கேரளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கேரளா

കേരളം

கடவுளின் சொந்த நாடு -- ദൈവത്തിന്റെ സ്വന്തം നാട്
—  மாநிலம்  —
இருப்பிடம்: கேரளா , இந்தியா
அமைவிடம் 8°30′27″N 76°58′19″E / 8.5074°N 76.972°E / 8.5074; 76.972ஆள்கூற்று : 8°30′27″N 76°58′19″E / 8.5074°N 76.972°E / 8.5074; 76.972
நாடு  இந்தியா
பகுதி தென்னிந்தியா
மாநிலம் கேரளா
மாவட்டங்கள் 14
நிறுவப்பட்ட நாள் நவம்பர் 1, 1956
தலைநகரம் திருவனந்தபுரம்
மிகப்பெரிய நகரம் திருவனந்தபுரம்
ஆளுநர் ப. சதாசிவம்[1]
முதலமைச்சர் உம்மன் சாண்டி[2]
சட்டமன்றம் (தொகுதிகள்) ஓரவை (141 தொகுதிகள்:
தேர்ந்தெடுக்கப்படுவோர்: 140, நியமிக்கப்படுவோர்: 1)
மக்களவைத் தொகுதி கேரளா
மக்களவை உறுப்பினர்

வார்ப்புரு:இந்திய மக்களவை/கேரளா/உறுப்பினர் (வார்ப்புரு:இந்திய மக்களவை/கேரளா/உறுப்பினர்/கட்சி) வார்ப்புரு:இந்திய மக்களவை/கேரளா/உறுப்பினர்/குறிப்புகள்

மக்கள் தொகை

அடர்த்தி

31[3] (12th) (2001)

819/km2 (2,121/sq mi)

ம. வ. சு (2005) Green Arrow Up Darker.svg 0.814 (high) (1வது)
கல்வியறிவு 94.59[4][5]% (1வது)
மொழிகள் மலையாளம்
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு 38863 கிமீ2 (15005 சதுர மைல்)
ஐ. எசு. ஓ.3166-2 IN-KL
Portal வலைவாசல்: கேரளம்  
இணையதளம் kerala.gov.in


கேரளம் அல்லது கேரளா (Kerala, ['keːɹəˌlə]?·i (ஆங்கிலமாக்கப்பட்டது) அல்லது [ˈkeːɾəˌɭəm] (உள்ளூர்); மலையாளம்: കേരളം, — Kēraḷaṁ) இந்தியாவின் தென்மாநிலங்களுள் ஒன்று. இது கிழக்கில் தமிழ் நாட்டையும், வடக்கில் கர்நாடகத்தையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. மேற்கில் அரபுக் கடல் உள்ளது. மலையாளம் கேரளாவின் முதன்மையான மொழியாகும். தமிழ் பேசுவோரும் அதிகமாக காணப்படுகினறனர். கேரளத்தின் தலைநகரம் திருவனந்தபுரம். பிற குறிப்பிடத்தக்க நகரங்கள் கொச்சி, திருச்சூர் மற்றும் கோட்டயம் ஆகும். இந்திய மாநிலங்களில் கல்வியறிவு விகிதத்தில் கேரளம் முதலிடம் வகிக்கிறது.

பெயர்க் காரணம்[தொகு]

கேரளா என்ற சொல், தமிழ்ச் சொல்லான “சேரளம்” (மலைச் சரிவு) அல்லது சேர நாடு என்பதிலிருந்து தோன்றியது என்பது அறிஞர்களின் கூற்று[6][7]. இன்றைய கேரளா, வரலாற்று காலத்தில் “சேர நாடு” என்று அழைக்கப்பட்டு வந்தது. 3ஆம் நூற்றாண்டு பேரரசர் அசோகரின் கல்வெட்டில் கேரளா - “கேரளபுத்திரர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது[8]. மேலும், ரோமானிய வணிகன் பெரிபுளீஸின் நிலவரைபடத்தில், இன்றைய கேரளப் பகுதியை சேரபுத்ரா என்று குறிப்பிடுகின்றார். கேரள மக்கள் மலையாளிகள் என்று அழைக்கப்படுகின்றனர்[9]. மலையில் (மேற்கு தொடர்ச்சி மலைகள்) வாழ்பவர்கள் என்பது அதன் பொருள் ஆகும்.

சிறப்புகள்[தொகு]

 • 5 ஏப்ரல் 1957ல் ஜனநாயக முறைப்படி, ஆசியாவிலேயே முதன் முதலாக கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்த முதல் மாநிலம்
 • ஆதி சங்கரர் (கி.பி.788-820) பிறந்த இடம் காலடி
 • இந்திய செவ்வியல் நடனவடிவம் "கதகளி"யின் பிறப்பிடம்
 • ரப்பர் உற்பத்தியில் இந்தியாவின் முன்னணி மாநிலம்
 • இந்தியாவின் நறுமணத் தோட்டம்
 • களரிப்பயிற்று தற்காப்புக் கலையின் பிறப்பிடம்

புவியமைப்பு[தொகு]

பரப்பளவு:38,863 km2 (15,005 sq mi)
கிழக்கே மேற்குத் தொடர்ச்சி மலைகள்; மேற்கில் அரபிக் கடல்; தென்கிழக்கில் தமிழ்நாடு; வடகிழக்கில் கர்நாடகம்.
ஆறுகள்: நெய்யாறு, பம்பை, மணிமலை, பெரியாறு, பாரதப்புழை, சித்தாறு மற்றும் மூவாற்றுப்புழை ஆகியவை கேரளத்தின் முக்கிய ஆறுகள்.

வரலாறு[தொகு]

பரசுராமரின் கோடரி கடலைப் பிளந்த தால் தோன்றிய நாடு கேரளம் என்பது புராணக் கற்பனை.இதனை பார்க்கவ சேத்திரம் என்றும் பரசுராம சேத்திரம் என்றும் வழங்குகின்றனர்.[10]
போர்த்துக்கீசியர், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என பல ஐரோப்பியர் கேரளத்தில் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டினர். 1947வாக்கில் கேரளம் திருவிதாங்கூர், கொச்சி மற்றும் மலபார் என மூன்று சமஸ்தானங்களாக இருந்தது.
மலபார் சீரமைப்புச் சட்டம் 1956ன் படி, திருவிதாங்கூர், கொச்சி மற்றும் மலபார் பகுதிகள் இணைக்கப்பட்டு, நவம்பர் 1956ல் இன்றைய கேரளம் உதயமானது.

அரசியல்[தொகு]

பொருளாதாரம்[தொகு]

விவசாயம் முக்கிய தொழில். உணவுப் பொருள் சாகுபடியை விட பணப்பயிர் சாகுபடி அதிகரித்து வருகிறது. பாரம்பரிய தொழில்களான கைத்தறி, கயிறு, கைவினைப் பொருட்கள் தயாரிப்பு போன்ற தொழில்களும் சிறப்பாக நடைபெறுகிறது.

ஆட்சிப் பிரிவுகள்[தொகு]

மக்கள் தொகை அடர்த்தி அடிப்படையில் கேரள மாவட்டங்கள் (ஒரு சதுரக் கிலோமீட்டருக்கு குடியிருப்போர் எண்ணிக்கை) ஆதாரம்:கேரள அரசு

கேரளம் பதினான்கு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருவன:

கேரளத்தில் 63 வட்டங்களும், 1634 வருவாய் ஊராட்சிகளும், 978 ஊராட்சிகளும் ஐந்து நகராட்சிகளும் உள்ளன.

அரசியல்[தொகு]

முதன்மைக் கட்டுரை: கேரள மக்களவைத் தொகுதிகள்

முதன்மைக் கட்டுரை: கேரள சட்டமன்றத் தொகுதிகள்

இது இருபது மக்களவைத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[11] கேரள சட்டமன்றத்திற்காக, கேரளத்தை 140 தொகுதிகளாகப் பிரித்துள்ளனர்.[11]

மக்கள்[தொகு]

சமயவாரியாக மக்கள் தொகை [12]
சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 31,841,374 100%
இந்துக்கள் 17,883,449 56.16%
இசுலாமியர் 7,863,842 24.70%
கிறித்தவர் 6,057,427 19.02%
சீக்கியர் 2,762 0.01%
பௌத்தர் 2,027 0.01%
சமணர் 4,528 0.01%
ஏனையோர் 2,256 0.01%
குறிப்பிடாதோர் 25,083 0.08%

கலைகள்[தொகு]

கூடியாட்டம், கதகளி, கேரள நடனம், மோகினியாட்டம், தெய்யம், துள்ளல் ஆகியவை கேரளத்தின் நாட்டிய வகைகளாகும். வர்மக்கலை, களரி போன்ற தற்காப்புக் கலைகளும் கேரளத்திலிருந்து தோன்றியவையே.

விழாக்கள்[தொகு]

ஓணம் மற்றும் விஷு கேரளத்தின் முக்கிய பண்டிகைகளாகும். கிறிஸ்துமஸும் ரமலான் பெருநாளும் இங்கு கொண்டாட படுகிறது.

இறைச்சி[தொகு]

கேரள மாநிலத்தின் கால்நடை பராமரிப்புத் துறையின் தகவல்படி 2009-2010 ஆண்டில் மட்டும் 61 லட்சம் பசு உட்பட்ட கால்நடைகள் தமிழகம் மூலம் கேரளாவிற்கு இறைச்சிக்காகக் கொண்டு வரப்பட்டன. 18 லட்சம் கால்நடைகள் சோதனையை மீறிக் கடத்தப்பட்டவை.[13]

மேலும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

துணை நூற்பட்டியல்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. http://india.gov.in/govt/governor.php
 2. http://india.gov.in/govt/chiefminister.php
 3. Census of India, 2001. Census Data Online, Population.
 4. "Literacy - officialwebsite of Govt of Kerala". பார்த்த நாள் 2010-05-25. The state ranks first in the country with a literacy rate of 94.59% (1st) The breakup shows 94.2 for males and 87.86 for females.
 5. "kerala front_ final printing 7Nov06.indd" (PDF). பார்த்த நாள் 2009-07-30.
 6. George 1968, பக். xiii, 6, 7.
 7. Smith 1999, பக். 447ff.
 8. "Carving the Buddha". Govt of Kerala. பார்த்த நாள் 3 October 2011.
 9. Asher, Kumari & 1997 pp. 100, 416.
 10. வையவன், பக்கம் 17
 11. 11.0 11.1 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்
 12. Census of india , 2001
 13. குமுதம் ஜோதிடம்; 5.10.2012; "அனைத்து உயிர்களும் ஆண்டவனின் குழந்தைகளே..!" கட்டுரை
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரளம்&oldid=1826727" இருந்து மீள்விக்கப்பட்டது