நெய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நெய்

நெய் (Ghee) என்பது தெற்காசிய நாடுகளில் சமையலுக்குப் பயன்படும் தெளிந்த வெண்ணெய் ஆகும். நெய் என்பதன் ஆங்கிலச் சொல்லான Ghee என்பது வடசொல்லான घृत என்பதிலிருந்து வந்தது.

பாற்பொருட்களில் கூடுதல் சுவையையும் நறுமணத்தையும் கொண்டது நெய் ஆகும். தனியாகப் பிரித்தெடுத்த வெண்ணெய் அல்லது பாற்கொழுப்பை உருக்கும்போது நெய் உருவாகின்றது. வெண்ணெயை ஏறத்தாழ 100 பாகை செல்சியசு வெப்பத்தில் உருக்குகின்ற போது அதிலுள்ள நீர் ஆவியாகி, நெய் கிடைக்கின்றது. நெய்யானது அதிலுள்ள செம்மியத்தின் அடிப்படையில் வெள்ளை நிறத்திலிருந்து இளம் மஞ்சள் நிறம் வரையான நிறங்களில் காணப்படும். நெய்யில் ஏறத்தாழ எட்டு விழுக்காடு அளவில் தாழ்நிலைச் செறிவுற்ற கொழுப்பு அமிலங்கள் இருப்பதனால் எளிதாகச் செரிக்கிறது. இவ்வமிலங்கள் மிகச்சிறந்த உண்ணத்தக்க கொழுப்புகள் ஆகும். மேலும் நெய்யைத் தவிர பிற தாவர எண்ணெய்கள் எதிலும் இவை காணப்படுவதில்லை. நெய், மீன் எண்ணெய் ஆகியவற்றைத் தவிர வேறு எந்தத் தாவர எண்ணெயிலும் கொழுப்பிலும் உயிர்ச்சத்து ஏ கிடையாது.

ஒரு கரண்டி நெய்யில் 14 கிராம் கொழுப்புச் சத்து உள்ளது. நெய்யில் உப்பு, பால் வெல்லம் போன்ற சத்துகள் கிடையா. நெய்யில் இலினோலெயிக்கு அமிலம் உள்ளது. இது உடல் பருப்பதைத் தடுக்கிறது. ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் நெய்யில் உள்ளதாக அண்மையில் கண்டறிந்துள்ளனர்.

நெய்
100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து
ஆற்றல் 0 kcal   0 kJ
மாப்பொருள்     {{{carbs}}}
கொழுப்பு12.73 g
- நிறைவுற்ற கொழுப்பு  7.926 g
- ஒற்றைநிறைவுறா கொழுப்பு  3.678 g  
- பல்நிறைவுறா கொழுப்பு  0.473 g  
புரதம் 0.04 g
பொட்டாசியம்  1 mg  0%
ஐக்கிய அமெரிக்கா அரசின்
வயதுக்கு வந்தவருக்கான,
உட்கொள்ளல் பரிந்துரை .

மருத்துவ குணங்கள்[தொகு]

2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின் பயன்பாடு மிகுதியாக இருந்து வந்துள்ளது.[சான்று தேவை] மருத்துவக் குணம் வாய்ந்த மூலிகைகளில் உள்ள அணுக்களின் சுவர்களை ஊடுருவக்கூடிய தன்மை நெய்க்கு இருப்பதால்[சான்று தேவை] இத்தகைய மருந்து தயாரிப்பில் நெய்யை கூடுதலாகப் பயன்படுத்துகின்றனர். மருந்துகள் கெடாமல் பாதுகாக்க நெய்யே சிறந்த பொருளாகும்.[சான்று தேவை] நெய்யை ரசாயனம் என்று ஆயுர்வேத மருந்தாளர்கள் நெய்யை ரசாயனம் என்றே அழைக்கிறார்கள்.[சான்று தேவை] முழு உடல் நலம் கொடுத்து நீண்ட வாழ்நாளைக் கொடுக்கும் குணம் நெய்க்கு உண்டு.[சான்று தேவை] இதுபோல் சித்த மருத்துவத்திலும் மருந்துகளுக்குத் துணைமருந்தாகவும், மருந்துகள் கெடாமல் பாதுகாப்பதற்கும் நெய்யையே பயன்படுத்தி வந்துள்ளனர்.[சான்று தேவை]

மதம் சார்ந்த பயன்பாடுகள்[தொகு]

இந்து சமயத்தில் பசுவின் பாலில் இருந்து பெறும் நெய் முக்கிய இடம் வகிக்கிறது. இந்து சமய மறைகளில் நெய் தொடர்பான பாடலொன்று உள்ளதுடன்[சான்று தேவை], விளக்குகளை ஏற்றுவதற்கும் எரிபொருளாக நெய் பயன்படுகின்றது. மேலும் வேள்விகள் செய்வதற்கு நெய் அடிப்படைப் பொருளாகும்.

திருமால், சிவபெருமான் போன்ற இந்துக் கடவுள்களை வணங்கும் சமய நிகழ்வுகளிலும் இந்து சமய வழிபாடுகளின் போதும் வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் தேன், வாழைப்பழம், பால், தயிர் என்பனவற்றுடன் நெய்யையும் சேர்க்கிறார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெய்&oldid=2742031" இருந்து மீள்விக்கப்பட்டது