ஜுவாலாமுகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜுவாலாமுகி
जवालामुखी
ஜுவாலாஜி
நகராட்சி
ஜுவாலாமுகி தேவி கோயில்
ஜுவாலாமுகி தேவி கோயில்
ஜுவாலாமுகி is located in Himachal Pradesh
ஜுவாலாமுகி
ஜுவாலாமுகி
ஜுவாலாமுகி is located in India
ஜுவாலாமுகி
ஜுவாலாமுகி
இந்தியாவின் இமாசலப் பிரதேச மாநிலத்தில் ஜுவாலாமுகியின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 31°53′N 76°19′E / 31.88°N 76.32°E / 31.88; 76.32ஆள்கூற்று: 31°53′N 76°19′E / 31.88°N 76.32°E / 31.88; 76.32
நாடு  இந்தியா
மாநிலம் இமாசலப் பிரதேசம்
மாவட்டம் காங்ரா
ஏற்றம் 610
மக்கள்தொகை (2011)
 • மொத்தம் 5,361
மொழிகள்
 • அலுவல் இந்தி
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
வாகனப் பதிவு HP 40

ஜுவாலாமுகி (Jawalamukhi), இந்தியாவின் இமாசலப் பிரதேச மாநிலத்தின் காங்ரா மாவட்டத்தின் 7 உறுப்பினர்கள் கொண்ட நகராட்சி மன்றமுமாக உள்ளது. இங்கு புகழ் பெற்ற ஜுவாலாமுகி அம்மன் கோயில் உள்ளது. 51 சக்தி பீடங்களில் ஜுவாலாமுகியும் ஒன்றாகவும் மற்றும் நவ சக்தி பீடங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.

புவியியல்[தொகு]

கடல் மட்டத்திலிருந்து 2,001 அடி உயரத்தில் அமைந்த ஜுவாலாமுகி நகரம் 31°53′N 76°19′E / 31.88°N 76.32°E / 31.88; 76.32ல் அமைந்துள்ளது..[1]

மக்கள் தொகையில்[தொகு]

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஜுவாலாமுகி நகரத்தின் மொத்த மக்கள் தொகை 5,361 ஆகும். அதில் 2,782 ஆண்கள் ஆகவும்; 2,579 பெண்கள் ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்டோர் 559 (10.43%) ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 92.19% ஆக உள்ளது. அதில் ஆண்களின் எழுத்தறிவு 94.33% ஆகவும்; பெண்களின் எழுத்தறிவு 89.94%. ஆகவும் உள்ளது. பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 927 பெண்கள் வீதம் உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் இந்துக்கள் 95.24% ஆகவும்; இசுலாமியர்கள் 3.71% ஆகவும்; சீக்கியர்கள் 0.86% ஆகவும்; பௌத்தர்கள் 0.09% ஆகவும்; சமயம் குறிப்பிடாதவர்கள் 0.09% ஆகவும் உள்ளனர். [2]

ஜுவாலாமுகி தேவி கோயில்[தொகு]

காங்ரா நகரத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவிலும், தரம்சாலாவிலிருந்து 55 கிலோ மீட்டர் தொலைவிலும், கீழ் இமயமலையில் ஜுவாலாமுகி தேவி கோயில் உள்ளது. இங்குள்ள பாறைகளிலிருந்து நெருப்பு உமிழ்ந்து கொண்டே உள்ளது. இங்கு உமிழும் நெருப்பே ஜுவாலாமுகி தேவியின் உருவமாகவும், கருவறையாகவும் பூசிக்கப்படுகிறது.

விழாக்கள்[தொகு]

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் – அக்டோபர் மாதங்களிலும் நவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. [3] [4]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜுவாலாமுகி&oldid=2296995" இருந்து மீள்விக்கப்பட்டது