கம்போடியப் புத்தாண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கம்போடியப் புத்தாண்டு (கெமெர்: បុណ្យចូលឆ្នាំ ថ្មី)  உண்மையில் கெமெர் மொழியில் "புத்தாண்டு ஆரம்பம்" எனும் பொருள்படும் புத்தாண்டு கொண்டாடும் கம்போடிய விடுமுறையின் பெயராகும். விடுமுறையானது புத்தாண்டு தினத்தன்று தொடங்கி மூன்று நாட்கள் நீடிக்கும். இது அறுவடை பருவத்தின் இறுதியில், மழைக்காலம் தொடங்கும் முன், விவசாயிகள் தங்கள் உழைப்பின் பலனை அனுபவிக்க கொண்டாடும் கொண்டாட்டமாகும். வழக்கமாக ஏப்ரல் 13 அல்லது 14ம் தேதி கொண்டாடப்படும். வெளிநாட்டில் வாழும் கெமெர் மக்கள் ஏப்ரல் 13 அல்லது 15 ம் தேதியை அண்டிய வார இறுதி நாட்களில் கொண்டாடுவர். கெமெர் புத்தாண்டு இந்தியாவின் பல பகுதிகளில், இலங்கை, மியான்மர், தாய்லாந்து பொன்ற இடங்களில் கொண்டாடும் வழக்கமான சூரிய புதிய ஆண்டு(புத்தாண்டு) ஆரம்ப நேரத்தில் நிகழ்கிறது.

கம்போடிய மக்களும் ஆண்டுகளை கணிக்க புத்த நாட்காட்டியை பயன்படுத்துகின்றனர். [1]

References[தொகு]

  1. "Khmer Monthly Calendar". Cam-CC. April 13, 2012. 2012-04-13 அன்று பார்க்கப்பட்டது.