இராயலசீமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராயலசீமை
ஆந்திரப் பிரதேசத்தின் பகுதி
இடமிருந்து வலமாக: கவுந்தியா வனவிலங்கு சரணாலயம், திருப்பதி வெங்கடாசலபதி கோயில், லேபக்ஷி ஒற்றைக்கல் காளை, கொண்டா ரெட்டி கோட்டை, திருமலை கருடசிலை, சௌமியநாதர் கோவில் மற்றும் ௨௦௦ (200) ஆண்டுகள் நினைவு கோபுரம்.
ஆந்திரப் பிரதேசத்தில் இராயலசீமை
ஆந்திரப் பிரதேசத்தில் இராயலசீமை
நாடு India
மாநிலம்படிமம்:Andhraseal.png ஆந்திரப் பிரதேசம்
மாவட்டங்கள்
மிகப்பெரிய நகரங்கள்
தோற்றுவித்தவர்சிலுக்குரி நாராயண ராவ்
பரப்பளவு[1]
 • மொத்தம்71,060 km2 (27,440 sq mi)
பரப்பளவு தரவரிசை17
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்1,51,84,908
 • அடர்த்தி226/km2 (590/sq mi)
மொழிகள்
 • அலுவள்தெலுங்கு
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+05:30)
வாகனப் பதிவுAP02, AP03, AP04, AP21, AP39
மிகப்பெரிய விமான நிலையம்திருப்பதி விமான நிலையம்

இராயலசீமை, ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் ஒரு புவியியற் பகுதியாக திகழ்கிறது. மற்ற இரு பகுதிகள் வடக்கு ஆந்திரா, கடற்கரை ஆந்திரா இராயலசீமை புவியியற் பகுதியில், அனந்தபூர், அன்னமய்யா, சித்தூர், கர்நூல், நந்தியால், ஸ்ரீசத்ய சாய், திருப்பதி, கடப்பா, பிரகாசம் மாவட்டத்தின் சில பகுதிகள் மற்றும் நெல்லூர் மாவட்டத்தின் சில பகுதிகள் சேரும். கருநாடக மாநிலத்தின் பெல்லாரி மாவட்டம் மற்றும் துமக்கூர் மாவட்டத்தின் பாவகடா பகுதியும் இராயலைசீமை பகுதிக்கு உரியதென்பர்.

வரலாறு[தொகு]

வேங்கி (கீழைச் சாளுக்கியர்) மன்னர்களின் பூர்வீகம் இராயலசீமை நிலப்பரப்பில் அமைந்ததாகக்கூறுவர். ஏனைய தெலுங்கு பேசும் பகுதிகளான தெலுங்கானா மற்றும் கோஸ்தா ஆகியவற்றை ஒப்பிடுகையில் இராயலசீமை, நிலப்பரப்பில் சிறியதாக இருந்தாலும், இப்பகுதி, தெலுங்கு இனம் மற்றும் பண்பாட்டிற்கு மிகுதியாக பங்களித்துள்ளது. இப்பகுதி ஐதராபாத் நிசாமால் மதராஸ் மாகாணத்திற்கு துணைபடைக்காக (படை உதவி) 1799ல் நான்காம் மைசூர் போருக்கு பின் தரப்பட்டது ஆகவே இப்பகுதி ராயல் (சிறந்த) சீமை (வெளிநாடு) என்ற பொருளில் பெயரிடப்பட்டது

மொழி வரலாற்றில் பங்கு[தொகு]

தெலுங்கு மொழியின் மிகப்பழமையான கல்வெட்டான "சிலாசாசனம்", இராயலசீமையின் பகுதியாகக்கருதப்படும் பெல்லாரி மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டது.

அரசியல்[தொகு]

இராயலசீமை ஆந்திர மாநிலத்தின் பின் தங்கிய பகுதியாக இருப்பதால், இதனை தனி மாநிலமாக பிரிக்க வேண்டும் என்ற குரல்கள் ஆங்காங்கே ஒலிக்கத்தொடங்கியுள்ளன. முக்கியமாக, திசம்பர் திங்கள் 2009 -ஆம் ஆண்டு தெலுங்கானா தனி மாநிலமாக உருவாகக்கூடும் என்று இந்திய உள்துறை அமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்கள் அறிவித்ததால், இராயலசீமையும் தனி மாநிலமாக வேண்டும் என்று சில ஆந்திர மாநில சட்ட மன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்பினர்.

இராயலசீமை பகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்கள் ஒய்.எஸ். இராஜசேகர ரெட்டி, சந்திரபாபு நாயுடு, கோட்ல விஜய பாஸ்கர ரெட்டி, தாமோதரம் சஞ்சீவய்யா நீலம் சஞ்சீவ ரெட்டி. மற்றும் கிரண் குமார் ரெட்டி.

மேற்கோள்கள்[தொகு]

  1. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
இராயலசீமை
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

மேலும் படிக்க[தொகு]

  • Reddy, G. Samba Siva (2006–2007). "Making of Micro-Regional Identities in the Colonial Context: Studying the Rayalaseema Maha Sabha, 1934–1956". Proceedings of the Indian History Congress 67: 500–513. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=இராயலசீமை&oldid=3665967" இருந்து மீள்விக்கப்பட்டது