இந்து சமய விழாக்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது இந்து சமய விழாக்களை பட்டியலிடும் கட்டுரையாகும்.

நாள்காட்டி வகைகள்[தொகு]

பாரதத்தில் ஞாயிறு (நிரயனமுறை, செம்மஞ்சள்), திங்கள் (அமையந்தமுறை, நீலம்), திங்கள் (பூரணையந்தமுறை, சிவப்பு) நாள்காட்டிகள் பின்பற்றும் பகுதிகளின் வரைபடம்

பாரதத்தில் தற்காலத்தில் நான்கு வகை நாள்காட்டிகள் பின்பற்றப்படுகின்றன.

  1. ஞாயிறு நாள்காட்டி
    1. நிரயனமுறை - அயனபாகத்தைக் கணக்கில் கொள்ளாது புவியிலிருந்து பார்க்கும் பொழுது நாண்மீன்களின் பின்னணியில் கோள்களின் நகர்வை அளக்கும் முறை - வரைபடத்தில் செம்மஞ்சள்நிறம்
  2. திங்கள் நாள்காட்டி
    1. அமையந்தமுறை - அமையை திங்களின் கடைசி நாளாகக் கொண்டு கணக்கிடப்படும் திங்கள் - வரைபடத்தில் நீலநிறம்
    2. பூரணையந்தமுறை - பூரணையை திங்களின் கடைசி நாளாகக் கொண்டு கணக்கிடப்படும் திங்கள் - வரைபடத்தில் சிவப்புநிறம்
    3. அமைக்குப் பின் பிறை தெரியும் முதல் நாளான மூன்றாம்பிறையை(வளர்பிறை துவிதியையை) திங்களின் முதல் நாளாகக் கொண்டு கணக்கிடப்படும் திங்கள்

இவற்றில், அமையந்தம் முறையில் கணக்கிடப்படும் திங்களில் வளர்பிறை முதலிலும் தேய்பிறை இரண்டாவதாகவும் வரும். பூரணையந்தம் முறையில் கணக்கிடப்படும் திங்களில் தேய்பிறை முதலிலும் வளர்பிறை இரண்டாவதாகவும் வரும். ஒரு திங்களில் இரண்டு முறைகளிலும் வளர்பிறை பொதுவாக வரும். அமையந்தம் முறையில் வளர்பிறை பக்கத்திற்கு பிந்தைய தேய்பிறைப் பக்கத்தை அத்திங்களின் தேய்பிறைப் பக்கமாகவும் பூரணையந்தம் முறையில் வளர்பிறைப் பக்கத்திற்கு முந்தைய தேய்பிறைப் பக்கத்தை அத்திங்களின் தேய்பிறைப் பக்கமாகவும் எடுத்துக்கொள்வர்.

இவையல்லாமல், தமிழ்நாட்டில் சங்ககாலத்தில், நிரயனமுறை ஞாயிறு நாள்காட்டியுடன் சேர்த்து பூரணையைத் திங்களின் முதல் நாளாகக் கொண்டு கணக்கிடப்படும் திங்களைக் கொண்ட திங்கள் நாள்காட்டியும் இருந்துள்ளது. ஞாயிறு நாள்காட்டியில் மற்றொரு முறையான புவியிலிருந்து பார்க்கும் பொழுது ஞாயிறு உதயத்தின் வடக்கு தெற்கு நகர்வை வைத்து ஆண்டைக் கணக்கிடும் அயனமுறையைப் பற்றி அறிந்திருந்தாலும் நிரயனமுறை ஞாயிறு நாள்காட்டியையே பின்பற்றி வந்துள்ளனர்.

ஞாயிறு நாட்காட்டிப்படி கொண்டாடப்படும் விழாக்கள்[தொகு]

தமிழ்நாடு[தொகு]

பொது[தொகு]

தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் விழாக்கள்
திங்கள் நாள் நிகழ்வு வகை குறிப்பு
சித்திரை
சித்திரை பிறப்பு=1 சித்திரைப் புத்தாண்டு புத்தாண்டு சிறப்பு நிகழ்வு - பொன்னேர் உழுதல்
சித்திரை சித்திரை+பூரணை சித்திரா பௌர்ணமி, சித்ரா பௌர்ணமி விழா
சித்திரை பரணி சித்திரைப் பரணி நோன்பு
சித்திரை புனர்பூசம்+வளர்பிறை நவமி இராம நவமி பிறந்தநாள் திருவரங்கம் கோவில் பஞ்சாங்கத்தில் ஞாயிறு நாட்காட்டிப்படி இருக்கும். நாட்காட்டியில் திங்கள் நாட்காட்டிப்படி இருக்கும்.
வைகாசி
வைகாசி விசாகம்+பூரணை வைகாசி விசாகம் பிறந்தநாள் முருகன் பிறந்தநாள்
வைகாசி சோதி+வளர்பிறை சதுர்த்தசி நரசிம்ம ஜெயந்தி, நரசிம்ம செயந்தி பிறந்தநாள் திருவரங்கம் கோவில் பஞ்சாங்கத்தில் ஞாயிறு நாட்காட்டிப்படி இருக்கும். நாட்காட்டியில் திங்கள் நாட்காட்டிப்படி இருக்கும்.
ஆனி
ஆனி கேட்டை+பூரணை ஆனிக் கேட்டை சிறப்பு நிகழ்வு - ஜேஷ்டாபிஷேகம்
ஆனி அமை ஆனி அமாவாசை முன்னோர் வழிபாடு
ஆனி உத்தரம் ஆனி உத்தரம், ஆனித் திருமஞ்சனம்
ஆடி
ஆடி பிறப்பு=1 ஆடிப்பிறப்பு விழா புது விதைப்புத் தொடக்கம், வேறுபெயர்=ஆடிப் பண்டிகை[1]
ஆடி 18 ஆடிப்பெருக்கு விழா வேறுபெயர்கள்=ஆடிப் பதினெட்டு,ஆடிப் பதினெட்டாம்பெருக்கு,பதினெட்டாம்பெருக்கு,ஆடி நோன்பு
ஆடி 28 ஆடி இருபத்தெட்டாம்பெருக்கு விழா வேறுபெயர்கள்=இருபத்தெட்டாம்பெருக்கு,இருபத்தெட்டாம் ஆடிப் பெருக்கு
ஆடி கார்த்திகை ஆடிக் கார்த்திகை நோன்பு முருகன் வழிபாடு
ஆடி அமை ஆடி அமாவாசை முன்னோர் வழிபாடு
ஆடி பூரம் ஆடிப் பூரம் பிறந்தநாள் அம்மன் பிறந்தநாள், ஆண்டாள் பிறந்தநாள்
ஆடி செவ்வாய் ஆடிச் செவ்வாய் நோன்பு முருகன் வழிபாடு
ஆடி வெள்ளி ஆடி வெள்ளி நோன்பு அம்மன் வழிபாடு, புற்று நாகர் வழிபாடு
ஆடி கடைசி நாள் ஆடி அறுதி [1]
ஆவணி
ஆவணி பிறப்பு=1 விஷூ புத்தாண்டு மலையாள புத்தாண்டு
ஆவணி ஓணம்+பூரணை முன் வரும் அத்தம் முதல் ஓணம்+பூரணை வரை ஆவணி ஓணம் விழா புது அறுவடை விழா, [1]
ஆவணி உரோகணி+தேய்பிறை அட்டமி கிருஷ்ண ஜெயந்தி பிறந்தநாள் திருவரங்கம் கோவில் பஞ்சாங்கத்தில் ஞாயிறு நாட்காட்டிப்படி இருக்கும். நாட்காட்டியில் திங்கள் நாட்காட்டிப்படி இருக்கும்.
ஆவணி மூலம் ஆவணி மூலம், பிட்டுத்திருவிழா விழா
புரட்டாசி
புரட்டாசி சனி புரட்டாதிச் சனி நோன்பு விண்ணவன் வழிபாடு
ஐப்பசி
ஐப்பசி பிறப்பு=1 முதல் கடைசி நாள் வரை ஐப்பசி முழுக்கு

ஐப்பசி முழுக்கு[1][2][3]

  1. பிறப்பு=1 - ஐப்பசி முதல்முழுக்கு[4]
  2. கடைசி நாள் - கடைமுழுக்கு - வேறுபெயர்=கடைமுகம்
ஐப்பசி அமை ஐப்பசி அமாவாசை முன்னோர் வழிபாடு
கார்த்திகை
கார்த்திகை பிறப்பு=1 முடவன் முழுக்கு வேறுபெயர்=முடமுழுக்கு
கார்த்திகை கார்த்திகை+பூரணை முதலாக மூன்று நாள்கள் கார்த்திகை விளக்கீடு விழா

புது அறுவடை விழா

  1. கார்த்திகை+பூரணை நாளிற்கு முந்தைய நாள்=பரணி - பரணி விளக்கீடு
  2. கார்த்திகை+பூரணை - பெருங்கார்த்திகை - வேறுபெயர்=திருக்கார்த்திகை - சிறப்பு நிகழ்வு=மாவளி திருவிழா - [1]
  3. கார்த்திகை+பூரணை அடுத்து வரும் இருநாள்கள் - நாட்டுக்கார்த்திகை, காட்டுக்கார்த்திகை
கார்த்திகை திங்கள் கார்த்திகைத் திங்கள் நோன்பு முருகனுக்குச் சிறப்புரிமை நாள்[1]
மார்கழி
மார்கழி பிறப்பு=1 முதல் கடைசி நாள் வரை மார்கழி நோன்பு நோன்பு சிறப்பு நிகழ்வு - மார்கழி நீராடல்[1]
மார்கழி ஆதிரை முன் 9 நாள்கள் முதல் ஆதிரை வரை திருவெம்பாவை நோன்பு நோன்பு

சிறப்பு நிகழ்வு

  1. ஆதிரை - மார்கழித் திருவாதிரை, திருவாதிரை நோன்பு, ஆருத்திரா தரிசனம்
மார்கழி மூலம்+அமை அனுமன் ஜெயந்தி பிறந்தநாள்
மார்கழி வளர்பிறை ஏகாதசி முன் வரும் வளர்பிறை பிரதமை-தசமி பகல் பத்து
மார்கழி கார்த்திகை+வளர்பிறை ஏகாதசி வைகுண்ட ஏகாதசி
மார்கழி வளர்பிறை ஏகாதசி-தேய்பிறை பஞ்சமி இராப் பத்து, திருவாய்மொழித் திருவிழா
மார்கழி கடைசி நாள் போகி விழா பழையன கழித்து புது அறுவடைக்கு ஆயத்தம் ஆகும் விழா
தை
தை பிறப்பு=1 முதல் 3 வரை தைப்பொங்கல் விழா

புதியன புகும் புது அறுவடை விழா

  1. பிறப்பு=1 - பெரும்பொங்கல் - ஞாயிறு வழிபாடு - வேறுபெயர்=சூரியப்பொங்கல்
  2. 2 - மாட்டுப் பொங்கல் - ஆநிரை வழிபாடு - வேறுபெயர்=பட்டிப்பொங்கல்
  3. 3 - கன்றுப்பொங்கல்
    1. காணும் பொங்கல்(உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல்)
    2. கன்னிப்பொங்கல்(உடன்பிறந்த அண்ணன் தம்பிமார் நலமும் வளமுமாய் வாழ அக்காள் தங்கைமார் செய்யும் நோன்பு(கணுப்பண்டிகை)[5][6][7][8], மணமாகாத கன்னிப்பெண்கள் நல்ல கணவன் கிடைக்க மார்கழி மாத நோன்பிருந்து பொங்கல் வைத்து வழிபடுதல் நிகழ்வு[9])
    3. வட்டார வேறுபாடு
      1. தஞ்சாவூர் வட்டாரம்=கொப்பிப்பொங்கல்[10]
      2. தென்மாவட்டங்கள்=சிறுவீட்டுப்பொங்கல்[11]
      3. கொங்கு=பூப்பொங்கல்/பூ நோன்பு/பூப்பறிக்கும் நோன்பு[8]
      4. தகடூர்(தருமபுரி),கடலூர் வட்டாரங்கள்=நாகர்பொங்கல்(புற்று நாகர் வழிபாடு) - சேலம் வட்டாரத்தில் தைத் திங்களில் ஏதேனும் ஒரு நாளில் நாகர்பொங்கல் நிகழும்
தை பூசம்+பூரணை தைப்பூசம் விழா முருகன் வழிபாடு
தை அமை தை அமாவாசை முன்னோர் வழிபாடு
தை கார்த்திகை தைக் கார்த்திகை நோன்பு முருகன் வழிபாடு
தை செவ்வாய் தைச் செவ்வாய் நோன்பு
தை வெள்ளி தை வெள்ளி நோன்பு
மாசி
மாசி மகம்+பூரணை மாசி மகம் விழா
பங்குனி
பங்குனி பிறப்பு=1 காரடையான் நோன்பு நோன்பு
பங்குனி உத்தரம்+பூரணை பங்குனி உத்தரம் விழா முருகன் வழிபாடு
பங்குனி திங்கள் பங்குனித் திங்கள் நோன்பு அம்மன் வழிபாடு

உள்ளூர்[தொகு]

தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் உள்ளூர் விழாக்கள்
திங்கள் நாள் நிகழ்வு வகை மாவட்டம் குறிப்பு
சித்திரை சித்திரை+பூரணை முன் 10 நாள்கள் முதல் சித்திரை+பூரணை வரை சித்திரைத் திருவிழா, மீனாட்சி சுந்தரேசுவரர் திருமணம், அழகர் ஆற்றில் இறங்குதல் விழா மதுரை
வைகாசி மூலம் தஞ்சாவூர் முத்துப்பல்லக்கு விழா விழா தஞ்சாவூர் திருஞானசம்பந்தரின் குருபூசையை முன்னிட்டு நிகழும் விழா
வைகாசி முத்துப்பந்தல் விழா விழா தஞ்சாவூர்
ஆனி பூரணை மாங்கனித் திருவிழா விழா காரைக்கால்
ஆடி பிறப்பு=1 தேங்காய் சுடும் விழா விழா கருவூர், ஈரோடு, சேலம், நாமக்கல்
ஆடி உத்தராடம்+பூரணை ஆடித் தவசு விழா தென்காசி [1]
ஆடி வண்டி வேடிக்கை சேலம்
ஆடி ஞாயிறு ஆடி ஞாயிறு சென்னை [1]
ஆவணி ஞாயிறு ஆவணி ஞாயிறு நோன்பு நாஞ்சில் நாடு [1]
தை 3 வாழைப்பழம் சூறைவிடும் விழா விழா திண்டுக்கல்
தை 5 ஆற்றுத் திருவிழா விழா கடலூர், விழுப்புரம்
தை 8 மயிலார் திருவிழா, மயிலார் நோன்பு விழா காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, திருப்பத்தூர் காணும்பொங்கல் விழா முடிந்த ஆறாம்நாள்=தை 8, வேறுபெயர்கள்=மயிலார்,மயிலார் பண்டிகை,மயில் பண்டிகை, [12][13][14][15][16][17][18][19][20][21]
தை முதல் ஞாயிறு தலை ஞாயிறு ஞாயிறு வழிபாடு கன்றுக்குட்டிப்பொங்கல், [16]
பங்குனி புனர்பூசம் நந்தி திருமண விழா விழா அரியலூர்

குறிப்பு :

  1. வானியல் குறிப்பு
    1. ஞாயிறு நாட்காட்டி என்றால் திங்கள் என்பது ஞாயிற்றின் இருப்பிடத்தைக் குறிக்கும்(சித்திரைத் திங்கள்=மேழ ஞாயிறு,...,பங்குனித் திங்கள்=மீன ஞாயிறு). 1 ஓரைவட்டம்(ராசிச்சக்ரம்)=12 ஓரை(ராசி)=360 பாகை.
    2. நாளில் உள்ள நாண்மீன்(நாள்+மீன்=நாண்மீன்,நக்ஷத்ரம்) என்பது திங்களின் இருப்பிடத்தைக் குறிக்கும்.
      1. ஞாயிறு நாட்காட்டியில் நாள் என்றால் நாண்மீன். நாண்மீன் என்றால் திங்களின் இருப்பிடத்தைக் குறிக்கும். 1 நாண்மீன்வட்டம்=27 நாண்மீன்=360 பாகை.
      2. திங்கள் நாட்காட்டியில் நாள் என்றால் திதி. திதி என்றால் புவியை நடுவில் வைத்துப் பார்க்கும் பொழுது ஞாயிறு, திங்கள் இடையே உள்ள கோணத்தைக் குறிக்கும். ஞாயிறு-திங்கள்-புவி=0 பாகை=அமை. ஞாயிறு-புவி-திங்கள்=180 பாகை=பூரணை.
    3. நாளைக் குறிக்கும் முறை=திங்கள்+நாள்
      1. ஞாயிறு நாட்காட்டியில், ஞாயிறு இருக்கும் ஓரை=திங்கள், திங்கள் இருக்கும் நாண்மீன்=நாள். இவை இரண்டையும் சேர்த்தே நாள் குறிப்பிடப்படுகிறது. காட்டாக, வைகாசி விசாகம் என்றால் அன்று ஞாயிறு இடப ஓரையிலும்(வைகாசித் திங்கள்=இடப ஞாயிறு) திங்கள் விசாக நாண்மீனிலும் இருப்பதாகப் பொருள்.
      2. ஒரு நிகழ்வு நிகழும் பொழுதும் நாள் இதன்படியே கூறப்படுகிறது. நாள் எண் என்பது இன்று ஆங்கில நாட்காட்டியில் உள்ளதைப் போல புறவாழ்வின்(Civil) பயன்பாட்டிற்காக பயன்படுவது. அதே நேரம், இங்கு கூடுதலாக நாள் எண் என்பது ஞாயிற்றின் இருப்பிடத்தையும் குறிக்கிறது. காட்டாக, ஆடி 18 என்றால் தோராயமாக ஞாயிறானவர் ஆயிலிய நாண்மீனில் நுழைகிற நாள் என அறியலாம். இது ஆங்கில நாட்காட்டியில் இயலாது.
      3. பிறந்தநாள்
        1. ஞாயிறு நாட்காட்டியில், ஒருவர் பிறக்கும் பொழுது ஞாயிறு இருக்கும் ஓரை=பிறந்ததிங்கள். திங்கள் இருக்கும் நாண்மீன்=பிறந்தநாள். ஞாயிறு நாட்காட்டியில், ஒருவர் பிறந்த பொழுது ஞாயிறு இருந்த அதே ஓரைக்கும் திங்கள் இருந்த அதே நாண்மீனிற்கும் வருவதே பிறந்தநாள் ஆகும். காட்டாக, வைகாசி விசாகம் பிறந்தநாள் என்றால் ஞாயிறு இடப ஓரையிலும்(வைகாசித் திங்கள்=இடப ஞாயிறு) திங்கள் விசாக நாண்மீனிலும் இருப்பதாகப் பொருள். ஆண்டுதோறும் இச்சேர்க்கை நிகழும் நாளே பிறந்தநாள்.
        2. திங்கள் நாட்காட்டியில், ஒருவர் பிறக்கும் பொழுது நடக்கும் திங்கள்=பிறந்ததிங்கள், ஒருவர் பிறக்கும் பொழுது இருக்கும் திதி=பிறந்தநாள்.
        3. வயதைக் கூறும் பொழுது, ஒருவர் புவியில் பிறக்கும் நாள்=முதலாம் பிறந்தநாள். அடுத்த பிறந்தநாள் வரும் வரை வயது என்பது ஒன்று என்றே கூறப்படும். அதாவது, இதுவரை முடிந்த வயதைக் கூறாமல் தற்பொழுது நடக்கும் வயதைக் கூறுவது மரபு.
  2. பொதுக் குறிப்பு
    1. விழா என்றால் நோன்பும் வழிபாடும் சேர்ந்தே இருக்கும்
    2. நோன்பு என்றால் வழிபாடும் சேர்ந்தே இருக்கும்
    3. பிறந்தநாள் என்றால் வழிபாடும் சேர்ந்தே இருக்கும்

ஞாயிறுப்பெயர்ச்சி

  1. ஓரைவட்டத்தில் நிகழும் பெயர்ச்சி=திங்கட்பிறப்பு - ஒவ்வொரு திங்களின் பொழுதும் அதற்கான ஓரை, ஞாயிறு உதயத்தின் பொழுது உதயமாகும்
    1. சங்கராந்தி
      1. சித்திரைப்பிறப்பு - மேழ சங்கராந்தி
      2. ஆடிப்பிறப்பு - கடக சங்கராந்தி
      3. தைப்பிறப்பு - மகர சங்கராந்தி
  2. நாண்மீன்வட்டத்தில் நிகழும் பெயர்ச்சி
    1. கார்த்திகை - ஒவ்வொரு கார்த்திகையின் பொழுதும் அதற்கான நாண்மீன், ஞாயிறு உதயத்தின் பொழுது உதயமாகும்
      1. அச்சுவினி=அச்சுவினிக் கார்த்திகை, பரணி=பரணிக் கார்த்திகை, கார்த்திகை=கார்த்திகைக் கார்த்திகை,...,இரேவதி=இரேவதிக் கார்த்திகை
    2. பிற
      1. ஞாயிறானவர் கார்த்திகை(அழல்=நெருப்பு,அழல்=கார்த்திகை) நாண்மீனில் பயணிக்கும் நாள்கள் அக்கினி நட்சத்திரம் ஆகும். இதை பல்வேறு முறைகளில் கணக்கிட்டுப் பின்பற்றுகின்றனர்.
        1. முறை 1
          1. பரணி 3-கார்த்திகை-உரோகணி 2 - அக்கினி நட்சத்திரம்
            1. கார்த்திகை - கத்தரி
        2. முறை 2
          1. சித்திரை கடைசி ஏழுநாள்கள்-வைகாசி முதல் ஏழுநாள்கள் - அக்கினி நட்சத்திரம்
      2. மகம் 4 - ஆவணி உச்சம்
      3. பூராடம் - கருவோட்டம்=கர்போட்டம்

வியாழன்பெயர்ச்சி

பிற திருநாள்கள்

  1. சைவம்
    1. நடராசர் அபிஷேகம்
      1. சித்திரை ஓணம்
      2. ஆனி உத்தரம்
      3. ஆவணி வளர்பிறை சதுர்த்தசி
      4. புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசி
      5. மார்கழி ஆதிரை
      6. மாசி வளர்பிறை சதுர்த்தசி
    2. குருபூசை
      1. சமயக்குரவர் நால்வர் குருபூசை
        1. சித்திரைச் சதயம் - திருநாவுக்கரசர் குருபூசை
        2. வைகாசி மூலம் - திருஞானசம்பந்தர் குருபூசை
        3. ஆடிச் சோதி - சுந்தரர் குருபூசை
        4. ஆனி மகம் - மாணிக்கவாசகர் குருபூசை
      2. நாயன்மார்கள் குருபூசை
  2. வைணவம்
    1. பிறந்தநாள்
      1. ஆழ்வார்கள் பிறந்தநாள்
      2. ஆசாரியார்கள் பிறந்தநாள்

நோன்பும் ஆண்டுவிழாவும்

பிற

கேரளம்[தொகு]

துளுவம்[தொகு]

குடகு[தொகு]

பிற மாநிலங்கள்[தொகு]

வியாழன்பெயர்ச்சி

திங்கள் நாட்காட்டிப்படி கொண்டாடப்படும் விழாக்கள்[தொகு]

திங்கள் நாட்காட்டிப்படி கொண்டாடப்படும் விழாக்கள்
திங்கள் நாள் நிகழ்வு வகை குறிப்பு
சித்திரை
சித்திரை வளர்பிறை பிரதமை உகாதி, குடீ பாடவா, நவ்ரே புத்தாண்டு
  1. உகாதி=கன்னடம் மற்றும் தெலிங்கு புத்தாண்டு - தற்பொழுது நடக்கும் சதுர்யுகத்தில் தற்பொழுது நடக்கும் நான்காவது உகமான கலியுகம் இந்நாளில் பிறந்ததால் இந்நாள் உகாதி என்றழைக்கப்படுகிறது
  2. குடீ பாடவா=மராத்தி மற்றும் கொங்கணி புத்தாண்டு
  3. நவ்ரே=காசுமீரி புத்தாண்டு - சங்கத மொழியின் நவ வருஷம் (புத்தாண்டு) என்பதே காஷ்மீர மொழியில் நவ்ரே என அழைக்கப்படுகிறது
சித்திரை வளர்பிறை துவிதியை=மூன்றாம்பிறை சேதி சந்த் புத்தாண்டு சிந்தி இந்துக்களின் புத்தாண்டு - சேதி=சித்திரை,சந்த்=சந்திரன்,பிறை தெரியும் முதல் நாள் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது
சித்திரை வளர்பிறை பிரதமை-நவமி வசந்த நவராத்திரி விழா
சித்திரை வளர்பிறை நவமி இராம நவமி பிறந்தநாள்
வைகாசி
வைகாசி வளர்பிறை திரிதியை அட்சய திருதியை தற்பொழுது நடக்கும் சதுர்யுகத்தில் நூறு விழுக்காடு அறமே நிறைந்திருக்கும் முதல் உகமான கிருதயுகம்(சத்தியயுகம்) இந்நாளில் பிறந்ததால் இந்நாளை கிருதயுகத்தின் புத்தாண்டாகக் கொண்டாடி இந்நாளில் அறச்செயல்கள் புரிவது மரபு
வைகாசி வளர்பிறை பஞ்சமி சங்கர ஜெயந்தி பிறந்தநாள்
வைகாசி வளர்பிறை சதுர்த்தசி நரசிம்ம ஜெயந்தி, நரசிம்ம செயந்தி பிறந்தநாள்
ஆனி
ஆனி வளர்பிறை பூரணை ஏர்வாக பௌர்ணமி விழா

புது விதைப்பு விழா,ஆந்திர மாநிலத்தில் கொண்டாடப்படுவது[23]

ஆனி வளர்பிறை பூரணை வட பூர்ணிமா நோன்பு வடம்=ஆலமரம்
ஆடி
ஆடி வளர்பிறை துவிதியை=மூன்றாம்பிறை ஆசாடி பீஜ் புத்தாண்டு குசராத்தின் கச்சுப்பகுதியின் புத்தாண்டு, புது விதைப்பு விழா, ஆசாடி=ஆடி, பீஜ்=துவிதியை
ஆடி வளர்பிறை ஏகாதசி சயன ஏகாதசி
ஆடி வளர்பிறை பூரணை குரு பூர்ணிமா ஆசிரியர் வழிபாடு
ஆடி (அமையந்தம் முறை) தேய்பிறை அமை பீம அமாவாசை முன்னோர் வழிபாடு
ஆவணி
ஆவணி வளர்பிறை பஞ்சமி கருட பஞ்சமி
ஆவணி வளர்பிறை பூரணைக்கு முன் வரும் வெள்ளி வரலட்சுமி நோன்பு நோன்பு
ஆவணி வளர்பிறை பூரணை ரக்ஷா பந்தன் விழா
ஆவணி (அமையந்தம் முறை), புரட்டாசி (பூரணையந்தம் முறை) தேய்பிறை சதுர்த்தி மகாசங்கடகர சதுர்த்தி
ஆவணி (அமையந்தம் முறை), புரட்டாசி (பூரணையந்தம் முறை) தேய்பிறை அட்டமி கிருஷ்ண ஜெயந்தி பிறந்தநாள்
புரட்டாசி
புரட்டாசி வளர்பிறை சதுர்த்தி விநாயக சதுர்த்தி விழா

பெருவிழாவுடன் வரும் விழாக்கள்

  1. வளர்பிறை திரிதியை - கௌரி ஹப்பா
  2. வளர்பிறை சதுர்த்தி - விநாயக சதுர்த்தி
  3. வளர்பிறை சதுர்த்தசி - அனந்த சதுர்த்தசி
புரட்டாசி வளர்பிறை பஞ்சமி ரிஷி பஞ்சமி எழுமுனி வழிபாடு
புரட்டாசி வளர்பிறை சப்தமி முக்தாபரண சப்தமி ஞாயிறு வழிபாடு
புரட்டாசி வளர்பிறை துவாதசி வாமன ஜெயந்தி பிறந்தநாள்
புரட்டாசி (அமையந்தம் முறை), ஐப்பசி (பூரணையந்தம் முறை) தேய்பிறை பிரதமை-அமை மகாளய பட்சம் முன்னோர் வழிபாடு
  1. தேய்பிறை அமை - மகாளய அமாவாசை
ஐப்பசி
ஐப்பசி வளர்பிறை பிரதமை-நவமி துர்கா பூஜை, நவராத்திரி நோன்பு விழா

பெருவிழாவுடன் வரும் விழாக்கள்

  1. வளர்பிறை அட்டமி - துர்கா அஷ்டமி
  2. வளர்பிறை நவமி - மகாநவமி, ஆயுத பூஜை, சரசுவதி பூசை
  3. வளர்பிறை தசமி - விஜயதசமி

சிறப்பு நிகழ்வு - கொலு

ஐப்பசி வளர்பிறை பூரணை சரத் பூர்ணிமா விழா
ஐப்பசி (அமையந்தம் முறை), கார்த்திகை (பூரணையந்தம் முறை) தேய்பிறை திரிதியை அட்ல தத்தே நோன்பு
ஐப்பசி (அமையந்தம் முறை), கார்த்திகை (பூரணையந்தம் முறை) தேய்பிறை சதுர்த்தி கரக சதுர்த்தி நோன்பு
ஐப்பசி (அமையந்தம் முறை), கார்த்திகை (பூரணையந்தம் முறை) தேய்பிறை அமை தீபாவளி விழா

முன்னோர் வழிபாடு, புது அறுவடை விழா

  1. தேய்பிறை துவாதசி - கோவத்ச துவாதசி
  2. தேய்பிறை திரியோதசி - தன திரயோதசி
  3. தேய்பிறை சதுர்த்தசி - நரக சதுர்த்தசி
  4. தேய்பிறை அமை - லட்சுமி பூஜை, காளி பூஜை, கேதாரகௌரி விரதம்
  5. கார்த்திகை வளர்பிறை பிரதமை - பலி பிரதிபதம், கோவர்தனன் பூஜை
  6. கார்த்திகை வளர்பிறை துவிதியை - பௌ-பீஜ்
கார்த்திகை
கார்த்திகை வளர்பிறை பிரதமை பெஸ்து வரஸ் புத்தாண்டு குசராத்தி புத்தாண்டு, புது அறுவடை விழா, பெஸ்து=புது, வரஸ்=வருஷம்
கார்த்திகை வளர்பிறை பிரதமை-சட்டி கந்த சஷ்டி, சூரசம்ஹாரம் விழா
கார்த்திகை வளர்பிறை சட்டி சத் பூசை ஞாயிறு வழிபாடு சத்=சஷ்டி
கார்த்திகை வளர்பிறை ஏகாதசி பிரபோதினி ஏகாதசி
கார்த்திகை வளர்பிறை பூரணை தேவ தீபாவளி விழா
மார்கழி
மார்கழி வளர்பிறை பூரணை தத்த ஜெயந்தி பிறந்தநாள்
தை
மாசி
மாசி வளர்பிறை சதுர்த்தி கணேச ஜெயந்தி பிறந்தநாள்
மாசி வளர்பிறை பஞ்சமி வசந்த பஞ்சமி
மாசி வளர்பிறை சப்தமி ரத சப்தமி ஞாயிறு வழிபாடு
மாசி (அமையந்தம் முறை), பங்குனி (பூரணையந்தம் முறை) தேய்பிறை சதுர்த்தசி மகா சிவராத்திரி நோன்பு
பங்குனி
பங்குனி வளர்பிறை பூரணை ஹோலி விழா

பூரணையந்தம் முறையில் சித்திரைப் புத்தாண்டிற்கு முந்தைய நாள்=இளவேனிலை வரவேற்கும் விழா

  1. வளர்பிறை சதுர்த்தசி - ஹோலிகா தகனம்
  2. வளர்பிறை பூரணை - ஹோலி
  3. பங்குனி(அமையந்தம் முறை)/சித்திரை(பூரணையந்தம் முறை) தேய்பிறை பஞ்சமி - ரங்க பஞ்சமி

குறிப்பு :

  1. திங்கள் நாட்காட்டிப்படி கணிக்கப்பட்ட ஒரு நாளை அப்படியே ஞாயிறு நாட்காட்டியில் பார்த்தால் சில ஆண்டுகளில் திங்கள் மாறி வரும். காட்டாக, இராம நவமி திங்கள் நாட்காட்டிப்படி சித்திரைத் திங்களில் வரும். அதே நேரம், திங்கள் நாட்காட்டிப்படி கணிக்கப்பட்ட அந்த நாளை ஞாயிறு நாட்காட்டியில் பார்த்தால், சில ஆண்டுகளில் பங்குனியில் வரும். சில ஆண்டுகளில் சித்திரையில் வரும். ஞாயிறு நாட்காட்டியில், ஒரு விழாவின் திங்கள் மாறி மாறி வந்தாலே அது திங்கள் நாட்காட்டிப்படி வரும் விழா என்று பொருள்.

நோன்பும் ஆண்டுவிழாவும்

வேறுபாடு

  1. ஆண்டுப்பிறப்பு
  2. புற்று நாகர் வழிபாடு
    1. முறை 1 - ஆந்திரம்,தெலிங்கானம்,கன்னாடகம் - மூன்றுநாள்கள் விழா - [24]
      1. கார்த்திகை வளர்பிறை சதுர்த்தி - நாக சதுர்த்தி
      2. கார்த்திகை வளர்பிறை பஞ்சமி - நாக பஞ்சமி
      3. கார்த்திகை வளர்பிறை சஷ்டி - நாக சஷ்டி - வேறுபெயர்=சுப்பிரமணிய சஷ்டி
    2. முறை 2
      1. மார்கழி வளர்பிறை பஞ்சமி - நாக பஞ்சமி - ஆந்திரம்
      2. மார்கழி வளர்பிறை சஷ்டி - கந்த சஷ்டி - கன்னாடகம் - வேறுபெயர்=சுப்பிரமணிய சஷ்டி,சம்ப சஷ்டி
    3. முறை 3 - ஆந்திரம்,தெலிங்கானம் மாநிலங்களில் சிலர்,கன்னாடகம் உட்பட பிற மாநிலங்கள்
      1. ஆவணி வளர்பிறை சதுர்த்தி - நாக சதுர்த்தி
      2. ஆவணி வளர்பிறை பஞ்சமி - நாக பஞ்சமி
    4. முறை 4 - குசராத்து[25],கன்னாடகம்,இராசத்தானம்
      1. ஆவணி (அமையந்தம் முறை)/புரட்டாசி (பூரணையந்தம் முறை) தேய்பிறை பஞ்சமி - நாக பஞ்சமி
  3. அனுமன் ஜெயந்தி
    1. சித்திரை வளர்பிறை பூரணை=சித்ரா பௌர்ணமி - வடமாநிலங்கள்
    2. வைகாசி (அமையந்தம் முறை) தேய்பிறை தசமி - ஆந்திரம்,தெலிங்கானம்,கன்னாடகம் - [26][27]
    3. மார்கழி வளர்பிறை திரியோதசி - கன்னாடகம் - [28]
  4. பலராம ஜெயந்தி
    1. வைகாசி வளர்பிறை திரிதியை=அட்சய திருதியை
    2. ஆவணி வளர்பிறை பூரணை
    3. புரட்டாசி (பூரணையந்தம் முறை) தேய்பிறை சஷ்டி
  5. துர்கா பூசை
  6. மகாலட்சுமி பூசை
  7. சரசுவதி பூசை
    1. ஐப்பசி வளர்பிறை நவமி - சரசுவதி பூசை
    2. மாசி வளர்பிறை பஞ்சமி - வசந்த பஞ்சமி
  8. விசுவகருமா பூசை
    1. புரட்டாசி வளர்பிறை பஞ்சமி - ரிஷி பஞ்சமி
  9. ரிஷி பஞ்சமி
    1. புரட்டாசி வளர்பிறை பஞ்சமி - ரிஷி பஞ்சமி
    2. மாசி வளர்பிறை பஞ்சமி - வசந்த பஞ்சமி
  10. ரக்ஷா பந்தன்
    1. ஆவணி வளர்பிறை பூரணை - ரக்சா பந்தன்
    2. புரட்டாசி வளர்பிறை பஞ்சமி - ரிஷி பஞ்சமி
  11. பாய் தூஜ்
  12. வட சாவித்திரி

பிற

பிற[தொகு]

பிற

நோன்பு

பிறை வழிபாடு

பிறந்தநாள்

பிற

மேற்கோள்[தொகு]

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 பரிதிமாற் கலைஞர் நூற்றாண்டுவிழா மலர். வி.சூ.சுவாமிநாதன், மதுரை. 1970. பக். 66-71. https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp0jZly&tag=பரிதிமாற்+கலைஞர்+நூற்றாண்டுவிழா+மலர். பார்த்த நாள்: 09 சனவரி 2024. 
  2. "ஐப்பசி துலா ஸ்நானம்..காவிரியில் புனித நீராடி தர்ப்பணம் அளித்தால் என்னென்ன நன்மைகள்!". ஒன்இந்தியா. Archived from the original on 2024-01-04. பார்க்கப்பட்ட நாள் 09 சனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "தமிழ் - தமிழ் அகர முதலி". Archived from the original on 2024-01-08. பார்க்கப்பட்ட நாள் 09 சனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "ஐப்பசி முதல் முழுக்கு திருப்பராய்த்துறை காவிரியில் துலாஸ்நானம் தீர்த்தவாரி: மயிலாடுதுறை துலாகட்டத்திலும் திரளான பக்தர்கள் புனித நீராடினர்". தினகரன். Archived from the original on 2024-01-08. பார்க்கப்பட்ட நாள் 09 சனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. பொங்கல் (மகர சங்கராந்தி) போகி, மாட்டுப் பொங்கல், கன்னிப்பொங்கல் வரலாறு. ஶ்ரீ ராமகிருஷ்ணா பிரஸ், மதுரை. பக். 23-24. https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZpekJt9&tag=பொங்கல்+(மகர+சங்கராந்தி)+போகி%2C+மாட்டுப்+பொங்கல்%2C+கன்னிப்பொங்கல்+வரலாறு. பார்த்த நாள்: 09 சனவரி 2024. 
  6. "காணும் பொங்கல்... கணுப்பிடி... உடன் பிறந்தவர்களுக்கு ஓர் நாள்..!!". செய்திப்புனல். Archived from the original on 2023-10-18. பார்க்கப்பட்ட நாள் 09 சனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  7. "பொங்கலோ பொங்கல்.. உறவுகளுடன் கூடி கொண்டாடுவோம்..காப்பு கட்ட..பொங்கல் வைக்க நல்ல நேரம்". ஒன்இந்தியா. Archived from the original on 2024-01-08. பார்க்கப்பட்ட நாள் 09 சனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  8. 8.0 8.1 "காக்காப்பிடி வச்சேன்... கணுப்பிடி வச்சேன்: பாசத்தை வெளிப்படுத்தும் பூப்பொங்கல்". தினமலர். Archived from the original on 2023-10-18. பார்க்கப்பட்ட நாள் 09 சனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  9. "கன்னிப் பெண்களின் நோன்பு வழிபாடு". மாலைமலர். Archived from the original on 2024-01-08. பார்க்கப்பட்ட நாள் 09 சனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  10. "வீட்டுப்பொங்கல் மாட்டுப்பொங்கல் கன்னிப்பொங்கல்... இது கொப்பி பொங்கல்!". குங்குமம் இதழ். Archived from the original on 2024-01-02. பார்க்கப்பட்ட நாள் 08 சனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  11. "பெண் குழந்தைகளைக் கொண்டாடும் சிறுவீட்டுப் பொங்கல்... எப்படி கொண்டாடப்படுகிறது?". விகடன் இதழ். Archived from the original on 2024-01-02. பார்க்கப்பட்ட நாள் 08 சனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  12. "மயிலார் பண்டிகை!". கல்கி இதழ். Archived from the original on 2024-01-22. பார்க்கப்பட்ட நாள் 22 சனவரி 2024.
  13. "மயிலார் பண்டிகை கொண்டாட்டம்". தினமலர். Archived from the original on 2024-01-22. பார்க்கப்பட்ட நாள் 22 சனவரி 2024.
  14. "மயிலார் பண்டிகை கொண்டாடுங்களேன். பொங்கலுக்கு அடுத்துவரும் அற்புத பண்டிகை!". Times தமிழ். Archived from the original on 2024-01-22. பார்க்கப்பட்ட நாள் 22 சனவரி 2024.
  15. "தை மாத சிறப்பு வழிபாடு! மயிலார் நோன்பு!". சக்தி விகடன். Archived from the original on 2024-01-22. பார்க்கப்பட்ட நாள் 22 சனவரி 2024.
  16. 16.0 16.1 பேரா. சுந்தரசண்முகனார் (2001). கெடிலக் கரை நாகரிகம். மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம். பக். 444-445. https://ta.wikisource.org/wiki/பக்கம்:கெடிலக்_கரை_நாகரிகம்.pdf/445. பார்த்த நாள்: 23 சனவரி 2024. 
  17. "மயிலார்". அகராதி. Archived from the original on 2024-01-22. பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2024.
  18. "மயிலார்". வள்ளுவர் வள்ளளார் வட்டம். Archived from the original on 2024-01-22. பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2024.
  19. "அருள்மிகு வேம்புலியம்மன் திருக்கோயில்". இந்து சமய அறநிலையத்துறை, தமிழ்நாடு அரசு. Archived from the original on 2024-01-22. பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2024.
  20. தேவநேயப் பாவாணர். தமிழர் மதம். தமிழ் இணையக் கல்விக்கழகம். பக். 30-31. https://www.tamilvu.org/slet/lA100/lA100pd3.jsp?bookid=190&pno=31. பார்த்த நாள்: 23 சனவரி 2024. 
  21. "மயிலார் தினம்; ராணிப்பேட்டையில் வெகு விமரிசையாக நடைபெற்ற எருது காட்டும் விழா!". ETV பாரதம். Archived from the original on 2024-01-25. பார்க்கப்பட்ட நாள் 25 சனவரி 2024.
  22. "Pana Sankranti, Odia New Year Observed Across Odisha; PM, CM Greet People". OdishaTV. Archived from the original on 2024-01-30. பார்க்கப்பட்ட நாள் 30 சனவரி 2024.
  23. "Farmers celebrate Eruvaka Pournami". The Times of India. Archived from the original on 2024-01-28. பார்க்கப்பட்ட நாள் 28 சனவரி 2024.
  24. "Nagula Chavithi 2022 on October 28th: Know significance, greetings and why it's celebrated". The Economic Times. Archived from the original on 2024-01-28. பார்க்கப்பட்ட நாள் 28 சனவரி 2024.
  25. "Nag Pancham in Gujarat: Date, tithi, puja muhurat and other significant details". India Today. Archived from the original on 2024-01-28. பார்க்கப்பட்ட நாள் 28 சனவரி 2024.
  26. "Happy Telugu Hanuman Jayanti 2022: Date, Dasami Tithi, and Significance". The Times of India. Archived from the original on 2024-01-30. பார்க்கப்பட்ட நாள் 30 சனவரி 2024.
  27. "Sri Hanuman Jayanti – 2023". ISKCON Bangalore. Archived from the original on 2024-01-30. பார்க்கப்பட்ட நாள் 30 சனவரி 2024.
  28. "Kannada Hanuman Jayanti 2022: Date, time, puja rituals and all you need to know". The Economic Times. Archived from the original on 2024-01-30. பார்க்கப்பட்ட நாள் 30 சனவரி 2024.