நந்தியால் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நந்தியால் மாவட்டம்
மாவட்டம்
நாடு இந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
நிறுவப்பட்ட நாள்4 ஏப்ரல் 2022
தோற்றுவித்தவர்ஆந்திரப் பிரதேச அரசு
தலைமையிடம்நந்தியால்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+05:30)
இணையதளம்https://nandyal.ap.gov.in/

நந்தியால் மாவட்டம் (Nandyal district) ஆந்திரப் பிரதேசத்தின் 26 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1] இதன் நிர்வாகத் தலைமையிடம் நந்தியால் நகரம் ஆகும். இம்மாவட்டம் கர்நூல் மாவட்டத்தின் நந்தியால் வருவாய் கோட்டம், துரோணாச்சலம் எனும் தோனே வருவாய் கோட்டம் மற்றும் அத்மக்கூர் வருவாய் கோட்டங்களின் பகுதிகளை கொண்டு 5 ஏப்ரல் 2022 அன்று புதிதாக நிறுவப்பட்டது.[2][3][4][5][6]

9,681 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 17.82 இலட்சம் ஆகும்.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

இம்மாவட்டம் 3 வருவாய்க் கோட்டங்களாகவும், 29 மண்டல்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் நந்தியால், நந்திகோட்குர், அள்ளகட்ட்டா, ஆத்மக்கூர் என 4 நகராட்சிகளும், 457 கிராம ஊராட்சிகளும், பெத்தம்செர்லா எனும் பேரூராட்சியும் கொண்டது.

மண்டல்கள்[தொகு]

# ஆத்மக்கூர் வருவாய் கோட்டம் நந்தியால் வருவாய் கோட்டம் தோனே வருவாய் கோட்டம்
1 ஸ்ரீசைலம் நந்தியால் பங்கனப்பள்ளி
2 ஆத்மக்கூர் கோஸ்பாடு ஓவ்க்
3 வெலுகோடு சிரிவெல்லா கோயில்குந்தலா
4 நந்திகோட்கூர் தோர்னிப்பாடு தோனே
5 பகிடியாலா உய்யாலாவாடா பெத்தம்செர்லா
6 ஜுபாடு பங்களா சாகலமர்ரி பெப்பிலி
7 கொத்தப்பள்ளி ருத்திராவரம்
8 பாமுலாப்பாடு மகாநந்தி
9 மித்தூர் அல்லகட்டா
10 பண்டி ஆத்மக்கூர் பாண்யம்
11 கட்டிவெமுலா
12 சஞ்சமாலா
13 கோலிமிகுண்டலா

அரசியல்[தொகு]

நந்தியால் மாவட்டம் நந்தியால் மக்களவைத் தொகுதி மற்றும் 7 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டது. அவைகள்:

  • ஆள்ளகட்டா சட்டமன்றத் தொகுதி
  • நந்திகோட்கூர் சட்டமன்றத் தொகுதி - (தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டது)
  • பாண்யம் சட்டமன்றத் தொகுதி
  • நந்தியால் சட்டமன்றத் தொகுதி
  • பங்கனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி
  • ஸ்ரீசைலம் சட்டமன்றத் தொகுதி
  • தோனே சட்டமன்றத் தொகுதி

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்தியால்_மாவட்டம்&oldid=3742672" இருந்து மீள்விக்கப்பட்டது