நரேந்திர மோதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நரேந்திர மோடி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நரேந்திர மோதி
Narendra Modi


குசராத்து மாநில முதல்வர்
முன்னவர் கேசுபாய் பட்டேல்
பின்வந்தவர் தற்போதைய (பதவியிலிருக்கும்)
தொகுதி மணிநகர்
அரசியல் கட்சி பாரதீய ஜனதா கட்சி

பிறப்பு செப்டம்பர் 17, 1950 (1950-09-17) (அகவை 63)
வட்நகர், மேகசானா மாவட்டம், குசராத்து, இந்தியா
வாழ்க்கைத்
துணை
ஜசோதாபென்
பிள்ளைகள் இல்லை
இருப்பிடம் காந்திநகர், குசராத்து
சமயம் இந்து
சூன் 18 இன் படியான தகவல், 2006
மூலம்: Government of Gujarat

நரேந்திர தாமோதரதாசு மோதி (Narendra Dāmodardās Modī, குசராத்தி: નરેંદ્ર દામોદરદાસ મોદી, பரவலாக நரேந்திர மோடி), (பி. செப்டம்பர் 17, 1950) பாரதிய ஜனதா கட்சியின் ஒரு முக்கிய அரசியல்வாதியாவார். இவர் அக்டோபர் 7, 2001 இல் இருந்து குசராத்து மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்து வருகிறார்.


குடும்பம்

நரேந்திர தாமோதர்தாசு மோதி ஒரு நடுத்தர பொருளாதார வசதிபடைத்த குடும்பத்தில் வடநகர் என்னும் இடத்தில் பிறந்தார், அவர் தாமோதர்தாசு முல்சந் மோதி மற்றும் அவரது மனைவி ஃகீரபேன்னுக்கும் பிறந்த ஆறு குழந்தைகளில் இவர் மூன்றாவதாக பிறந்தார். தனது மனைவியின் பெயர் ஜசோதாபென் என 2014-ஆம் ஆண்டுக்கான வடோதரா நாடாளுமன்ற மக்களவை தொகுதி தேர்தலுக்கான வேட்புமனுவில் குறித்துள்ளார்.[1]

இளமைப் பருவம்

இவர் இளமைப் பருவத்திலிருந்து ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் (RSS) ஒரு உறுப்பினராகவும் உள்ளார், இளமை முதல் அரசியலில் ஆர்வம் கொண்டவர். இவர் 1998 ஆம் ஆண்டில் அரசியல் அறிவியல் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். இவர் குசராத்து மாநிலம், இமாசல பிரதேச தேர்தல் பிரச்சாரங்களில் இயங்க அத்வானியால் தேர்வு செய்யப்பட்டார்.

அரசியல் வாழ்க்கை

அப்போதைய முதல்வர் கேசுபாய் பட்டேல் பதவி விலகியதை அடுத்து நடந்த இடைத் தேர்தலில் நரேந்திர தாமோதர்தாசு மோதி வெற்றிபெற்று அக்டோபர் 7, 2001 ல் குசராத்தின் முதல்வர் ஆனார். இவர் தன் பதவிக்காலத்தை அக்டோபர் 7, 2001 தொடங்கி சூலை, 2007 வரை இருந்தார். பின் திசம்பர் 23, 2007 தேர்தலில் மறுபடியும் வெற்றிபெற்று ஆட்சியை தொடர்ந்தார். இவர் தொடர்ந்து 2063 நாட்கள் முதல்வர் பதவியில் இருந்து குசராத்து வரலாற்றில் சாதனை படைத்துள்ளார்.

மோதி ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் உறுப்பினராக இருந்துள்ளார். ஊடகங்களும் அறிஞர்களும் இவரை இந்து தேசியவாதியாக விவரிக்கின்றனர். [2]இக்கூற்றை இவரும் ஏற்றுக் கொண்டுள்ளார்.[3][4][5] இந்தியாவிற்குள்ளும் பன்னாட்டளவிலும் மிகுந்த சர்ச்சைகளுக்குட்பட்ட மனிதராக மோதி உள்ளார்.[6][7][8][9] கோத்ரா தொடருந்து எரிப்புக்க்குப் பின் 2002ஆம் ஆண்டு குசராத்து வன்முறைக்காக மிகக் கடுமையாக சாடப்பட்டுள்ளது.[9][10] குசராத்தில் மிக விரைவான பொருளியல் வளர்ச்சிக்கான சூழலை உருவாக்கியதாக இவரது பொருளியல் கோட்பாடுகள் பரவலானப் பாராட்டுக்களைப் பெற்றுள்ளன.[11] இருப்பினும், இவரது ஆட்சி குறிப்பிடத்தக்க மனிதவளர்ச்சி கூறுகளில் நேர்மறை தாக்கம் எதுவும் ஏற்படுத்தவில்லை என்றும் குறைகாணப்படுகிறது.[12]

பிரதமர் பதவி வேட்பாளர்

2014ம் ஆண்டு 16ஆம் மக்களவைத்தேர்தலில் பாரதீய சனதா கட்சி முதன்மையேற்கும் தேசிய சனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு வாரணாசி மற்றும் வடோதரா ஆகிய இரண்டு நாடாளுமன்ற மக்களை தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். [13]

மேற்சான்றுகள்

 1. http://tamil.thehindu.com/india/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article5894895.ece?homepage=true
 2. Harris, Gardiner (13 September 2013). "Divisive Nationalist to Lead Opposition in Indian Vote". த நியூயார்க் டைம்ஸ் (Ahmedabad). http://www.nytimes.com/2013/09/14/world/asia/polarizing-nationalist-to-lead-opposition-in-indian-elections.html. பார்த்த நாள்: 15 September 2013. 
 3. "Yes, I am a Hindu nationalist: Narendra Modi". India Express. 13 July 2013. http://www.indianexpress.com/news/yes-i-am-a-hindu-nationalist/1141243/. ""Modi said he described himself as a Hindu nationalist because he was born Hindu: "I am nationalist. I'm patriotic. Nothing is wrong. I am a born Hindu. Nothing is wrong. So I'm a Hindu nationalist so yes, you can say I'm a Hindu nationalist because I'm a born Hindu."" 
 4. Menon, Kalyani Devaki (2012). Everyday Nationalism: Women of the Hindu Right in India. University of Pennsylvania Press. p. 26. ISBN 978-0812222340. "Yet, months after this violent pogrom against Muslims, the Hindu nationalist chief minister of Gujarat, Narendra Modi, went to the polls and won a resounding victory" 
 5. Mishra, Pankaj (2011). Kamala Visweswaran. ed. Perspectives on Modern South Asia: A Reader in Culture, History, and Representation. Wiley-Blackwell. p. 188. ISBN 978-1405100625. "The chief minister of Gujarat, a young up-and-coming leader of the Hindu nationalists called Narendra Modi, quoted Isaac Newton to explain the killings of Muslims. “Every action”, he said, “has an equal and opposite reaction.”" 
 6. Nair, Rupam Jain (12 December 2007). "Edgy Indian state election going down to the wire". Reuters. Ahmedabad. http://www.reuters.com/article/2007/12/12/us-india-state-poll-idUSDEL17441120071212. பார்த்த நாள்: 10 October 2012. 
 7. Robinson, Simon (11 December 2007). "India's Voters Torn Over Politician". Time (Surat). http://www.time.com/time/world/article/0,8599,1693370,00.html. பார்த்த நாள்: 10 October 2012. 
 8. Burke, Jason (28 March 2010). "Gujarat leader Narendra Modi grilled for 10 hours at massacre inquiry". The Guardian (Delhi). http://www.guardian.co.uk/world/2010/mar/28/gujarat-narendra-modi-massacre-inquiry-india. பார்த்த நாள்: 10 October 2012. 
 9. 9.0 9.1 Buncombe, Andrew (19 September 2011). "A rebirth dogged by controversy". The Independent. http://www.independent.co.uk/news/world/asia/a-rebirth-dogged-by-controversy-2357157.html. பார்த்த நாள்: 10 October 2012. 
 10. David, Ruth (24 December 2007). "Controversial Gujarati Premier Confirmed in Office". Forbes. http://www.forbes.com/2007/12/24/narendra-modi-gujarat-face-markets-cx_rd_1224autofacescan01.html. பார்த்த நாள்: 10 October 2012. 
 11. Joseph, Manu (15 February 2012). "Shaking Off the Horror of the Past in India". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2012/02/16/world/asia/16iht-letter16.html. பார்த்த நாள்: 10 October 2012. 
 12. Jaffrelot, Christof (June 2013). "Gujarat Elections: The Sub-Text of Modi’s ‘Hattrick’—High Tech Populism and the ‘Neo-middle Class". Studies in Indian Politics 1: Gujarat Elections: The Sub-Text of Modi’s ‘Hattrick’—High Tech Populism and the ‘Neo-middle Class. 
 13. http://tamil.thehindu.com/india/%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/article5890999.ece?homepage=true

வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=நரேந்திர_மோதி&oldid=1645922" இருந்து மீள்விக்கப்பட்டது