அலோங் வானூர்தி நிலையம்
அலோங் வானூர்தி நிலையம் Along Airport आलोएनजी हवाई अड्डे | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | இராணுவம் | ||||||||||
இயக்குனர் | இந்திய வான்படை | ||||||||||
சேவை புரிவது | அலோங், அருணாச்சலப் பிரதேசம் | ||||||||||
உயரம் AMSL | 274 m / 900 ft | ||||||||||
ஆள்கூறுகள் | 28°10′31″N 094°48′07″E / 28.17528°N 94.80194°E | ||||||||||
நிலப்படம் | |||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
|
அலோங் வானூர்தி நிலையம் (Along Airport)(ஐஏடிஏ: IXV, ஐசிஏஓ: VEAN) என்பது ஆலோ வானூர்தி நிலையம் என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின்அருணாச்சல பிரதேசத்தில் உள்ள அலோங்கில் அமைந்துள்ளது.
அருணாச்சல பிரதேச அரசு ஜூன் 2009இல் இந்த வான்வழிப் பாதையைப் பாதுகாப்பு அமைச்சகத்திடம் ஒப்படைத்தது.[1] விமான நிலையத்தின் ஒரு பகுதியை பொதுப் போக்குவரத்திற்குப் பயன்படுத்த அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.[2]
பாதுகாப்பான விமான நடவடிக்கைகளுக்காக விமானநிலையத்தினைச் சுற்றியுள்ள தடைகளை நீக்குவதற்காக இந்திய விமான நிலைய ஆணையம் (ஏஏஐ) 2011 ஜூலையில் மாநில அரசுக்கும் இந்திய விமானப்படைக்கும் ஒரு அறிக்கையை அனுப்பியிருந்ததுடன், வளர்ச்சிக்கு ஏழு ஏக்கர் நிலம் தேவை என்பதையும் மேற்கோளிட்டிருந்தது.[3]
சம்பவங்கள்
[தொகு]ஏப்ரல் 7, 1964 இல், கலிங்கா ஏர்லைன்ஸ் டகோட்டா ஓடுபாதையை விட்டு விலகியதால் தீப்பிடித்தது. பொருளாதாரரீதியாகப் பழுதுபார்க்க முடியாத அளவுக்கு விமானம் சேதமடைந்த போதிலும், உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "IAF plane with 13 lost in Arunachal, crash feared". இந்தியன் எக்சுபிரசு. 10 June 2009. http://archive.indianexpress.com/news/iaf-plane-with-13-lost-in-arunachal-crash-feared/474077/.
- ↑ "Govt considering setting up of 3 greenfield airports in NE". The Hindu Businessline. 13 August 2014. http://www.thehindubusinessline.com/industry-and-economy/logistics/govt-considering-setting-up-of-3-greenfield-airports-in-ne/article6312413.ece.
- ↑ "Greenfield Airport draft masterplan ready: Minister". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 7 September 2012. http://timesofindia.indiatimes.com/city/guwahati/Greenfield-Airport-draft-masterplan-ready-Minister/articleshow/16297204.cms.
- ↑ "ASN Aircraft accident Douglas C-47A-10-DK VT-CMD Along". Aviation-safety.net. Archived from the original on 21 மே 2014. Retrieved 9 February 2012.
வெளி இணைப்புகள்
[தொகு]- விமான நிலையத்துடன்
- Airport information for VEAN