வைசாக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வைசாக்கி
Birthplace of Khalsa.jpg
கல்சாவின் பிறப்பிடம். ஆனந்த்பூர் சாகிப். பஞ்சாப். இந்தியா.
பிற பெயர்(கள்)பைசாக்கி, வைசாக்கி, கல்சா சிர்ஜன திவஸ்.
கடைபிடிப்போர்சீக்கியர்கள்: கல்சா சிர்ஜன திவஸ். பிற மதத்தினர்: அறுவடை விழா/பஞ்சாபி புத்தாண்டு.
வகைபஞ்சாபி விழா
முக்கியத்துவம்அறுவடைப் பருவத்தின் துவக்கம், பஞ்சாபி புத்தாண்டு, சூரிய புத்தாண்டு, கால்சா நிறுவப்படல்
கொண்டாட்டங்கள்பரதேசு, நகர் கீர்த்தன்கள். சந்தைகள். திருமுழுக்கு விழாக்கள் (அம்ருத் சன்சார் விழா)
அனுசரிப்புகள்வழிபாடுகள், ஊர்வலங்கள், நிசான் சாகிப் கொடியேற்றம், திருவிழாச் சந்தைகள்.


வைசாக்கி (Vaisakhi, பஞ்சாபி: ਵਿਸਾਖੀ), அல்லது பைசாக்கி ( Baisakhi) பஞ்சாப் பகுதியில் கொண்டாடப்படும் அறுவடைத் திருவிழாவாகும். தவிரவும் சூரிய நாட்காட்டியைப் பின்பற்றும் பஞ்சாபி நாட்காட்டியின் முதல் மாதமான வைசாக்கியின் முதல் நாள் (புத்தாண்டு) ஆகும். 1699இல் கால்சா நிறுவிய நாளாகவும், கல்சா சிர்ஜன் திவஸ், மேச சங்கிராந்தி விழாவாகவும் கொண்டாடப்படுகின்றது. இது வழமையாக ஏப்ரல் மாதம் 13 அல்லது 14ஆம் திகதிகளில் கொண்டாடப்படுகின்றது.

கொண்டாட்டங்கள்[தொகு]

வைசாக்கி பஞ்சாப் பகுதியில் கொண்டாடப்பட்டு வந்த தொன்மையான அறுவடைத் திருவிழாவாகும். இது சூரிய புத்தாண்டின் துவக்கத்தையும் புதிய அறுவடைப் பருவத்தின் துவக்கத்தையும் குறிக்கின்றது. சீக்கியர்களுக்கு சமயத் திருவிழாவாகவும் உள்ளது.[1] இது கிரெகொரியின் நாட்காட்டியில் ஏப்ரல் 13 அன்று கொண்டாடப்படுகின்றது. சீக்கியத்தில் 1699இல் அனந்த்பூர் சாஹிப்பில் கால்சா வழியை சீக்கிய 10ஆம் குரு குரு கோவிந்த் சிங் உருவாக்கிய நாளைக் கொண்டாடுகின்றது.[2]

இந்த நாளை இந்து சூரிய நாள்காட்டியின் புத்தாண்டு நாளாக நேபாளத்திலும் இந்தியாவின் அசாம் பள்ளத்தாக்கு, கேரளம், ஒடிசா, மேற்கு வங்காளம் மற்றும் பிற பகுதிகளில் கொண்டாடப்படுகின்றது. இமாச்சலப் பிரதேசத்தில், இந்துக் கடவுளான ஜுவாலாமுகி அம்மனுக்கு வைசாக்கி அன்று வழிபடப்படுகின்றார். பீகாரில் சூரிய தேவன் வழிபடப்படுகின்றார்.[3]

தொடர்புடையக் கொண்டாட்டங்கள்[தொகு]

இந்த விழா

ஒளிப்படத் தொகுப்பு[தொகு]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Sikhism holy days: Baisakhi". பிபிசி. 2007-07-08 அன்று பார்க்கப்பட்டது.
  2. "The Historic Day of Baisakhi". Brig. Partap Singh Ji Jaspal (Retd.). 2009-01-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-03-08 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. "hinduism info". பிபிசி. 2008-02-12 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வைசாக்கி&oldid=3229517" இருந்து மீள்விக்கப்பட்டது