மகா புராணங்கள் என்பவை வியாசரால் தொகுப்பெற்ற பதினெட்டு புராணங்களாகும். இவை மகாபுராணங்களின் தகுதியான பேரண்டப் படைப்பு, பிரளயம் மூலம் உலக அழிவும், மறுபடி தோற்றமும், வெவ்வேறு மன்வந்தரங்கள், சூரிய வமிச, சந்திர வமிச வரலாறு, அரச பரம்பரைகள் சரிதம் ஆகிய ஐந்தினையும் கொண்டதாக உள்ளது. இவைகளில் ஒன்றோ, இரண்டோ தகுதி குறைவாக இருப்பவை உப புராணங்கள் என்று அழைக்கப்பெறுகின்றன. வியாசரின் சீடராக இருந்த ரோமஹர்ஷனர் என்பவர் வாயு புராணத்தினையும் இணைத்து 19 புராணங்கள் என்று கூறியதாக ஒரு செய்தியுண்டு.
வேத வியாசரின் காலத்தினை கருத்தில் கொண்டு இப்புராணங்கள் கி.மு 6 அல்லது கி.மு 7 ம் நூற்றாண்டினைச் சார்ந்தவை என்று அறியப்பெறுகின்றன. இப்புராணங்கள் தேவபாஷை என்று வழங்கப்பெறுகின்ற சமஸ்கிருக மொழியில் எழுதப்பெற்றவை. எனினும் இந்திய மொழிகள் பலவற்றில் இவை மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. கந்த புராணம், சிவமகா புராணம் போன்றவை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்த மகா புராணங்களில் பிரம்மனின் பெருமைகளை கூறுபவை ராஜசிக புராணம் என்றும், திருமாலின் பெருமையைக் கூறுபவை சத்துவ புராணம் என்றும், சிவபெருமானது பெருமைகளை கூறுபவை தாமச புராணம் என்றும் அழைக்கப்பெறுகின்றன.
பீட்சன பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஏழாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பூத பைரவ கோவிலில் அருள்செய்கிறார். சிங்கத்தை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் கேது கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான சாமுண்டி விளங்குகிறாள்.
உச்சைச்சிரவம் எனும் ஏழுதலைகளையும், பறக்கும் திறனும் கொண்ட வெள்ளைக் குதிரையானது பாற்கடல் கடையும் பொழுது தோன்றியதாகும்.
அகலிகை, துரோபதை, சீதை, தாரை, மண்டோதரி என்ற இவர்கள் ஐவரும் புராணகாலத்தில் வாழ்ந்த சிறந்த இல்லறவழிகாட்டிகளாக முன்னிருத்தப்படுகிறார்கள். இவர்களுக்கு பஞ்சகன்னிகைகள் என்று பெயர்
சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் காலமான தை , மாசி , பங்குனி , சித்திரை , வைகாசி , ஆனி ஆகிய இந்த ஆறு மாதங்களும் உத்தராயணம் எனப்படுகிறது.