சரத் பூர்ணிமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சரத் பூர்ணிமா அல்லது குமார பூர்ணிமா
சரத் பூர்ணிமா அன்று முழுநிலவு, 2017
வகைஇந்து
முக்கியத்துவம்Arrival of Winters
கொண்டாட்டங்கள்தெய்வங்களை வழிபடுதல், பூக்கள் மற்றும் இனிப்பு உணவுகளை வழங்குதல், நடனம் (ராசலீலை / கர்பா நடனம்)
தொடக்கம்முழு நிலவு நாள், ஐப்பசி
நாள்ஐப்பசி முழுநிலவு
நிகழ்வுவருடாந்திரத் திருவிழா
தொடர்புடையனலட்சுமி (இந்துக் கடவுள்) விஷ்ணு, இராதா கிருஷ்ணன், சிவன் பார்வதி, நிலா

சரத் பூர்ணிமா (Sharad Purnima) குமார பூர்ணிமா, கோஜகரி பூர்ணிமா, நவன்ன பூர்ணிமா, [2] கௌமுடி பூர்ணிமா என்றும் அழைக்கபடும் இது அறுவடைத் திருநாளான கொண்டாடப்படுகிறது . இந்து சந்திர மாதமான ஐப்பசியில்(செப்டம்பர் முதல் அக்டோபர் வரை) பௌர்ணமி நாளில் இது மழைக் காலத்தின் முடிவில் கொண்டாடப்படிகிறது.வைக் குறிக்கிறது. இந்த புனித நாளில், சிவன், பார்வதி, இராதாகிருஷ்ணா மற்றும் இலட்சுமி, நாராயணன் போன்ற பல தெய்வீக இணைகள் சந்திரனுடன் வணங்கப்பட்டு பூக்கள் மற்றும் பாயசம் (அரிசி மற்றும் பாலால் செய்யப்பட்ட இனிப்பு உணவு) பிரசாதாமாக வழங்கப்படுகின்றன. கோயில்களில் உள்ள தெய்வங்கள் நிலவின் பிரகாசத்தைக் குறிப்பது போல பொதுவாக வெள்ளை நிற உடையணிந்திருப்பர். இந்த நாளில் பலர் முழு நாள் உண்ணாவிரதத்தை கடைபிடிக்கின்றனர்.

செயல்பாடுகள்[தொகு]

இந்த நாள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வித்தியாசமாக கொண்டாடப்படுகிறது. ஒடிசாவில், இந்த நாளில் திருமணமாகாத பெண்கள் தங்களுக்கு பொருத்தமான மணமகனை பெறுவார்கள் என்ற பிரபலமான நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். தேங்காய், வாழைப்பழம், வெள்ளரி, வெற்றிலை, கரும்பு, கொய்யா போன்ற 7 பழங்களுடன் வறுத்த நெல்லுடன் தென்னங்கீற்றில் வைத்து சூரிய உதயத்தில் கன்னிப்பெண்கள் சூரிய கடவுளை ஆரத்தி எடுத்து வரவேற்பதன் மூலம் இந்த திருவிழா தொடங்குகிறது. மாலையில் அவர்கள் 'துளசி' மாடத்தின் முன் நிலவை வணங்குவதற்காக பழங்கள், தயிர், வெல்லம் ஆகியவற்றுடன் காலையில் வறுத்த நெல் அடங்கிய ஒரு உணவை தயார் செய்து உண்ணாவிரதத்தை முறித்துக் கொள்கிறார்கள். இந்த கன்னிப்பெண்கள் பௌர்ணமியின் ஒளியின் கீழ் பாட்டுப்பாடி விளையாடுவார்கள். குசராத்தின் பல பகுதிகளில், கர்பா நடனம் நிலவொளியின் முன்னிலையில் நடைபெறுகிறது.

கோஜகரி பூர்ணிமா[தொகு]

கோஜகரி பூர்ணிமா கோஜகர விரதத்தைக் கடைப்பிடிப்பதைப் பற்றியது. பகல் விரதத்திற்குப் பிறகு மக்கள் நிலவொளியின் கீழ் இந்த விரதத்தை முடிக்கிறார்கள். செல்வத்தின் இந்து தெய்வமான லட்சுமியின் பிறந்த நாள் என்று நம்பப்படுவதால் இந்த நாள் கணிசமாக வழிபடப்படுகிறது. [3] மழையின் கடவுளான இந்திரனும், யானை ஐராவதமும் சேர்ந்து இந்த நாளில் வணங்கப்படுகிறார்கள். ஷரத் பூர்ணிமாவின் இரவில், இராதாகிருஷ்ணாவின் ராசலீலை கோபியர்களுடன் சேர்ந்து ஆடுவதாக நம்பப்படுகிறது. இந்த தெய்வீக நடனத்தில் பங்கேற்க, சிவபெருமான் கோபேசுவர் மகாதேவ வடிவத்தை எடுத்து வருவதாக கருதப்படுகிறது. இந்த இரவின் தெளிவான விளக்கங்கள் பிரம்ம புராணம், கந்த புராணம் மற்றும் லிங்க புராணங்களில் கொடுக்கப்பட்டுள்ளன . இந்த பௌர்ணமி இரவில், மனிதர்களின் செயல்களைக் காண லட்சுமி தேவி பூமியில் இறங்குகிறார் என்றும் நம்பப்படுகிறது.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "2013 Hindu Festivals Calendar for Bahula, West Bengal, India". Drikpanchang.com. 2013. பார்க்கப்பட்ட நாள் 19 January 2013. 18 Friday Kojagara Puja, Sharad Purnima, Chandra Grahan
  2. . 1976. 
  3. "Sharad Purnima 2017: Laxmi Puja or Kojagiri Purnima Date(Tithi), Significance and Bhog Rituals". NDTV.com. October 5, 2017. ஆனால் ஷரத் பூர்ணிமாவில் அனுசரிக்கப்படும் லட்சுமி பூஜை மிக முக்கியமான ஒன்று என நம்பப்படுகிறது. இது இந்து சமய சந்திர நாட்காட்டியில் ஐப்பசி மாதத்தில் பௌர்ணமி நாளில் செய்யப்படுகிறது. லட்சுமி தெய்வத்தின் பிறந்த நாள் என்று நம்பப்படும் இது குனார் பூர்ணிமா அல்லது கோஜகரி பூர்ணிமா என்றும் கொண்டாடப்படுகிறது - இது மழைக்காலத்தின் முடிவைக் குறிக்கும் அறுவடை திருவிழாவாகும்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரத்_பூர்ணிமா&oldid=3664197" இலிருந்து மீள்விக்கப்பட்டது