அகமதாபாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அகமதாபாத்
அகமதாபாத்
இருப்பிடம்: அகமதாபாத்
, குஜராத் , இந்தியா
அமைவிடம் 23°02′N 72°35′E / 23.03°N 72.58°E / 23.03; 72.58ஆள்கூற்று: 23°02′N 72°35′E / 23.03°N 72.58°E / 23.03; 72.58
நாடு  இந்தியா
மாநிலம் குஜராத்
ஆளுநர் ஓம் பிரகாஷ் கோலி
முதலமைச்சர் விஜய் ருபானி
நகரத் தந்தை பிகாஷ் பட்டாச்சார்யா
மக்களவைத் தொகுதி அகமதாபாத்
மக்கள் தொகை

அடர்த்தி

39,59,432 (2010)

22,473/km2 (58,205/sq mi)

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்

205 square kilometres (79 sq mi)

53 metres (174 ft)

இணையதளம் www.egovamc.com

அகமதாபாத் (குஜராத்தி: અમદાવાદ, சிந்தி: ا د آ ڡڢګڪا, Ahmedabad) இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் மிகப்பெரிய நகரமும், இந்தியாவின் ஆறாவது பெரிய நகரமுமாகும். இதன் மக்கள் தொகை ஏறத்தாழ 5 மில்லியனாகும். இந்நகரம் இதன் பழைய பெயரான கர்ணாவதி என்ற பெயராலும் குஜராத் மக்களால் அம்தாவாத் என்றும் அழைக்கப்படுகிறது. இது அகமதாபாத் மாவட்டத்தின் தலைநகரமாகும்.

இந்நகரம் சபர்மதி ஆற்றின் கரையில் குஜராத்தின் வடநடுப் பகுதியில் அமைந்துள்ளது. இந்நகரமே 1960-இல் இருந்து 1970 வரை குஜராத்தின் தலைநகரமாக இருந்தது. பின்னர், குஜராத்தின் தலைநகராக காந்தி நகர் ஏற்கப்பட்டது. அகமதாபாத் இந்தியாவின் முதன்மையான தொழில் நகராக உள்ளது. இதன் மக்கள்தொகை விரைவாக உயர்ந்துவருகிறது. இதனால் வீடுகளுக்கான தேவை அதிகரித்து கட்டுமானங்கள் அதிகரித்து வருகின்றன. அண்மைக்காலமாக விண்ணைத்தொடும் கட்டடங்கள் கட்டப்பட்டுவருகின்றன.[1]

சான்றுகள்[தொகு]

  1. "Ahmedabad joins ITES hot spots". Times of India. 16 August 2002. http://infotech.indiatimes.com/articleshow/19249001.cms. பார்த்த நாள்: 30 July 2006. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகமதாபாத்&oldid=2060329" இருந்து மீள்விக்கப்பட்டது