சூரசம்ஹாரம்
சூரசம்ஹாரம் | |
---|---|
ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் முருகன் சிலை | |
பிற பெயர்(கள்) | கந்த சஷ்டி |
கடைப்பிடிப்போர் | தமிழ் இந்துக்கள் |
வகை | இந்து |
முக்கியத்துவம் | முருகன் அசுரர்களை வென்ற நிகழ்வு |
நாள் | தமிழ் நாட்காட்டியில் ஐப்பசி அல்லது கார்த்திகை மாதம் |
2024 இல் நாள் | 7 நவம்பர் (வியாழக்கிழமை) |
நிகழ்வு | வருடாந்திர நிகழ்வு |
சூரசம்ஹாரம் (Surasamharam) என்பது சூரபத்மன் எனும் அரக்கனை அழித்த நிகழ்வாகும்.[1] சூரபத்மனை முருகன் அழித்தார். அதன் நினைவாக முருகனுடைய ஆலயங்களில் இந்நிகழ்வினை பெரும் விழாவாக கொண்டாடுகின்றனர்.
தொன்மம்
[தொகு]
காசியப்ப முனிவருக்கும் மாயை என்பவளுக்கும் பிறந்தவர் சூரபத்மன். அவன் வளர்ந்த பிறகு சிவபெருமானை நோக்கி தவமிருந்து இந்திர ஞாலம் எனும் தேரையும், பெண்ணால் பிறக்காத குழந்தையால் மட்டுமே மரணம் என்ற வரத்தையும் பெற்றான். பெற்ற வரத்தால் சக்திகள் மிக்கவனாக தேவர்களையும், நல்லுயிர்களையும் துன்புறுத்தினான். சிவபெருமானின் நெற்றியிலிருந்து பிறந்த ஆறு நெருப்புப் பொறிகள் உருவாயின. அதனை வாயுபகவான் சரவணப் பொய்கையில் சேர்த்தார். அவை ஆறு குழந்தைகளாக கார்த்திகைப் பெண்டிரிடம் வளர்த்தனர். பார்வதி அவர்கள் ஆறு பேரையும் தழுவும் போது அவர்கள் சண்முகனாக ஆனார்கள். பின்பு பார்வதியிடம் வேல் பெற்ற முருகன் சூரபத்மனை போரில் அழித்தான்.[2] இந்தப் போரில் வீரபாகு உள்ளிட்ட நவவீரர்கள் முருகனுக்கு படைத்தளபதிகளாக இருந்தனர்.[3]
ஆதாரங்கள்
[தொகு]- ↑ கந்தசஷ்டி தோன்றிய கதை தெரியுமா?. தினமலர். 5 நவம்பர் 2013.
- ↑ "கந்த சஷ்டி தோன்றிய கதை.. தினகரன்". Archived from the original on 2015-01-23. Retrieved 2016-07-17.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ Veerabaahu in Muruga's Army