செகதல்பூர் வானூர்தி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மா தாந்தேசுவரி வானூர்தி நிலையம்
Maa danteswari Airport
[[Image:
விமான நிலைய முகப்பு
|220px]]
ஐஏடிஏ: JGBஐசிஏஓ: VEJR
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகை பொது
உரிமையாளர் சத்தீசுகர் அரசு[1]
இயக்குனர் சத்தீசுகர் அரசு
சேவை புரிவது ஜெகதல்பூர் நகரம்
அமைவிடம் ஜெகதல்பூர்
உயரம் AMSL 555 m / 1,822 ft
ஆள்கூறுகள் 19°04′28″N 082°02′13″E / 19.07444°N 82.03694°E / 19.07444; 82.03694ஆள்கூறுகள்: 19°04′28″N 082°02′13″E / 19.07444°N 82.03694°E / 19.07444; 82.03694
நிலப்படம்
JGB is located in Chhattisgarh
JGB
JGB
JGB is located in இந்தியா
JGB
JGB
சத்தீசுகரில் வானூர்தி நிலையம் அமைவிடம்
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீ அடி
06/24 1,707 5,600 அஸ்பால்ட்
புள்ளிவிவரங்கள் (ஏப்ரல் 2018 - மார்ச் 2019)
பயணி போக்குவரத்து 772
விமான போக்குவரத்து 248
சரக்கு கையாளுதல்
Source: இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்[2][3]

செகதல்பூர் வானூர்தி நிலையம் (Jagdalpur Airport) (ஐஏடிஏ: JGBஐசிஏஓ: VEJR) என்பது உள்நாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இது சத்தீசுகர் மாநிலத்தில் ஜெகதல்பூரில் அமைந்துள்ளது. இந்திய வானூர்தி நிலையங்கள் நிலைய ஆணையம் (ஏஏஐ) ஜூலை 2013இல் விமானநிலைய சாத்தியக்கூறு குறித்து முன் ஆய்வை நடத்தியது. இதன் பின்னர் விமான காட்சி விதிகள் (விஎஃப்ஆர்) நிபந்தனைகளின் கீழ் விமானங்களின் செயல்பாடுகளுக்கு ஒப்புதல் அளித்தது.[4] மத்திய அரசாங்கத்தின் உதான் திட்டத்தின் கீழ் மேம்படுத்த விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டது. ஒரு முனையக் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா 2017 ஜனவரியில் நடைபெற்றது.[5][6] ஏடிஆர் -72 வகை விமானங்களின் செயல்பாட்டை அனுமதிக்கும் வகையில் விமானநிலையம் 2019 ஆம் ஆண்டில் 3 சி வகையாக மேம்படுத்தப்பட்டது.[7] 21 செப்டம்பர் 2020 அன்று அலையன்ஸ் ஏர் ஏடிஆர் -72 விமானங்களைப் பயன்படுத்தி ஐதராபாத் மற்றும் ராய்ப்பூருக்கு விமானச் சேவையினைத் தொடங்கியது. ஜகதல்பூர் விமான நிலையத்தின் பெயரானது செப்டம்பர் 21, 2020 அன்று மா தாந்தேசுவரி வானூர்தி நிலையமாக மாற்றப்பட்டது. தற்போதைய விமான நிலைய இயக்குநர் ஸ்ரீ கே.கே. பாமிக் ஆவார்.

பசுதர் மாவட்டத்தின் உல்நார் கிராமத்தில் ஜகதல்பூருக்கு[8] புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை மாவட்ட நிர்வாகம் முன்வைத்தது. இந்த விமான நிலையம் 250 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமான ஓடுபாதையானது 3 கி.மீ நீளமும் 200 மீட்டர் அகலமும் கொண்டதாக அமையும். விமான இது ஒரு நவீன விமான நிலையக் முனைய கட்டடத்தைக் கொண்டிருக்கும். தேவைப்படும் நிலத்தில் சுமார் 92% (229 ஹெக்டேர்) அரசுக்குச் சொந்தமானது என்பதால், நிலம் கையகப்படுத்தும் செயல்முறை விரைவாக நடைபெற்று விரைவான விமான நிலைய வளர்ச்சி நேரத்திற்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விமான நிறுவனங்கள் மற்றும் இடங்கள்[தொகு]

செகதல்பூர் விமான நிலையத்தில் அலையன்ஸ் விமானம்
விமான நிறுவனங்கள் சேரிடங்கள் 
அலையன்ஸ் ஏர் ஐதராபாத், [ராய்பூர்[9]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pre-feasibility Study for Jagdalpur Airport Conducted". Press Information Bureau (22 July 2014).
  2. "traffic news Mar2K19Annex3 pdf".
  3. "traffic-news Mar2K19Annex2 pdf".
  4. "Centre lays firm conditions prior to airport development in C'garh". The Pioneer (23 March 2017).
  5. "CM performs bhoomi pujan for terminal of Jagdalpur airport". The Pioneer (January 2017).
  6. "Jagdalpur airport to be developed for ATR type aircraft ops". The Pioneer (6 September 2017).
  7. "Safety assessment done at Jagdalpur Airport for 3C licence". The Pioneer (10 December 2019).
  8. "Ulnar to have the new Jagdalpur airport, district administration has already identified 250 hectares for the airport.". 6 June 2021. https://epaper.patrika.com/chhattisgarh/jagdalpur/2021-06-06/78/page-1.html. 
  9. "After successful trial, now aviation services to restart in Jagdalpur soon". The Times of India.

வெளி இணைப்புகள்[தொகு]

  • Airport information for VE46 at World Aero Data. Data current as of October 2006.