மைசூர் பாகு
![]() | |
தொடங்கிய இடம் | இந்தியா |
---|---|
பகுதி | தென்னிந்தியா |
முக்கிய சேர்பொருட்கள் | நெய், சர்க்கரை, கடலை மாவு |
மைசூர் பாகு அல்லது மைசூர் பாக்கு (Mysore pak) என்னும் இனிப்பு பண்டம், தென்னிந்தியாவில் மைசூர் இராச்சியம் என முன்னர் அழைக்கப்பட்ட இன்றைய கர்நாடக மாநிலப் பகுதியில் தோன்றியது. இப்போது இது இந்தியாவின் பல பகுதிகளிலும், இந்தியர் வாழும் பிற இடங்களிலும் அறியப்பட்ட ஒரு இனிப்பு வகையாக உள்ளது.
வரலாறு[தொகு]
காகசூரா மாதப்பா என்பவர் மைசூர் அரசவையில் சமையல் கலைஞராக இருந்தார். அரசரின் விருப்பத்திற்காக வித்தியாசமான உணவுப் பண்டத்தை தயாரித்தார். சமையல் கலைஞர்கள் (சர்க்கரை) பாகு செய்வதால் நளபாகா என்று அழைக்கப்படுவர். சர்க்கரைப் பாகினால் செய்ததால் இந்த உணவிற்கு மைசூர் பா(க்)கு என்று பெயரிட்டார். [1]
சான்றுகள்[தொகு]
இணைப்புகள்[தொகு]
- மைசூர் பாகைப் பற்றி - மரபுவிக்கி பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்
- மைசூர் பாகு - செய்முறை பரணிடப்பட்டது 2014-02-22 at the வந்தவழி இயந்திரம்