தென்னை
Coconut புதைப்படிவ காலம்: Early Eocene – Recent | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | |
உயிரிக்கிளை: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
இனக்குழு: | |
பேரினம்: | |
இனம்: | C. nucifera
|
இருசொற் பெயரீடு | |
Cocos nucifera L. | |
Possible native range prior to domestication | |
வேறு பெயர்கள் [1] | |
|
இலங்கை, இந்தியா போன்ற வெப்ப மண்டல நிலப்பரப்புகளில் வளரும் மரம் தென்னை ஆகும். தென்னையின் அனைத்து பகுதிகளும் பயன்மிக்கவை. சிறப்பாக தேங்காய் தென்னிந்திய சமையலில் முக்கிய இடத்தைப் பெறுகிறது.
வளர் இயல்பு
[தொகு]மணற்பாங்கான நிலத்தில் வளரவல்ல தென்னை, உப்புநீரைத் தாங்கி வளரக் கூடியது. நல்ல மழையும் சூரியஒளியும் கிடைக்கும் இடங்களில் இது நன்கு வளரும். தென்னை மரம் 30 மீ வரை வளரக் கூடியது. இதற்கு கிளைகள் கிடையாது. இதன் உச்சியில் இருக்கும் தென்னை ஓலை 4-6 மீ நீளமுடையது.
தென்னை வளர்ப்பு
[தொகு]தென்னை உலகில் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் வளர்க்கப்படுகிறது. தேங்காய் உற்பத்தி ஆண்டுக்கு 61 மில்லியன் டன்களாகும். இந்தோனேசியா, பிலிப்பைன்சு, இந்தியா ஆகிய மூன்று நாடுகளே எப்போதும் முன்னணியில் இருந்து வருகின்றன.[2]
இந்தியாவில் தமிழகம், கேரளா, கர்நாடகம் மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களில் தென்னை அதிகளவில் வளர்க்கப்படுகிறது.[3]
தென்னையில் இருந்து பெறப்படும் பயன்கள்
[தொகு]- இளநீர்
- தேங்காய் - தேங்காயிலிருந்து கிடைக்கும் புரத அமைப்பு, மனித உடலுக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது.[மேற்கோள் தேவை]
- தேங்காப்பால் - சமையலுக்கு
- தேங்காய்ப் பால்மா
- தேங்காப்பூ - சம்பல்
- உலர் தேங்காப்பூ - இனிப்புப் பண்டங்கள்
- கொப்பரை
- தேங்காய் எண்ணெய்
- பாம் ஆயில்
- தெழுவு
- கருப்பட்டி
- கள்ளு
- சிரட்டை
- நீருணவு உண்ணப் பயன்படுத்தப்படுவது
- பொட்டுச் சட்டியாகப் பயன்படுத்தப்படுவது
- இது இப்போது மரக்கன்றுகளை வளர்க்க சிறப்பாக பயன்படுத்தப்படுகிறது
- தென்னோலை
- கிடுகு
- ஈக்கிளைப் பயன்படுத்தி விளக்குமாறு செய்வார்கள்
- மரம்
- விறகு
- பொச்சுமட்டை
- பொச்சு மட்டையிலிருந்து பெறப்படும் தேங்காய் நாரில் இருந்து கயிறு தயாரிக்கப்படுகிறது.
- பாத்திரங்கள் கழுவ, நெருப்பு மூட்டப் பயன்படுத்தப்படுகிறது
- தேங்காய் நார் கழிவு மாடி தோட்டங்களுக்கு பயன்படுகிறது.
- விசிறி
- குருத்து - தோரணங்களுக்குப் பயன்படுத்தப்படுவது, மரபு மருத்துவம்
- குரும்பட்டி - தேர் போன்ற தானே செய்தல் விளையாட்டுப் பொருட்கள்
பொதுவான இரகங்கள்
[தொகு]தென்னையில் பல இரகங்கள் உள்ளன என்றாலும் பொதுவாக நெட்டை, குட்டை என இரண்டு இரகங்களும் அவற்றிலிருந்து இனக்கலப்பு செய்யப்பட்ட வீரிய ஒட்டு இரகங்கள் என வேறு இரகங்களும் காணப்படுகின்றன.
நெட்டை ரகம்
[தொகு]நெட்டை இரக தென்னை என்பது 60 அடி உயரம் வரை வளரக்கூடியது. சுமார் 40 மட்டைகள் வெளிவந்தபின் முதல் பாளை வெளிவரும். இதில் கிழக்கு கடற்கரை நெட்டை. மேற்கு கடற்கரை நெட்டை. வேப்பங்குளம் என மூன்று வகைகள் உள்ளன.
குட்டை ரகம்
[தொகு]குட்டை இரக தென்னை என்பது 30 - 40 வருட வாழ்நாள் கொண்டவை. 3-4 ஆண்டுகளில் காய்ப்புக்கு வரும். கொப்ரையின் அளவு மற்றும் தரம் நெட்டை ரகத்தைவிட குறைவு. இது பெரும்பாலும் இளநீருக்காக சாகுபடி செய்யப்படுகிறது. இதில் கங்கா பந்தன், சௌகாட் ஆரஞ்சு, சௌகாட் பச்சை, மலாயன் பச்சை, மலாயன் மஞ்சள் போன்ற வகைகள் உள்ளன.
வீரிய ஒட்டு ரகம்
[தொகு]நெட்டை, குட்டை மற்றும் குட்டை, நெட்டை ஆகியவற்றை இணைத்து வீரிய ஒட்டு ரகங்கள் உருவாக்கப்படுகிறன. இவை விரைவில் வளர்ச்சியடைந்து மகசூல் தரவல்லது. இவற்றில் சந்திர சங்கரா, ஆனந்த கங்கா, வேப்பங்குளம் வீரிய ஒட்டு – 1, வேப்பங்குளம் வீரிய ஒட்டு – 2, வேப்பங்குளம் வீரிய ஒட்டு – 3 போன்ற வகைகள் உருவாக்கப்பட்டுள்ளன.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Cocos L., Sp. Pl.: 1188 (1753)". World Checklist of Selected Plant Families. Royal Botanic Gardens, Kew. 2022. பார்க்கப்பட்ட நாள் 29 May 2022.
- ↑ https://www.vikatan.com/nanayamvikatan/2015-feb-22/column/103654.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-11-19. பார்க்கப்பட்ட நாள் 2018-02-10.
- ↑ தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம். தொழிற்கல்வி மேல்நிலை இரண்டாம் ஆண்டு ப.எண்.46