சுவாமி விவேகானந்தா விமானநிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுவாமி விவேகானந்த வானூர்தி நிலையம்
Swami Vivekananda Airport, Raipur.jpg
ஐஏடிஏ: RPRஐசிஏஓ: VERP
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகை பொது
உரிமையாளர் இந்திய அரசு
இயக்குனர் இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்
சேவை புரிவது ராய்ப்பூர்-பிலாய்-துர்க்
அமைவிடம் ராய்ப்பூர், சத்தீசுகர்
உயரம் AMSL 317 m / 1,041 ft
ஆள்கூறுகள் 21°10′52″N 081°44′18.5″E / 21.18111°N 81.738472°E / 21.18111; 81.738472ஆள்கூறுகள்: 21°10′52″N 081°44′18.5″E / 21.18111°N 81.738472°E / 21.18111; 81.738472
இணையத்தளம் www.raipurairport.com
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீ அடி
06/24 2,286[1] 7,500 அஸ்பால்ட்
உலங்கு களங்கள்
எண்ணிக்கை நீளம் மேற்பரப்பு
m ft
H1 20 65 கான்கிரீட்
புள்ளிவிவரங்கள் (ஏப்ரல் 2018 - மார்ச் 2019)
பயணிகள் போக்குவரத்து 2,028,548(Green Arrow Up Darker.svg24.6)
வானூர்தி போக்குவரத்து 16,901(Green Arrow Up Darker.svg32.0)
சரக்கு டன்கள் 5,003(Green Arrow Up Darker.svg22.2)
Source: இவாநிஆ[2][3][4]

சுவாமி விவேகானந்த வானூர்தி நிலையம் (Swami Vivekananda Airport) (பிப்ரவரி 2018 வரை VARPஎன குறிப்பிடப்பட்டது).[5][6] [7] இந்த விமான நிலையம் முன்பு ராய்ப்பூர் விமான நிலையம் என்று அழைக்கப்பட்டது. இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தின் முதன்மையான விமான நிலையமாக இது உள்ளது. இந்த விமான நிலையம் ராய்ப்பூருக்கும் நயா ராய்ப்பூருக்கும் இடையில் ( 15 km (9.3 mi) மன்னாவில் அமைந்துள்ளது.[8] பயணிகள் போக்குவரத்தில் இந்தியாவின் 28வது இடத்தினையும் பரபரப்பான விமான இயக்கத்தில் 29வது இடத்தினையும் பெறும் நிலையமாகவும் உள்ளது.

இந்த விமானநிலையத்திற்கு 2012 ஆம் ஆண்டு ஜனவரி 24 அன்று, சுவாமி விவேகானந்தர் நினைவாகப் பெயரிடப்பட்டது. விவேகானந்தர் ராய்ப்பூரில் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கழித்ததன் நினைவாகப் பெயரிடப்பட்டது.[9]

ஓடுதளம்[தொகு]

சுவாமி விவேகானந்தர் விமான நிலையத்தில் ஒற்றை ஓடுபாதை உள்ளது - ஓடுபாதை 2,286 m (7,500 ft) நீளமும் 45 m (148 ft) அகலமும் உடையது. ஓடுபாதையின் நீளம் நீட்டிக்கப்படுவதன் மூலம் 3,251 m (10,666 ft) நீளமாக மாற்றப்பட உள்ளது.[10]

விமான ஓடு தளம் கேட்-1ல் இரவு நேரங்களில் விமானம் இறங்கும் வசதிகளான ஓடுதளம் 24 மற்றும் டீவிஓஆர், டீஎமஈ, எண்டீபி, மற்றும் பிஏபிஐ கண்காணிப்பு உபகரணங்களைக் கொண்டது.

ஆறு ஏ 320 / பி 737 வகை விமானங்களை நிறுத்தும் வசதியினையும், ஹெலிபேடு ஒன்றும் உள்ளது. விமானநிலையத்தில் செயல்படும் தீயணைப்பு நிலையம் VI வகையுடன் VII மீட்பு வசதியுடன் திறன் வாய்ந்ததாக உள்ளது. [11]

முனையங்கள்[தொகு]

புதிய ஒருங்கிணைந்த முனையம்[தொகு]

புதிய ஒருங்கிணைந்த முனையம் 7 நவம்பர் 2012 அன்று அப்போதைய இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்களால் திறக்கப்பட்டது. 158 கோடி
(US$20.71 மில்லியன்)
செலவில் கட்டப்பட்ட இம்முனையம் 20,000 m2 (4.9 ஏக்கர்கள்) பரப்பளவில் கட்டடங்களைக் கொண்டுள்ளது. இம்முனையத்தில் ஒரே நேரத்தில் 400 சர்வதேச பயணிகள் உட்பட 1300 பயணிகளைக் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய முனையத்தில் இரண்டு ஏரோ-பாலங்கள், எட்டு பயண நுழைவாயில், இருபது சோதனை கவுண்டர்கள், எட்டு ஊடுகதிர் பயண உடைமை சோதனை இயந்திரங்கள், நான்கு பாதுகாப்பு கவுண்டர்கள் மற்றும் பயண உடைமைக்கான இரண்டு நகரும் பட்டைகள் உள்ளன. மூன்றாவது ஏரோ-பாலத்திற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.[11] [12]

சரக்கு முனையம்[தொகு]

பொதுவான உள்நாட்டு பயனர் சரக்கு முனையம் (சி.யு.டி.சி.டி) 2016 ஜூன் 4ஆம் நாளன்று திறக்கப்பட்டது. இதன் மூலம் விமான சரக்கு போக்குவரத்திற்கான மாநிலத்தின் நீண்டகால கோரிக்கையை நிறைவேறியது. AAI பழைய முனையக் கட்டடத்தைச் சரக்கு நடவடிக்கைகளைக் கையாள மாற்றப்பட்டுள்ளது. அகமதாபாத்தை மையமாகக் கொண்ட ஜி.எஸ்.இ.சி லிமிடெட் ஐந்து வருட காலத்திற்கு இம்முனையத்தினை இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும் ஒப்பந்தம் பெற்றுள்ளது. [13]

விமான நிறுவனங்கள் மற்றும் இடங்கள்[தொகு]

விமான நிறுவனம் பயண இடம்
ஏர் இந்தியா டெல்லி, மும்பை, நாக்பூர், விசாகப்பட்டினம்
அலையன்சு ஏர் போபால், ஹைதராபாத், ஜதாபூர், ஜெய்பூர், சஜார்சுகுடா, கொல்கத்தா, ராஞ்சி
இண்டிகோ அகமதாபாத், அலகாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி,ஹைதராபாத், கோவா, இந்தூர், கொச்சி, கொல்கத்தா, லக்னோ, மும்பை, பாட்னா, ஸ்ரீநகர்
விஸ்தாரா டெல்லி, மும்பை

இணைப்பு[தொகு]

ராய்பூர் நகரப் புகைவண்டி நிலையத்திலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும், பாண்ட்ரி பேரூந்து முனையத்திலிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவிலும் இந்த விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த பகுதிகளிடையே வாடகை வாகனங்கள், மற்றும் ராய்ப்பூர் நகர்ப்புற பொது போக்குவரத்து மூலமும் அண்டை நகரங்களான பிலாய் மற்றும் துர்க்குக்கு நேரடி குளிரூட்டப்பட்ட நகரப் பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

ஓலா மற்றும் உபர் வாடகை கார்கள் விமான புறப்பாடு மற்றும் வருகை வாயில்களில் கிடைக்கின்றன. தனியார் வாடகை வாகனங்கள் சேவை வசதியும் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

 1. "Swami Vivekananda Airport, Raipur -Brochure".
 2. "Traffic News for the month of March 2019: Annexure-III". Airports Authority of India (1 May 2019).
 3. "Traffic News for the month of March 2019: Annexure-II". Airports Authority of India (1 May 2019). மூல முகவரியிலிருந்து 1 May 2018 அன்று பரணிடப்பட்டது.
 4. "Traffic News for the month of March 2018: Annexure-IV". Airports Authority of India (1 May 2018). மூல முகவரியிலிருந்து 1 May 2018 அன்று பரணிடப்பட்டது.
 5. "Airport codes Raipur in Raipur, India (IN)".
 6. "Raipur - India".
 7. "Live Flight Tracker - Real-Time Flight Tracker Map".
 8. "Airports Authority of India".
 9. "Renaming of Mana Airport at Raipur in Chhattisgarh as "Swami Vivekanand Airport, Raipur"". மூல முகவரியிலிருந்து 12 August 2017 அன்று பரணிடப்பட்டது.
 10. "AAI awards work for extension of Raipur Airport runway".
 11. 11.0 11.1 "Airports Authority of India, Technical Information". மூல முகவரியிலிருந்து 16 February 2009 அன்று பரணிடப்பட்டது.
 12. "Airports Authority of India, Passenger Information". மூல முகவரியிலிருந்து 16 February 2009 அன்று பரணிடப்பட்டது.
 13. Share on FacebookShare on Twitter (4 June 2016). "Cargo terminal inaugurated at Raipur airport | Raipur News - Times of India". M.timesofindia.com.

வெளி இணைப்புகள்[தொகு]