சமோசா
இக்கட்டுரை உள்ளடக்கத்தைவிட கூடுதலான படங்களைக் கொண்டுள்ளது. |
![]() சட்னியும் பச்சை மிளகாயுடன் சமூசா | |
மாற்றுப் பெயர்கள் | சம்பூசா, சம்போசா, சமூசா, சோமாசி, சிங்கதா, சிங்கரா |
---|---|
வகை | Pastry, Dumpling |
பரிமாறப்படும் வெப்பநிலை | Entrée, நொறுக்குத்தீனி |
பகுதி | தென்கிழக்காசியா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்காவின் கொம்பு, கிழக்கு ஆபிரிக்கா, வடக்கு ஆப்பிரிக்கா, இந்தியத் துணைக்கண்டம், போர்த்துகல் |
பரிமாறப்படும் வெப்பநிலை | Hot |
முக்கிய சேர்பொருட்கள் | மைதா, உருளைக் கிழங்கு, பட்டாணி, வெங்காயம், மசாலாப் பொருள், பச்சை மிளகாய் (especially green chili), பாலாடைக்கட்டி, paneer, meat (lamb, beef or chicken) |
வேறுபாடுகள் | Chamuça, Shingara[1] |
![]() ![]() |
சமோசா (Samosa; ஐபிஏ :/səˈmoʊsə/) அல்லது சமூசா என்ற திண்பண்டமானது, பல்வேறு நாடுகளின் மக்களால் விரும்பப்படும் நொறுக்குத்தீனியாகவும், தொடுகறியாகவும், பசி/சுவையூக்கியாகவும் திகழ்கிறது. இந்த உணவு செய்முறை வடிவில், வேறுபட்டு இருந்தாலும், நான்முக முக்கோண வடிவமே, பன்னாட்டினராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களிலுள்ள பல்வேறு நாட்டினரும், இதனை சிற்றுண்டியாக உண்ணும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். எடுத்துக்காட்டாக, அராபியத் தீபகற்பம், தென்கிழக்காசியா, தென்மேற்கு ஆசியா, நடுநிலக் கடல், இந்தியத் துணைக்கண்டம், ஆப்பிரிக்காவின் கொம்பு, கிழக்கு ஆபிரிக்கா, வடக்கு ஆப்பிரிக்கா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளின் உணவுப் பட்டியலில், இப்பண்டம் அடங்கி உள்ளது. பல நாடுகளின் கலாச்சார வேறுபாடுகளாலும், அம்மக்களின் குடிபெயர்வாலும், இத்தீனி பல நாடுகளிலும் பரவி வருகிறது.
சொற்தோற்றம்[தொகு]
இது சம்பூசா, சம்போசா, சமூசா, சோமாசி, சிங்கதா, சிங்கரா[2] என்றும் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றது. இந்த பெயர் 'சம்பூசாஹ்' என்கிற ஃபார்ஸி (ஈரான்) (பாரசீகம்: سنبوساگ).[3] சொல்லிலிருந்து வந்ததாகும். அரபி மொழியில் 'பிறைபோன்ற வடிவம்' என்பதை சன்புசாக் அல்லது சன்புசாஜ் என்பர். சம்போசா என ஆப்கானித்தானிலும், சோமாசா என வங்கமொழியிலும்: সমোসা) அழைப்பர், சமோசா என்று உருது மொழியில்: سموسہ பாக்கித்தானிலும், இந்தியிலும்:समोसा) நெருங்கிய தொடர்பு உடையதாக உள்ளது. (சிந்தி: سمبوسو சம்போசா/sambosa) என்று தஜிகிஸ்தான் சொல்லோடும், சம்சா என்று துருக்கிய மொழிகளிலும், ஆப்பிரிக்க மொழிகளில்,' ஆப்பிரிக்காவின் கொம்பு வடிவம்' என்ற பொருளிலும், chamuça என கோவாவிலும், மொசாம்பிக் மொழியிலும், சில போர்த்துகல் சொற்களும், சமோசா என்ற சொல்லின் ஒலிப்போடு, (sambusaj) [4] நெருங்கிய தொடர்புடையதாக விளங்குகின்றன.
தேவையான பொருட்கள்[தொகு]
உலக மக்களின் உணவுப் பழக்கவழக்கத்திற்கு ஏற்ப, இதன் அளவும், உட்பொருட்களின் கலப்பும், வேறுபடுகின்றன. தேவையான பொருட்களை, இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று வெளிப்புறத்திற்கான, மாவு. இது பெரும்பாலும், மைதா மாவாகும். இரண்டாவது உட்பொருளான மசாலைச் சேர்வை. இது உள்ளிடு பொருள் என்றும், பூர்ணம் என்றும் அழைக்கப்படும். பூர்ணமாக, உருளைக்கிழங்கு, வெங்காயம், பட்டாணி, முட்டைக்கோசு, கேரட் போன்ற காய்கறிகளும், உண் உணவாக மாட்டிறைச்சியும், கோழிக் கறியும் சிறுசிறு துண்டுகளாகவும் தேர்ந்தெடுக்கப் படுகிறது. இத்துடன் நறுமண உணவுப் பொருட்களாலான மஞ்சள், இலவங்கம், பட்டை, பெருஞ்சீரகம், உப்பு போன்றவை பதமாகக் கலக்கப் படுகிறது. இந்திய சமோசாவில், மரக்கறி உட்பொருளே அதிகம் பயன்படுகிறது.
செய்முறை[தொகு]
செய்முறை அடிப்படையில், இதனை இரு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று பச்சைமாவு சமோசா, மற்றொன்று வெந்தமாவு சமோசா. பச்சைமாவு சமோசா என்பது குறைந்த நேரத்தில் உடனே தயாரிக்கப்படும், துரித உணவு தயாரிப்பு முறையாகும். இதில் பயன்படுத்தம் எண்ணெயின் அளவு குறைவாக இருக்கும். தோசைசட்டியில் இதனைத் தயாரிக்கலாம். நுண்ணலை அடுப்பு போன்றவற்றிலும் தயாரிக்கலாம். வெந்தமாவு சமோசா என்பது இரு நாட்களில் செய்யப்படும். இட்லி மாவு தயாரிப்பது போல, முதல் நாளே பாதி செய்முறை முடிந்து விடும். இதனால் வெந்தமாவு சமோசாவில் சற்று புளிப்புச் சுவை இருக்கும். மேலும், முழுமையாக கொதிக்கும் சமையல் எண்ணெயில், அமிழ்ந்து எடுப்பதால் வெளிப்புறம் மொறுமொறுப்பாகவும்,உட்புறம், வேகவைத்த காய்கறி போன்று, திண்மையாக இருக்கும். மேற்கூறிய இரண்டு முறைகளிலும், மைதாவில் ஆனா மெல்லிய உரொட்டி/சப்பாத்தி போன்று, பெரியதாகத் தயாரிக்கப் படுகிறது. இந்த ரொட்டி நீள்செவ்வக வடிவில் வெட்டப் படுகிறது. ஒவ்வொரு நீள்செவ்வக ரொட்டியும், ஏறத்தாழ நமது பணத்தாள் போன்ற வடிவம் பெறுகிறது. இவ்வடிவம் கொண்ட ரொட்டி, முக்கோண வடிவில் கையால் சுற்றப்பட்டு, அதனுள் உள்ளிட்டுச்சேர்வை வைத்து, மைதா பசையால் ஒட்டப்படுகிறது. இவ்வாறு நிரப்பப் பட்ட சமோசாவை வேகவைத்து எடுத்தால், அது உண்ணும் பக்குவத்திற்கு மாறும்.
காட்சியகம்[தொகு]
இவற்றையும் பார்க்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ moderator (2015-11-05). "Aloor Singara (Bengali Samosa) Recipe | MTR Dishcovery". MTR Dishcovery. http://www.dishcovery.in/recipes/aloor-singara-bengali-samosa.
- ↑ moderator (2015-11-05). "Aloor Singara (Bengali Samosa) Recipe | MTR Dishcovery". MTR Dishcovery. http://www.dishcovery.in/recipes/aloor-singara-bengali-samosa.
- ↑ Lovely triangles பரணிடப்பட்டது 8 சனவரி 2009 at the வந்தவழி இயந்திரம் "ஹிந்துஸ்தான் டைம்ஸ்", 23 August 2008.
- ↑ Rodinson, Maxime, Arthur Arberry, and Charles Perry. Medieval Arab cookery. Prospect Books (UK), 2001. p. 72.
வெளியிணைப்புகள்[தொகு]
- இதனை தயாரிக்கும் முறையை, மேலதிக விவரங்களை,ஆங்கில மொழியில் தரும் இணையப் பக்கம்
- சமைக்கும் முறைகள் ஆங்கிலத்தில் இருக்கும், கார்டியன் இதழின் இணையப் பக்கம்
- சமையற்குறிப்புகளை மிக விளக்கமாக, ஆங்கிலமொழியில் தரும்,'கிச்சன் கில்லாடி' இணையதளம்