கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம்
நெடும்பாச்சேரி வானூர்தி நிலையம்
Cochin Airport Logo.png
Cochin International Airport.JPG
கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் உள்ளூர் முனையம்
ஐஏடிஏ: COKஐசிஏஓ: VOCI
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/India airport" does not exist.கேரளாவில் நிலையத்தின் அமைவிடம்
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகை பொதுத்துறை
உரிமையாளர் கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலைய குமுகாயம் லிமிடெட்
இயக்குனர் கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம் லிமிடெட்
சேவை புரிவது கொச்சிப் பெருநகரப் பகுதி
அமைவிடம் நெடும்பாச்சேரி, எர்ணாகுளம், கேரளம்
மையம்
  • ஏர் இந்தியா எக்சுபிரசு
  • புளு டார்ட் ஏவியேசன்
உயரம் AMSL 9 m / 30 ft
ஆள்கூறுகள் 10°09′20″N 76°23′29″E / 10.15556°N 76.39139°E / 10.15556; 76.39139
இணையத்தளம் http://www.cial.aero/
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீ அடி
27/09 3 11,155 அசுபால்ட்டு
உலங்கு களங்கள்
எண்ணிக்கை நீளம் மேற்பரப்பு
m ft
H1 19 63 அசுபால்ட்டு
புள்ளிவிவரங்கள் (ஏப் '11 - மார் '12)
பயணிகள் இயக்கம் 47,17,650
வானூர்தி இயக்கங்கள் 40,181
சரக்கு டன்கள் 42,706
மூலம்: ஏஏஐ[1][2][3]

கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம் (Cochin International Airport, (ஐஏடிஏ: COKஐசிஏஓ: VOCI)) கொச்சி மற்றும் அதன் அண்மையிலுள்ள மாவட்டங்களுக்கான பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இந்த வானூர்தி நிலையம் கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தின் வடகிழக்கில் ஏறத்தாழ 30 km (19 mi) தொலைவிலுள்ள நெடும்பாச்சேரி (உள்ளூர் உச்சரிப்பு:நெடும்பாஸ்ஸேரி) என்னுமிடத்தில் கட்டப்பட்டுள்ளது.[4] முன்னதாக வெல்லிங்டன் தீவில் செயல்பட்டு வந்த வானூர்தி நிலையம் பெரிய வானூர்திகளுக்காக விரிவாக்கபட தேவையான நிலப்பரப்பை கொண்டிராததாலும் கப்பற்படைக்கு உரிமையானதாக இருந்ததாலும் மாற்று வானூர்தி நிலையமாக இது திட்டமிடப்பட்டது. அதுநாள் வரை முற்றிலும் அரசுநிதியிலிருந்தே கட்டமைக்கப்பட்டுவந்த திட்டங்களுக்கு மாற்றாக இது இந்தியாவில் முதன்முதலாக அரசு-தனியார் கூட்டு முயற்சியாக எடுத்துக்கொள்ளப்பட்டது.30 நாடுகளிலிருந்து 10,000 வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலீடு வழங்கி உள்ளனர்.[5]

கேரளாவின் வானூர்தி நிலையங்களில் இதுவே மிகவும் போக்குவரத்து மிக்க வானூர்தி நிலையமாக விளங்குகிறது. 2011-12 நிதியாண்டில் 4,717,650 பயணிகள் பயன்படுத்திய இது இந்தியாவின் ஏழாவது போக்குவரத்து மிக்க வானூர்தி நிலையமாக விளங்கியது. பன்னாட்டுப் பயணிகளை மட்டும் கருத்தில் கொண்டால் 2,586,658 பன்னாட்டுப் பயணிகள் வந்தசென்ற இந்த வானூர்தி நிலையம் இந்தியாவின் நான்காவது நிலையமாக உள்ளது.[6] ஏர் இந்தியா எக்சுபிரசு இதனைத் தனது முதன்மை முனைய நடுவமாகக் கொண்டுள்ளது; ஏர் இந்தியா, கோஏர், இன்டிகோ, ஜெட் ஏர்வேஸ், ஜெட்லைட் மற்றும் ஸ்பைஸ் ஜெட் இங்கிருந்து பல இடங்களுக்கு சேவைகள் வழங்கி வருகின்றன.

மேற்சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]