பால் (பானம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பால்
பசுவிலிருந்து பாலை இயந்திரத்தின் மூலம் கறக்கும் படம்
பால் வண்டி

பால் என்பது பாலூட்டி வகையைச் சேர்ந்த குட்டியீன்ற தாயின் (பெண் விலங்கின்) பால் சுரப்பிகளில் சுரக்கும் ஒரு சத்துள்ள திரவமாகும். இத்திரவம் பாலூட்டி விலங்குகளின் குட்டிகளுக்கு ஆரம்ப காலத்தில் உணவாக பயன்படுகிறது. குட்டிகள் மற்ற உணவுகளை செரிக்கும் திறன் பெறும் வரை தாயின் பாலே முதன்மை உணவாகும். தொடக்க காலத்தில் குட்டிக்கு கொடுக்கப் படும் மஞ்சள் நிறப் பால் சீம்பால் எனப்படுகிறது. இப்பால் குட்டிக்குத் தேவையான நோய் எதிர்ப்பாற்றலைக் கொடுக்கின்றது. பால் மற்றும் பால பொருட்கள் ஊட்டச்சத்து மிகுந்த மற்றும் ஆரோக்கியமான உணவுகள் ஆகும். இதில் இயற்கையான ஊட்டச்சத்துக்களான கால்சியம், பொட்டாசியம், புரதம் உள்ளிட்டவை அடங்கியுள்ளன.

பாலின் வேதியல் மாற்றங்களின் மூலம் பாலிலிருந்து பல உப பொருட்கள் பெறலாம். பாலை நொதிக்கச் செய்வதன் மூலம், கட்டிபடச் செய்து தயிரைப் பெறலாம். பின்னர் தயிரைக் கடைந்து கொழுப்பு சத்து நிறைந்த வெண்ணெயும், பக்கப் பொருளாக நீர்த் தன்மையான மோரையும் பெறலாம்.

பால் கறத்தல்

பால் தரும் விலங்குகள்[தொகு]

காது மடல் வெளியில் இருக்கும் அனைத்து உயிரினங்களும் பாலூட்டிகளாகும். இவற்றில் சில மிருகங்களின் பாலினையே மனிதன் உணவாகப் பயன்படுத்துகிறான்.

பின் வரும் விலங்குகளின் பால் மனிதனால் உணவிற்குப் பயன்படுத்தப் படுகின்றது.

வரலாறு[தொகு]

மனிதன் அல்லாத மற்ற பாலூட்டிகளிடத்திலிருந்து உணவுக்காக பால் பெறும் வழக்கம் புதிய கற்காலத்தில் அல்லது விவசாயம் தொடங்கிய காலத்தில் ஏற்பட்டது ஆகும். இதன் வளர்ச்சி கி.மு 7000 முதல் 9000 ஆண்டுகள் வாக்கில் தெற்கிழக்கு ஆசியாவிலும், கி.மு 3500 முதல் 3000 காலங்களில் ஆமெரிக்காவிலும் ஏற்பட்டிருக்கின்றன.கறவை மாடுகள் , மாடுகள், ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் ஆகியவற்றின் மூலம் ஆரம்ப காலங்களில் பால் எடுக்கப்பட்டுள்ளது. காட்டில் வாழும் விலங்குகளிலிருந்தே ஆரம்ப கால தெற்காசியாவில் பால் பயன்படுத்தப்பட்டுள்ளது. வீட்டில் வளர்க்கும் விலங்குகளிடமிருந்து தோல் மற்றும் இறைச்சி பயன்படுத்தப்பட்டுவந்துள்ளனர். பின் கி.மு நான்கு முதல் பாலூட்டிகளை வளர்த்து அதனிடமிருந்து பால் பெறப்பட்டுள்ளது. கி.மு ஏழு ஆகிய காலங்களிளிருந்து பாலூட்டிகளிடமிருந்து பால் பெறும் வழக்கம் தெற்காசியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு பரவியது. பின் அங்கிருந்து அரேபியா மற்றும் ஆப்ரிக்க கண்டங்களுக்கு பரவியுள்ளது.

பாலின் உட்பொருட்கள்[தொகு]

கொழுப்புகள்[தொகு]

பாலில் உள்ள கொழுப்புகள் கொழுப்புப்படலம் சூழப்பட்ட முட்டை போன்ற அமைப்புகளால் ஆனது ஆகும். உட்பகுதி ட்ரைக்லிசரல்ஸாலும், வெளிப்படலம் புரதங்களுடன் கூடிய பாஸ்போலிபிடுகளாளேயும் உருவாக்கப்பட்டது ஆகும். கொழுப்பைக் கரைக்கக் கூடிய உயிர்ச்சத்துக்களான ஏ, டி, இ, கே ஆகியவை லினோலிக் மற்றும் லினோலினிக் ஆகிய அமிலங்களுடன் சேர்ந்து பாலின் கொழுப்பில் காணப்படுகின்றது.

புரதம்[தொகு]

ஒரு லிட்டர் மாட்டுப்பாலில் முப்பது முதல் முப்பத்தியைந்து கிராம் புரதம் கலந்துள்ளது.

உப்புகள், தாதுக்கள், மற்றும் வைட்டமின்கள்[தொகு]

பாலில் கால்சியம், பாஸ்பேட், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், சிட்ரேட், மற்றும் குளோரின் அனைத்தும் கிடக்கின்றன. பொதுவாக இவை அனைத்தும் பாலில் 5-40 mM அளவில் கலந்திருக்கின்றன. பாலில் உப்புக்கள் மற்றும் தாதுக்கள் அல்லாத வைட்டமின்களும் கலந்துள்ளன. வைட்டமின்கள் ஏ, பி6, பி 12, சி, டி, கே ஆகிய வைட்டமின்களும், மின், தயாமின், நியாசின், பயோட்டின், ரிபோபிளவின், ஃப்ளோட்ஸ் மற்றும் பேண்டோதெனிக் ஆகிய அமிலங்களும் பாலில் கலந்துள்ளன.

கார்போஹைட்ரேட்டுகள்[தொகு]

பாலில் ஏராளமான கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன.லாக்டோஸ், குளுக்கோஸ், காலக்டாஸ் மற்றும் பிற ஒலிகோசகரைடுகள் உள்ளன. இதில் லாக்டோஸ் பாலிற்கு இனிப்பு சுவையினைத் தருகின்றது.

இவை அனைத்தும் தவிர கறக்கப்பட்ட பாலில் வெள்ளை இரத்த அணுக்கள், பால்மடிச்சுரப்பி செல்கள், பல்வேறு பாக்டீரியாக்கள் மற்றும் என்சைம்கள் காணப்படுகின்றன.

உலகம் முழுவதிலும் பால் உற்பத்தி[தொகு]

உலகிலேயே அதிகப்படியான பால் மற்றும் அதனை அடிப்படையாகக் கொண்ட பொருட்களை தயாரிப்பதில் இந்தியா முதலிடம் வகிக்கின்றது.[1] தற்போது வளர்ந்து வரும் நாடுகளில், பாலின் தேவை அதிகரித்துள்ள காரணத்தால், பால் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. 2010 இல் மிகப்பெரிய அளவில் பால் மற்றும் பால் உற்பத்திப் பொருட்களை தயாரிப்பதில் இந்தியா முதலாவதாகவும் அதன் பின் அமெரிக்காவும் அதனைத்தொடர்ந்து சீனாவும் பின் செருமனியும் பின் பிரேசிலும் அதன் பின் உருசியாவும் உள்ளன.[2] 2011இல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்தும் சேர்ந்து மொத்தமாக சுமார் 138 மில்லியன் டண்கள் அளவு பாலை உற்பத்தி செய்தன.[3] உலகம் முழுவதிலும் உள்ள எருமைப் பால் உற்பத்தி நிலவரம் 2007 வரையிலுமான தகவல் கீழுள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

எருமைப் பால் உற்பத்தி நிலவரம் 2007 வரையிலும்[4]
நாடுகள் உற்பத்தி (டன்களில்) குறிப்புகள்
 இந்தியா 59,210,000
 பாக்கித்தான் 20,372,000
 சீனா 2,900,000 தோராயமாக
 எகிப்து 2,300,000
 நேபாளம் 958,603
 ஈரான் 241,500 தோராயமாக
 மியான்மர் 220,462
 இத்தாலி 200,000 தோராயமாக
 வியட்நாம் 32,000
 துருக்கி 30,375
 உலகம் முழுவதும் 86,574,539 கிட்டத்தட்ட
Milk production and consumption[citation needed]
2010ல் உலகின் முதல் பத்து பால் உற்பத்தியாளர்கள்[5]
நாடு தயாரிப்பு
(டன்களில்)
 அமெரிக்கா 87,446,130
 இந்தியா 50,300,000
 சீனா 36,036,086
 உருசியா 31,895,100
 பிரேசில் 31,667,600
 செருமனி 29,628,900
 பிரான்ஸ் 23,301,200
 நியூசிலாந்து 17,010,500
 ஐக்கிய இராச்சியம் 13,960,000
 துருக்கி 12,480,100
உலகம் 599,438,003
கையால் பால் கறக்கும் பெண்மணி

பால் உற்பத்திப் பொருட்கள்[தொகு]

பாலிலிருந்து உற்பத்தியாகும் பொருட்களே பால் உற்பத்திப் பொருட்களாகும்.இவை அனேகமாக பாலை பதப்படுத்தி செய்யப்படுகின்றது. பால் உற்பத்திப் பொருட்களாவன:

பாலின் பயன்கள்[தொகு]

பால் மற்றும் பால பொருட்கள் ஊட்டச்சத்து மிகுந்த மற்றும் ஆரோக்கியமான உணவுகள் ஆகும். இதில் இயற்கையான ஊட்டச்சத்துக்களான கால்சியம், பொட்டாசியம், புரதம் உள்ளிட்டவை அடங்கியுள்ளன. பால் சரும பளபளப்பைக் கொடுக்கின்றது. அதிகப்படியான கால்சிய சத்தினைக் கொண்டுள்ளதால் எலும்பினை வலுவுறச்செய்கின்றது. இருதய நோய் சம்பந்தமான நோய்கள் வருவதற்கான ஆபத்தை பால் குறைக்கின்றது. உடல் எடை குறைப்புக்கும் பால் பயன்படுகின்றது.

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. International dairy product prices are turning down: how far, how fast?, FAO Food outlook No.1, June 2006. www.fao.org. Retrieved on 21 July 2009.
  2. Dairy – World Markets and Trade (see Milk tables). USDA
  3. Schultz, Madeline (April 2012) fluid milk profile. Iowa State University
  4. Livestock Production statistics, FAOSTAT, Food And Agricultural Organization of the United Nations. faostat.fao.org. Retrieved on 21 July 2009.
  5. Food and Agricultural commodities production – Cow milk, whole, fresh, FAOSTAT, Food And Agricultural Organization of the United Nations. faostat.fao.org. Retrieved on 1 August 2012.

வெளியிணைப்புகள்[தொகு]

இவற்றையும் காணவும்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்_(பானம்)&oldid=1941134" இருந்து மீள்விக்கப்பட்டது