ஆந்திரப் பிரதேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆந்திரா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
ஆந்திரப் பிரதேசம்

ఆంధ్ర ప్రదేశ్ - ஆந்திரா

—  மாநிலம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் ஆந்திரப் பிரதேசம்
மாவட்டங்கள் 13
நிறுவப்பட்ட நாள் நவம்பர் 1, 1956
தலைநகரம் அமராவதி (கட்டுமானத்தில்)
ஆளுநர் ஈ. சீ. இ. நரசிம்மன்[1]
முதலமைச்சர் நா. சந்திரபாபு நாயுடு[2]
ஆளுநர் இ. எஸ். எல். நரசிம்மன்
சட்டமன்றம் (தொகுதிகள்) ஈரவை (294 + 90)
மக்கள் தொகை

அடர்த்தி

4,93,86,799 (5வது) (2013)

308/km2 (798/சது மை)

ம. வ. சு (2005) Green Arrow Up Darker.svg0.572 (medium) (20வது)
கல்வியறிவு 67.41% (13வது)
மொழிகள் தெலுங்கு
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு 160200 கிமீ2 (61854 சதுர மைல்)
ஐ. எசு. ஓ.3166-2 IN-AP
இணையதளம் www.ap.gov.in


ஆந்திரப் பிரதேசம் பழைய ஆந்திரப் பிரதேச மாநிலத்திலிருந்து 2 சூன் 2014-ஆம் ஆண்டில் தெலுங்கானா பகுதி பிரிக்கப்பட்டபின், இராயலசீமை மற்றும் கடற்கரை ஆந்திரா பகுதிகளை உள்ளடக்கியதே தற்போதைய ஆந்திரப் பிரதேசம் ஆகும்.

ஆந்திரப் பிரதேசத்தின் புதிய தலைநகராக அமராவதி நகரை அமைக்க, 22 அக்டோபர் 2015 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியால் கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.[3]

இந்தியாவின் தென்மாநிலங்களுள் ஒன்று. ஐதராபாத் ஆந்திரப்பிரதேசத்துக்கும் தெலுங்கானாவுக்கும் பொது தலைநகராக 10 ஆண்டுகளுக்கு இருக்கும். ஆந்திரத்தின் புதிய தலைநகராக அமராவதி அறிவிக்கப்பட்டுள்ளது. விஜயவாடா, விசாகப்பட்டிணம், திருப்பதி, குண்டூர், காக்கிநாடா, நெல்லூர் மற்றும் கர்நூல் ஆகியன இம்மாநிலத்திலுள்ள ஏனைய பெரிய நகரங்களாகும்.

இங்குள்ள பெரும்பாலான மக்கள் பேசும் மொழி தெலுங்கு. பரப்பளவு அடிப்படையில் இது இந்தியாவின் எட்டாவது பெரிய மாநிலமாகும். மக்கள் தொகை அடிப்படையில் இது இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாகும். 2014 சூன் மாதம் தெலுங்கானா தனி மாநிலமாக இம்மாநிலத்தை பிரித்து உண்டாக்கப்பட்ட பிறகு இம்மாநிலம் அதிகாரபூர்வமற்ற சீமாந்திரா என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. ஐதரபாத்திற்கு அடுத்து பெரிய நகரம் விசாகப்பட்டிணம் ஆகும்,

புவியமைப்பு[தொகு]

புதிய ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் வரைபடம்

ஆந்திரப் பிரதேசத்தின் வடக்கில் தெலுங்கானாவும் தெற்கில் தமிழ்நாடும் கிழக்கில் வங்காள விரிகுடாவும் வடகிழக்கில் ஒரிசாவும் மேற்கில் கர்நாடகமும் அமைந்துள்ளன. தென் மாநிலங்களில் கருநாடகத்துக்கு அடுத்து இதுவே பெரிய மாநிலமாகும். இந்திய மாநிலங்களில் இது இரண்டாவது நீண்ட கடற்கரையை கொண்டுள்ளது. கோதாவரி, கிருஷ்ணா ஆகிய ஆறுகள் ஆந்திரப் பிரதேசம் வழியாகப் பாய்கின்றன. அவற்றின் கழிமுகங்கள் காரணமாக அரிசி உற்பத்தியில் இம்மாநிலம் சிறந்து விளங்குகிறது.

1 நவம்பர் 1956 அன்று மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டத்தின்படி தெலுங்கு பேசும் முன்னாள் ஐதராபாத்து இராச்சியத்தையும், சென்னை மாகாணத்தின் தெலுங்கு மொழி பேசும் பகுதிகளையும் இணைத்து ஆந்திரப் பிரதேசம் என்ற புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. மொழியின் அடிப்படையில் அமைக்கப்பட்ட முதல் மாநிலம் இதுவே. தற்போதைய தெலுங்கானா பகுதிகள் ஐதராபாத் இராச்சியத்தின் பகுதியாகவே இருந்தது, இராயலசீமை, கடற்கரை ஆந்திரா சென்னை மாகாணத்தின் பகுதிகளாக இருந்தது. எனவே 2014 சூன் மாதம் தெலுங்கானா தனி மாநிலமாக இம்மாநிலத்தை பிரித்து உண்டாக்கப்பட்டது.

மாவட்டங்கள்[தொகு]

வருவாய் பிரிவுகள்[தொகு]

இந்த 13 மாவட்டங்கள் 50 வருவாய் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 7 வருவாய் பிரிவுகளும், விஜயநகர மாவட்டத்தில் 2 மட்டுமே உள்ளன.

மண்டலங்கள்[தொகு]

50 வருவாய் பிரிவு 670 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 66 மண்டலங்கள் உள்ளன.விஜயநகர மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 34 மண்டலங்கள் உள்ளன.

நகரங்கள்[தொகு]

ஆந்திரப் பிரதேசத்தில் 16 நகராட்சிகள் மற்றும் 14 மாநகராட்சிகள் உட்பட மொத்தம் 31 நகரங்கள் உள்ளன. விசாகப்பட்டினம் மற்றும் விஜயவாடா ஆகிய நகரங்கள் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் ஆகும்.

பொருளாதாரம்[தொகு]

விவசாயமே ஆந்திரப் பிரதேசத்தில் அதிகமாக பழக்கத்திலுள்ள தொழிலாகும். அரிசி, புகையிலை, பருத்தி, மிளகாய், கரும்பு ஆகியவை இங்கு விளைவிக்கப்படுகின்றது. கடந்த சில ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்பத்திற்கு ஆந்திரப் பிரதேசத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. கடப்பா மாவட்டத்தில் உள்ள 2664 கனிம சுரங்கங்கள் மூலம் மாநிலத்தின் பொருளாதாரம் வளம் பெறுகிறது.

காக்கிநாடா துறைமுகம், விசாகப்பட்டினம் துறைமுகம் மற்றும் மசூலிப்பட்டினம் துறைமுகங்கள் மாநிலத்தின் வருவாய்க்கு வகை செய்கிறது.

நீர் ஆதாரங்கள்[தொகு]

கோதாவரி ஆறு, கிருஷ்ணா ஆறு, ஸ்ரீசைலம் அணை, எம். பி. ஆர் அணை, மயிலாவரம் அணை, சோமசீலா அணை மற்றும் போலவரம் திட்டம் மாநிலத்தின் நீர் ஆதாரங்களாக உள்ளது.

மக்கள் தொகையியல்[தொகு]

மே 2014-ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச மாநில அரசின் புள்ளி விவரப்படி 1,60,200 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 4,93,86,799 ஆகும். அதில் கிராமப்புற மக்கள் தொகை 3,47,76,389 (70.4); நகரப்புற மக்கள் தொகை 1,46 ,10,410 (29.6%) ஆக உள்ளது. மொத்த மக்கள் தொகையில் ஆண்கள் 50.1% ஆகவும்; பெண்கள் 49.9% ஆகவும் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 308 மக்கள் வீதம் வாழ்கின்றனர். பதினெட்டு வயதிற்குட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 9 52,22,384 (10.6%) ஆகும். மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 67.41% ஆக உள்ளது. அதில் ஆண்களின் படிப்பறிவு 80.9%; பெண்களின் படிப்பறிவு 64.6% ஆகவும் உள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 996 பெண்கள் வீதம் உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் பட்டியல் சமூக மக்கள் தொகை 84,45,398 (17.1 %) ஆகவும்; பட்டியல் பழங்குடி மக்கள் தொகை 26,31,145 (5.3%) ஆக உள்ளனர். மாநிலத்தில் மொத்தப் பணியாளர்கள் எண்ணிக்கை 2,29,69,906 ஆகும். இவர்களில் முதன்மைப் பணியாளர்களின் எண்ணிக்கை 1,92,31,167 ஆகவும்; திறன் குறைந்த பணியாளர்களின் எண்ணிக்கை 37,38,739 ஆகவும் உள்ளது. பயிரிடுவோர்கள் எண்ணிக்கை 30,70,723 ஆகவும்; வேளாண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 85,57,567 ஆகவும் உள்ளது. [4][5]

கல்வி[தொகு]

ஆரம்பப் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்கள் எண்ணிக்கை 37,45,340; நடுநிலைப் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 21,01,928 ஆக உள்ளது.

மொழிகள்[தொகு]

ஆந்திரப் பிரதேசத்தின் அதிகாரப்பூர்வ மொழி தெலுங்கு. சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் தெலுங்கு மொழியை ஒரு பாரம்பரிய மொழியாக அறிவித்துள்ளார்.

மதங்கள்[தொகு]

ஆந்திரத்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள் இந்துக்கள், முஸ்லிம்கள் கணிசமான சிறுபான்மையினர். 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மாநிலங்களில் இந்துக்கள் (90.87%), முஸ்லிம்கள் (7.32%) மற்றும் கிரிஸ்துவர் (1.38%) உள்ளனர். புத்த மதத்தினர், சீக்கியர்கள், ஜெயின்ஸ் மற்றும் அவர்களது மதத்தை நிலைநாட்ட மறுத்துவிட்ட மக்கள் மீதமுள்ள பகுதியை உருவாக்குகின்றனர்.

அரசியல்[தொகு]

இம்மாநிலத்தில் 294 சட்டமன்ற தொகுதிகளும்; நாற்பது நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகள் உள்ளது. [6]

தெலங்கானா மாநில பிரிவினைக்குப் பிறகு 2014ல் நடந்த முதல் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு முதல்வரானார்.

நிர்வாகம்[தொகு]

இம்மாநிலத்தை நிர்வாக வசதிக்காக பதின்மூன்று வருவாய் மாவட்டங்களாகவும்; எண்பது வருவாய் கோட்டங்களாகவும், 664 வருவாய் மண்டல்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

முக்கிய நகரங்கள்[தொகு]

விசாகப்பட்டினம், விஜயவாடா, திருப்பதி, குண்டூர், காக்கிநாடா, நெல்லூர் மற்றும் கர்நூல் இம்மாநிலத்தின் முக்கிய நகரங்கள் ஆகும்.

வழிபாட்டுத் தலங்கள்[தொகு]

திருப்பதி ஏழுமலையான்
விஜயவாடா கனகதுர்கை கோயில்

கலாசாரம்[தொகு]

தெலுங்கு ஆந்திரப் பிரதேசத்தின் முக்கிய மொழியும், அதிகாரப்பூர்வ மொழியும் ஆகும். கருநாடக இசையில் தெலுங்கு மொழி முக்கியப் பங்கு வகிக்கிறது. தெலுங்கு ஆண்டுப்பிறப்பான உகாதி, ஏப்ரல் மாதம் கொண்டாடப்படுகிறது. குச்சிப்புடி ஆந்திரத்தின் பாரம்பரிய நாட்டிய வகையாகும்.

ஐதராபாத்தை மையமாகக் கொண்ட தெலுங்கு திரைப்படத் துறை, இந்தியாவில் மூன்றாவது பெரிய திரைப்படத்துறையாகும்.

ஆந்திர உணவு வகைகள் காரம் நிறைந்தவை.

போக்குவரத்து[தொகு]

தொடருந்து[தொகு]

விஜயவாடா[8] மற்றும் விசாகப்பட்டினம்[9] தொடருந்து நிலையங்கள் இருப்புப்பாதை மூலம் நாட்டின் அனைத்து நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

விமான நிலையங்கள்[தொகு]

விசாகப்பட்டினம்[10], விஜயவாடா[11] மற்றும் திருப்பதி[12] விமான நிலையங்கள், வானூர்தி மூலம் இந்தியாவின் அனைத்து நகரங்களுடன் இம்மாநிலத்தை இணைக்கிறது.

விளையாட்டு[தொகு]

கிரிக்கெட் விளையாட்டு மிகவும் பிரபலமான விளையாட்டு ஆகும். விசாகப்பட்டினத்தில் உள்ள ACA-VDCA மைதானம் ஆந்திரப் பிரதேச கிரிக்கெட் அணிக்கு சொந்தமானது. இந்த இடம் தொடர்ந்து சர்வதேச மற்றும் உள்நாட்டு போட்டிகளுக்குப் பொருந்தும். ஆந்திராவில் இருந்து குறிப்பிடத்தக்க கிரிக்கெட் வீரர்கள், விஜயநாகரத்தின் மஹராஜ்குமார், எம். வி. நரசிம்ம ராவ், எம். எஸ். கே. பிரசாத், வி.வி.எஸ். லக்ஷ்மண், திருமலசீட்டி சுமன், அர்ஷத் அய்யூப், அம்பதி ராயுடு, வெங்கடாபதி ராஜா, அரவிந்த நாயுடு, யலக்க வேணுகோபால் ராவ் ஆகியோர். ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற முதல் பெண் இந்தியரான கர்ணம் மல்லேஸ்வரி, ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்திலிருந்து வந்தவர். 19 செப்டம்பர் 2000 அன்று, 69 கிலோ பிரிவில் 240 கிலோ எடை கொண்ட வெண்கலப் பதக்கம் வென்றார்.

பௌத்தத் தொல்லியல் களங்கள்[தொகு]

 1. நாகார்ஜுனகொண்டா
 2. அமராவதி
 3. உண்டவல்லி
 4. போஜ்ஜன்ன கொண்டா
 5. கண்டசாலா
 6. சந்திராவரம்
நாகார்ஜுனகொண்டாவில் உள்ள புத்தரின் சிலையுடன் கூடிய தொல்லியல் களம்

மேற்கோள்கள்[தொகு]

 1. http://india.gov.in/govt/governor.php
 2. http://india.gov.in/govt/chiefminister.php
 3. அமராவதி துவக்கவிழா. http://tamil.thehindu.com/india/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/article7794179.ece?homepage=true. 
 4. http://www.ap.gov.in/AP%20State%20Statistical%20Abstract%20May%202014/2%20AP%20Demography.pdf
 5. Andhra Pradesh Demography - MAY 2014
 6. http://www.ap.gov.in/wp-content/uploads/2016/01/1-ADMINISTRATIVE-AND-GEOGRAPHICAL-PROFILE.pdf
 7. http://www.durgamma.com/
 8. http://indiarailinfo.com/arrivals/vijayawada-junction-bza/29
 9. http://indiarailinfo.com/arrivals/visakhapatnam-junction-vskp/401
 10. http://www.vizagairport.in/
 11. http://www.aai.aero/allAirports/vijayawada.jsp
 12. https://www.makemytrip.com/flights/tirupati-tir-tirupati.html

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆந்திரப்_பிரதேசம்&oldid=2629390" இருந்து மீள்விக்கப்பட்டது