தமிழ்ப் புத்தாண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தமிழ்ப் புத்தாண்டு
கடைபிடிப்போர் தமிழர்கள்
வகை பண்டிகை, தமிழ் நாடு, இந்தியா,
இலங்கை
மொரிசியசு
மலேசியா
சிங்கப்பூர்
முக்கியத்துவம் தமிழ்ப் புத்தாண்டு,
கொண்டாட்டங்கள் பகிர்ந்து உண்ணுதல், பரிசு கொடுப்பது, உறவுகளைக் காணுதல்
நாள் தமிழ் நாள்காட்டியில் சித்திரை முதல் நாள்
2015 இல் நாள் ஏப்ரல் 14


தமிழ்ப் புத்தாண்டு என்பது தமிழர்கள், புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். தற்போது தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் ஈழத்திலும் சித்திரை மாதத்தின் முதல் நாள் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. 2008-2011 காலகட்டத்தில் தமிழ் நாட்டில் தை மாதம் முதல் நாளை தமிழக அரசு புத்தாண்டாக அறிவித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டு கொண்டாடப்பட்டது.[1][2]2011 இல் இவ்வாணை ரத்து செய்யப்பட்டது.

புத்தாண்டு வரலாறு[தொகு]

புதுச்சேரியிலும், ஈழத்திலும், தமிழ்நாட்டிலும் (2008க்கு முன்பு வரையும், 2011 ஆம் ஆண்டிலிருந்தும்) வழக்கத்தில் இருந்த சித்திரை முதல் நாள் புத்தாண்டு வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவனால் கிறித்துவுக்குப் பின் 78ஆம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது என்று வரலாற்று ஆசிரியர்களால் நம்பப்படுகிறது. சில வரலாற்று ஆசிரியர்கள் கனிஷ்கன் என்ற அரசனால் இது ஏற்படுத்தப்பட்டது என்று கூறுகின்றனர்.


தமிழர் விழாக்களும்
கொண்டாட்டங்களும்
தைப்பொங்கல்
இந்திர விழா
தமிழ்ப் புத்தாண்டு
ஆடிப் பெருக்கு

தொகு

1921 ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகளாரின் தலைமையில் 500 பேர் கொண்ட அறிஞர் குழு ஆய்வு செய்து தை முதல் நாளே தமிழாண்டு பிறப்பு என முடிவு செய்தது.

தமிழகத்தில் அரசியல் உத்தரவுகள்[தொகு]

தை முதல் நாள்தான் புத்தாண்டு என்று திமுக அரசால் 2008 தை மாதம் 23 ஆம் நாள் ஆண்டு அரசு ஆணையாக அறிவிக்கப்பட்டது.[3] 2011 இல் இது அதிமுக அரசால் ரத்து செய்யப்பட்டு மீண்டும் சித்திரை முதல் நாள் புத்தாண்டாக அரசால் ஒத்துக்கொள்ளப்பட்டது.[2]

சர்வதாரி புத்தாண்டு[தொகு]

மேலும் வாய்மொழி உத்தரவாகப் தமிழ்ப்புத்தாண்டு ’சர்வதாரி’ பிறந்த 13.04.2008 அன்று தமிழகத்தின் திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படக்கூடாது என்று அப்போதைய அரசால் உத்தரவிடப்பட்டு செயற்படுத்தவும்பட்டது. தமிழ்ப்புத்தாண்டன்று இறைவனின் திருச்சன்னதி முன் நின்று பஞ்சாங்கம் படிக்கும் முறையும் சர்வாதி புத்தாண்டன்று வாய்மொழி உத்தரவதிகாரத்தால் ரத்து செய்யப்பட்டு தடுக்கப்பட்டது.[4]

கருத்து வேறுபாடுகள்[தொகு]

2006-2011 வரையிருந்த தமிழக அரசு சனவரி 29, 2008 அன்று அறிவித்த, தை முதல் நாள் புத்தாண்டு[5] பொதுமக்களிடையே அதிருப்தியை உருவாக்கியது. தமிழக அரசுக்குத் தமிழகப் பாரம்பரிய விடயங்களில் தலையிட அனுமதி உண்டா என்றும் கேள்வி எழுந்தது. அதன்படி 2006-2011 வரையிருந்த தமிழக அரசும், அவ்வரசு அறிவித்த புத்தாண்டு தினத்துக்கு ஆதரவு தந்த பிரிவைச் சேர்ந்த மக்களும் தையில் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடினர்.

ஆகத்து 23, 2011ல் அப்போது ஆட்சியில் இருந்த தமிழக அரசு மீண்டும் சித்திரை ஒன்றை தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்தது.[6] அதற்கு 2006-2011 வரை இருந்த தமிழக அரசைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Bill on new Tamil New Year Day is passed unanimously
  2. 2.0 2.1 'தமிழ் புத்தாண்டு மீண்டும் சித்திரையில்'- ஜெ.
  3. தமிழ்நாடு அரசின் அறிவிப்பு
  4. குமுதம் ஜோதிடம்; 2.5.2008
  5. Bill on new Tamil New Year Day is passed unanimously
  6. http://news.oneindia.in/2011/08/23/jaya-govt-reverses-yet-another-dmk-decision.html

இவற்றையும் பார்க்கவும்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்ப்_புத்தாண்டு&oldid=1837987" இருந்து மீள்விக்கப்பட்டது