பஜ்ரங் தள்
Appearance
உருவாக்கம் | 1 அக்டோபர் 1984 |
---|---|
வகை | விசுவ இந்து பரிசத் இயக்கத்தின் பிரிவு |
சட்ட நிலை | இயக்கத்தில் |
தலைமையகம் | புது தில்லி, இந்தியா |
தலைவர் | ராஜேஷ் பாண்டே |
தாய் அமைப்பு | விசுவ இந்து பரிசத் |
வலைத்தளம் | பஜ்ரங் தள் |
பஜ்ரங் தள் என்பது விசுவ இந்து பரிசத் இயக்கத்தின் இளைஞர் பிரிவாகும்.[1][2] இந்த இயக்கம் இந்துத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.[2][3] இது 1984ஆம் ஆண்டின் அக்டோபர் முதலாம் நாளில் நிறுவப்பட்டது. இந்த இயக்கம் இந்தியா முழுவதும் பரவியிருந்தாலும், வடக்கு இந்தியாவிலும், மத்திய இந்தியாவிலும் பலமானதாக இருக்கிறது. இந்துக் கடவுளான அனுமனைக் குறிக்கும் சொல்லே பஜ்ரங்.
இவர்களின் முக்கியக் குறிக்கோள்களில் ஒன்று, அயோத்தியில் ராம ஜென்மபூமி கோயிலைக் கட்டுவதாகும். இந்தியாவில் இந்து சமயத்தை காப்பற்றுவதும், மதமாற்றங்களைத் தடுப்பதும் தன் கொள்கைகள் எனக் குறிப்பிடுகிறது.
சர்ச்சை
[தொகு]- இந்த இயக்கம் 2002ஆம் ஆண்டில் குஜராத் வன்முறையின்போது முஸ்லீம்களுக்கு எதிராக செயல்பட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சாட்டியுள்ளது.[4]
தடைக் கோரிக்கை
[தொகு]இந்த இயக்கத்தை தடை செய்யக் கோரி சில இயக்கங்களும் அமைப்புகளும் தனி நபர்களும் கோரிக்கை விடுத்தன. இதுவரையிலும் இந்த இயக்கம் தடை செய்யப்படவில்லை.
- 2008ஆம் ஆண்டின் அக்டோபர் ஐந்தாம் நாளில் இந்தியாவின் சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம் இந்த இயக்கத்தை தடை செய்யப் பரிந்துரைத்தது. அதற்கு காரணமாக, கர்நாடகாவில் உள்ள கிறிஸ்தவ நிறுவனங்களை பஜ்ரங் தள் இயக்கத்தினர் தாக்கியதை குறிப்பிட்டது.[5]
சான்றுகள்
[தொகு]- ↑ Chetan Bhatt (2001). Hindu Nationalism: Origins, Ideologies and Modern Myths. Berg Publishers. p. 199. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85973-348-6.
- ↑ 2.0 2.1 Anand, Dibyesh (2007). "Anxious sexualities: Masculinity, nationalism and violence". The British Journal of Politics & International Relations 9 (2): 257–269. doi:10.1111/j.1467-856x.2007.00282.x.
- ↑ Deshpande, Rajeev (30 September 2008). "Bajrang Dal: The militant face of the saffron family?". The Times of India இம் மூலத்தில் இருந்து 2012-10-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121021220153/http://articles.timesofindia.indiatimes.com/2008-09-30/india/27934677_1_bajrang-dal-prayer-halls-orissa-and-karnataka. பார்த்த நாள்: 2008-09-30.
- ↑ State Participation and Complicity in Communal Violence in Gujarat Humean Rights Watch – June 2002
- ↑ [http://www.ibnlive.com/news/ban-bajrang-dal-says-national-minorities-panel/75102-3.html Ban Bajrang Dal, says national minorities p anel] CNN-IBN, 6 October 2008
இணைப்புகள்
[தொகு]- அதிகாரப்பூர்வ இணையத்தளம் பரணிடப்பட்டது 2015-02-06 at the வந்தவழி இயந்திரம்