோ அல்லது ஒன்றுக்கு மேலானவற்றின் தொகுப்பையோ குறிக்கும். முறையான கல்வி பெரும்பாலும் பள்ளிகள் மூலம் நடைபெறுகிறது. சில நாடுகளில் கல்விக்கான உரிமை அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உலக அளவில், ஐக்கிய நாடுகள் சபையின் 1966 ஆம் ஆண்டின் சர்வதேச உடன்படிக்கையின்படி, பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் மீதான 13 வது சட்டப்பிரிவு,[12] அனைவருக்கும் கல்விக்கான உரிமையை அங்கீகரிக்கிறது.

பெரும்பாலான இடங்களில், கல்வி என்பது ஒரு குறிப்பிட்ட வயது வரை கட்டாயமாக இருக்கிறது, ஆனால் பள்ளிக்கு வருகை புரிவது கட்டாயமாக்கப்படவில்லை. மாறாக, வீட்டையே பள்ளிகளாகவோ அல்லது மின்-கற்றல் முறையில் கற்பதையோ சில அதிகார எல்லைகளில் ஏற்புடைய கல்வி முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இடைநிற்றல்[தொகு]

சில நாடுகளில் உள்ள குழந்தைகள் (குறிப்பாக ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில்) பெரும்பாலும் பள்ளியை விட்டு விலகுகின்றனர் அல்லது குறுகிய காலத்திற்கு மட்டுமே வகுப்பறை நிகழ்வுகளில் கலந்து கொள்கின்றனர். இந்நிகழ்வு இடைநிற்றல் எனப்படுகிறது. 2011 ல் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் வெளிடிட்டுள்ள தரவுகளின்படி, 57 மில்லியன் குழந்தைகள் பள்ளியைவிட்டு விலகி இடைநிற்றல் பட்டியலில் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க குழந்தைகளில் 20% க்கும் அதிகமானவர்கள் ஆரம்பப்பள்ளியில் கலந்துகொள்ளாத பள்ளி செல்லாக் குழந்தைகளாகவும்,[13] இடைநின்றோராகவும் இருப்பதாக தரவுகள் கூறுகின்றன.

இடைநிற்றலுக்கான காரணிகள்[தொகு]

உலகெங்கும் நடைபெற்று வரும் போர்முறைகளால் 28 மில்லியன் குழந்தைகளின் கல்வி தடை பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் அவையின் அறிக்கை தெரிவிக்கிறது. இதற்கு போர்க்காலங்களில் ஏற்படும் பாலியல் வன்முறைகள் மற்றும் பள்ளிகள் மீதான தாக்குதல்கள்[14] ஆகியவை காரணங்களாகக் கருதப்படுகின்றன.

குழந்தைகளின் பள்ளிசெல்லா நிலை மற்றும் இடைநிற்றல் போன்றவற்றிற்கான பிற பொதுக் காரணிகள்:[15][16]

வறுமை குழந்தைத் தொழிலாளர் சமூக மனப்பான்மை பள்ளிக்கும் வீட்டுக்கும் இடயேயுள்ள தூரம்

2017 ஆம் ஆண்டில் பேராசிரியர் ஆண்ட்ரே சிம்பியனின் (Andrei Cimpian) ஆய்வின்படி ஆறு வயதிற்குட்பட்ட பெண்கள் தாங்கள் "ஒரு மேதை" என்று நினைக்கின்றனர். இப்போக்கு ஆண்களிடம் குறைவாக உள்ளது. இந்த ஆய்வு பாலின மாதிரியான எழுச்சிகள் அதிகரிப்பதை உறுதிப்படுத்துகிறது.[17]

குழந்தைகள் மீது மனப்பான்மை[தொகு]

உலகெங்கிலும் வெவ்வேறு கலாச்சாரங்களில் குழந்தைகளுக்கு எதிரான சமூக மனப்பான்மைகள் வெவ்வேறு விதமாக மாறுபடுகின்றன. காலப்போக்கில், இந்த மனப்போக்குகள் சிறிது சிறிதாகக் குழந்தைகளுக்குச் சார்பான சமூக மனப்பான்மைகளாக மாறி வருகின்றன.

1988ம் ஆண்டு, மேற்கொள்ளப்பட்ட குழந்தைகளை மையப்படுத்தும் மனப்பான்மை பற்றிய ஐரோப்பிய ஆய்வு, இத்தாலியில் குழந்தைகளை மையப்படுத்தும் மனப்பான்மை அதிகமாக உள்ளதெனவும், நெதர்லாந்தில் குறைவாக உள்ளதெனவும், ஆஸ்திரியா, கிரேட் பிரிட்டன், அயர்லாந்து மற்றும் மேற்கு ஜேர்மனி போன்ற நாடுகளில் இடைநிலைத்தன்மையில் உள்ளதெனவும், குறிப்பிடுகிறது.[18]

மனித வரலாற்றில் குழந்தைத் திருமணம் என்பது பொதுவானது. தற்பொழுது குழந்தை திருமண விகிதம் நைஜரில் 75% மத்திய ஆபிரிக்க குடியரசு மற்றும் சாட் ஆகிய நாடுகளில் 68%, பங்களாதேஷில் 66%, மேலும் இந்தியாவில் 47% ஆகும்.[19]

தற்காலத்தில், குழந்தைகள் மீது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் குழந்தைகளை இழித்தல் போன்றவற்றிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் ஒரு முக்கியமான இலக்காகக் கருதப்படுகிறது. பின்வரும் வன்கொடுமைகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம்.

 • குழந்தைத் தொழிலாளர்
 • குழந்தை விபச்சாரம்
 • குழந்தை ஆபாசம்
 • குழந்தைகளின் இராணுவ பயன்பாடு
 • சட்டவிரோத குழந்தை தத்தெடுப்பு
 • குழந்தைக் கடத்தல்
 • குழந்தை விற்பனை
 • குழந்தைகளுடன் இழிதொடர்பு கொள்ளல் 
 • குழந்தைப் பாலியல் துஷ்பிரயோகம் ஆகியவை

இந்த தீய செயல்களிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாக்க பல சர்வதேச அமைப்புகளும், கருவிகளும், குழுமங்களும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை:

 • குழந்தை தொழிலாளர்களின் மோசமான படிவங்களை ஒழிக்கும் மாநாடு
 • குறைந்தபட்ச வயது மாநாடு, 1973
 • குழந்தைகள் விற்பனையில் விருப்ப நெறிமுறை, குழந்தை விபச்சாரம் மற்றும் குழந்தை ஆபாசம் பாலியல் சுரண்டல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எதிரான குழந்தைகளின் பாதுகாப்பு பற்றிய ஐரோப்பிய  கழகம்
 • ஆயுத  முரண்பாட்டுச் சண்டையினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் ஈடுபாடு மற்றும் விருப்ப நெறிமுறை
 • ஹேக் மகவேற்பு தனதாக்கல் மாநாடு
 • ஐரோப்பிய நாடாளுமன்றம் 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ம் நாள் இயற்றிய ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தரவு மற்றும் 2011/92 / ஐரோப்பிய ஒன்றியம் எனும் சட்டமானது. இது குழந்தைகள் மீது செயல்படுத்தப்படும் பாலியல் ஆபாசங்களையும், குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்களையும் எதிர்க்கிறது.[20]

உறவுத் தொடர்பு[தொகு]

இக்கட்டுரை இள வயது மனிதர் தொடர்பாக எழுதப்பட்டுள்ளது. சட்டப்படி, பராயம் அடைந்தவர்களாகக் கொள்ளப்படும், 18 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்கள் பிள்ளைகள் எனக் கணிக்கப்படுவார்கள். இச் சொல் ஒரு சிறுவன் அல்லது சிறுமியின் பெற்றோருடனான உறவுத் தொடர்பைக் குறிக்கவும் பயன்படுகின்றது.

மேலும் பார்க்க[தொகு]

படத்தொகுப்பு[தொகு]

மேற்கோள்கள்:[தொகு]

 1. "Child". TheFreeDictionary.com. 5 January 2013 அன்று பார்க்கப்பட்டது. External link in |publisher= (உதவி)
 2. "Child". Oxford University Press. 21 ஆகஸ்ட் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 5 January 2013 அன்று பார்க்கப்பட்டது. External link in |publisher= (உதவி)
 3. "For example, the US Social Security department specifically defines an adult child as being over 18". Ssa.gov. 9 October 2013 அன்று பார்க்கப்பட்டது.
 4. See Shorter Oxford English Dictionary 397 (6th ed. 2007), which's first definition is "A fetus; an infant;...". See also ‘The Compact Edition of the Oxford English Dictionary: Complete Text Reproduced Micrographically’, Vol. I (Oxford University Press, Oxford 1971): 396, which defines it as: ‘The unborn or newly born human being; foetus, infant’.
 5. "Convention on the Rights of the Child" பரணிடப்பட்டது 31 அக்டோபர் 2010 at the வந்தவழி இயந்திரம் The Policy Press, Office of the United Nations High Commissioner for Human Rights
 6. "American Heritage Dictionary". 7 December 2007. 29 December 2007 அன்று மூலம் பரணிடப்பட்டது.
 7. 7.0 7.1 "Socialization stages". Childdevelopmentinfo.com. 28 மார்ச் 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 9 October 2013 அன்று பார்க்கப்பட்டது.
 8. 8.0 8.1 Infant Mortality Rates in 2012 பரணிடப்பட்டது 14 சூலை 2014 at the வந்தவழி இயந்திரம், ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம், 2013.
 9. W. J. Rorabaugh, Donald T. Critchlow, Paula C. Baker (2004). "America's promise: a concise history of the United States". Rowman & Littlefield. p.47. ISBN 0-7425-1189-8
 10. "Modernization - Population Change". Encyclopædia Britannica.
 11. "Education | Define Education at Dictionary.com". Dictionary.reference.com. 3 August 2014 அன்று பார்க்கப்பட்டது.
 12. ICESCR, Article 13.1
 13. "Out-of-School Children Initiative | Basic education and gender equality". UNICEF. 6 ஆகஸ்ட் 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 3 August 2014 அன்று பார்க்கப்பட்டது.
 14. "BBC News - Unesco: Conflict robs 28 million children of education". Bbc.co.uk. 1 March 2011. 3 August 2014 அன்று பார்க்கப்பட்டது.
 15. "UK | Education | Barriers to getting an education". BBC News. 10 April 2006. 3 August 2014 அன்று பார்க்கப்பட்டது.
 16. Melik, James (11 October 2012). "BBC News - Africa gold rush lures children out of school". Bbc.com. 3 August 2014 அன்று பார்க்கப்பட்டது.
 17. Gallagher, James (2017-01-27). "Girls feel 'less talented' by age six" (in en-GB). BBC News. http://www.bbc.com/news/health-38717926. 
 18. "Rachel K. Jones and April Brayfield, Life's greatest joy?: European attitudes toward the centrality of children. Social Forces, Vol. 75, No. 4, Jun 1997. 1,239-69 pp. Chapel Hill, North Carolina". Popindex.princeton.edu. 6 அக்டோபர் 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 9 October 2013 அன்று பார்க்கப்பட்டது.
 19. "Child brides around the world sold off like cattle". USA Today. 8 March 2013. http://www.usatoday.com/story/news/world/2013/03/08/child-brides-sold/1972905/. 
 20. Official Journal of the European Union
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிள்ளை&oldid=3688751" இருந்து மீள்விக்கப்பட்டது