ஸ்பைஸ் ஜெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஸ்பைஸ் ஜெட்
ஐஏடிஏ
SG
ஐசிஏஓ
SEJ
கால்சைன்
SPICEJET
நிறுவல் 2004
செயற்பாடு துவக்கம் 24 மே 2005
வான்சேவை மையங்கள்
இரண்டாம் நிலை மையங்கள்
முக்கிய நகரங்கள்
வான்சேவைக் கூட்டமைப்பு
வானூர்தி எண்ணிக்கை 40 (+ 29 orders)
சேரிடங்கள் 34
மகுட வாசகம் Flying for everyone
தாய் நிறுவனம் சன் குழுமம்
தலைமையிடம் குர்கான், இந்தியா
முக்கிய நபர்கள் கலாநிதி மாறன், நெய்ல் மில்ஸ்
இணையத்தளம் SpiceJet.com

ஸ்பைஸ் ஜெட் (SpiceJet) இந்தியாவின் குர்கானை தலைமையிடமாக கொண்ட ஒரு குறைந்தசெலவு விமானசேவை நிறுவனம். இது இந்தியாவின் இரண்டாவது பெரிய குறைந்தசெலவு விமானசேவை நிறுவனம்[1]. இது 32 இந்திய நகரங்களுக்கு தினமும் 243 க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்குகிறது. இதனுடைய பங்குகள் தி.மு.க தலைவர் கருணாநிதியின் பேரன் கலாநிதி மாறனால் 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வாங்கப்பட்டது. அதே ஆண்டு, சேவை தொடங்கி 5 ஆண்டுகள் ஆகிவிட்டதன் காரணமாக வெளிநாட்டு முனையங்களுக்கு இயக்க அனுமதி கொடுக்கப்பட்டது. முதல் வெளிநாட்டு சேவையாக 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் டில்லியிலிருந்து காத்மண்டுவிற்கு இயக்கப்பட்டது. இது 2007 இல் ஸ்கைட்ராக்ஸால் தென் ஆசியா மற்றும் மத்தியஆசியா பகுதியில் சிறந்த குறைந்த செலவு விமான நிறுவனமாக வாக்களிக்கப்பட்டது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Nair, Vipin V. (2008-07-04). "SpiceJet Rises in Mumbai on Report of Kingfisher Deal (Update2)". Bloomberg. பார்த்த நாள் 2012-02-05.
  2. http://headlinesindia.mapsofindia.com/flights/spicejet.html Skytrax award for Spicejet
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்பைஸ்_ஜெட்&oldid=1367746" இருந்து மீள்விக்கப்பட்டது