இந்து நாட்காட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
A page from the Hindu calendar 1871-72.

இந்து நாட்காட்டி என்று குறிப்பிடப்படும் நாட்காட்டி காலவோட்டத்தில் ஒவ்வொரு நிலப்பகுதியிலும் மாறுபட்டுள்ள பல நாட்காட்டிகளாகும்.இந்தியத் தேசிய நாட்காட்டி அவற்றில் ஒன்றாகும்.வானியல் அறிஞர்களான ஆரியபட்டா(கிபி 499) மற்றும் வராகமிகிரர்(6ஆம் நாற்றாண்டு) வடிவமைத்த பஞ்சாங்கம் என்ற அடிப்படையில் இவை அமைந்தவை.

நாள்[தொகு]

நாள் சூரியனின் விடியலின்போது துவங்குகிறது. ஒவ்வொரு நாளும் ஐந்து பண்புகளால் அடையாளப் படுத்தப்படுகின்றன.(வடமொழியில் பஞ்ச= ஐந்து,அங்கம்=உறுப்புகள்) அவை யாவன:

  1. திதி (உதயசூரியன் எழும்போதிருக்கும் சந்திரனின் வளர்/தேய் நிலை) முப்பது நிலைகள் வரையறுக்கப்பட்டுள்ளன
  2. வாரம் வாரநாள் (ஞாயிறு முதல் சனி வரை ஏழு நாட்கள்)
  3. நட்சத்திரம் (சூரியன் வலம் வரும் வான்வெளிப்பாதையில் அமைந்துள்ள 27 நட்சத்திரக்கூட்டங்களில் உதயசூரிய காலத்தில் சந்திரன் உள்ள நட்சத்திரம்)
  4. யோகா 27 பிரிவுகளில் சூரிய விடியலில் உள்ள பிரிவு
  5. கரணம் திதிகளின் உட்பிரிவுகளில் ஒன்று.

திதிகள்[தொகு]

நிலவின் வெவ்வேறு நிலைகள் திதிகளாகக் குறிக்கப்படுகின்றன;

சுக்ல பட்சம் (வளர்பிறை) கிருட்டிணப் பட்சம் (தேய்பிறை)
அமாவாசை (புது நிலவு) பௌர்ணமி (முழுநிலவு)
பிரதமை பிரதமை
திவிதியை திவிதியை
திருதியை திருதியை
சதுர்த்தி சதுர்த்தி
பஞ்சமி பஞ்சமி
சஷ்டி சஷ்டி
சப்தமி சப்தமி
அட்டமி அட்டமி
நவமி நவமி
தசமி தசமி
ஏகாதசி ஏகாதசி
துவாதசி துவாதசி
திரயோதசி திரயோதசி
சதுர்த்தசி சதுர்த்தசி
பௌர்ணமி (முழு நிலவு) அமாவாசை (புது நிலவு)


மாதங்களின் பெயர்கள்[தொகு]

மாதம் முழுநிலவின்போது சந்திரன் உள்ள நட்சத்திரம்
சித்திரை சித்ரா, சுவாதி
வைகாசி விசாகம் , அனுராதா
ஆனி கேட்டை, மூலம்
ஆடி பூராடம் , உத்தராடம்
ஆவணி அவிட்டம்
புரட்டாசி பூரட்டாதி, உத்தரட்டாதி
ஐப்பசி அசுவனி, ரேவதி
கார்த்திகை பரணி,கார்த்திகை
மார்கழி மிருகசீரிடம்,திருவாதிரை
தை புனர்வசு ,பூசம்
மாசி மகம், ஆயில்யம்
பங்குனி பூரம்,உத்தரம், அத்தம்

மேற்கோள்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்து_நாட்காட்டி&oldid=1786912" இருந்து மீள்விக்கப்பட்டது