சோயாப் பால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோயாப் பால்
தொடங்கிய இடம்China
கண்டுபிடிப்புa. 1365[1][2][3]
உணவு ஆற்றல்
(per 100 கி பரிமாறல்)
33 கலோரி (138 kJ)
ஊட்டச்சத்துப் பெறுமானம்
(per 100 கி serving)
புரதம்2.86 கி
கொழுப்பு1.61 கி
கார்போவைதரேட்டு1.74 கி
சர்க்கரை உயர்த்தல் குறியீடு 34 (low)

சோயாப்பால் ஒரு தாவரத்தை அடிப்படையாகக் கொண்ட பால் போன்ற உற்பத்திப் பொருள் ஆகும். சோயா விதைகளை நீரில் ஊறவிட்டு அரைத்து, அக்கலவையைச் சூடாக்கித் திரவப் பகுதியை வடித்து எடுப்பதன் மூலம் இப்பால் தயாரிக்கப்படுகின்றது. இது எண்ணெய், நீர், புரதம் ஆகியவற்றைக் கொண்ட உறுதியான கூழ்மம் ஆகும். தொடக்கத்தில் இது --- தயாரிப்பின் போது கிடைத்த இயற்கையான துணை உற்பத்தியாகவே இருந்தது. ஆனாலும் இது நீண்டகாலமாக விரும்பப்படாத ஒரு உணவாகவே இருந்தது. ஒதில் அடங்கியிருந்த ஆயில்கோசக்காரிடெஸ் (oligosaccharides) என்னும் பொருள், இலக்டோசு ஒவ்வாமை காணப்படும் வளர்ந்தோரிடம் ----- ஆகிய பின்விளைவுகளை ஏற்படுத்தியதே இந்த விருப்பமின்மைக்கான காரணம். நீண்ட நேரம் சூடாக்குவதன் மூலம் இந்தப் பொருளை அகற்றலாம் எனக் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் இது கிழக்காசிய உணவில் ஒரு முக்கிய பொருளாக மாறியுள்ளது. பண்ணைப் பாலுக்கு ஏறத்தாழ இணையாகச் சுவையையும், தடிப்பையும் கொடுக்கக்கூடிய வகையில் உற்பத்தித் தொழில்நுட்பங்கள் மேம்பட்டதால், கடந்த சில பத்தாண்டுகளாக ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் இது பிரபலமாகி உள்ளது. அல்மன்ட் பால், அரிசிப்பால் போன்ற தாவர அடிப்படையைக் கொண்ட பால்களுடன் சோயாப் பாலும் விலங்கு உற்பத்திகளை உண்ணாதோர்க்கும், லக்டோசு ஒவ்வாமை கொண்டோருக்கும் பண்ணைப் பாலுக்குப் பதிலீடாகப் பயன்படுகின்றது.

--- தயாரிப்பின் போது துணை உற்பத்தியாகக் கிடைத்த நீர்த் தன்மையான பானத்தைச் சீனர் டுஜியாங் (சோயா விதை broth) என அழைத்தனர், அதேவேளை கடையில் வாங்கிய, வாசனையிலும், தடிப்பத்திலும் பண்ணைப்பால் போல் தயாரிக்கப்பட்ட உற்பத்தியைப் பெரும்பாலும் ‘’டூனய்’’ (சோயா விதைப் பால்) என்ற பெயரால் குறிப்பிட்டனர். பிற நாடுகள் சிலவற்றில் “பால்” என்னும் சொல்லைப் பயன்படுத்துவதில் சட்டச் சிக்கல்கள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக ஐரோப்பிய ஒன்றியத்தில் “பால்” தாய் விலங்கொன்றில் இருந்து சுரக்கும் பொருள் ஒன்றை மட்டுமே குறிக்க முடியும். பொதுவகப் பசுப்பாலை மட்டுமே அதன் கொள்கலனில், வெறுமனே “பால்” எனக் குறிப்பிட முடியும். ஏனைய விலங்குகளின் பாலை அவ்விலங்குகளின் பெயரோடு, ஆட்டுப் பால், செம்மறிப் பால் எனக் குறிப்பிட வேண்டும்.[4] அவ்வாறான கட்டுப்பாடுகளைக் கொண்ட நாடுகளில் தாவரப் பாற் பொருட்களைப் பொதுவாக “சோயாப் பானம்” போன்ற சொற்களால் குறிப்பிடுவது வழக்கம்.

வரலாறு[தொகு]

வடகிழக்குச் சீனாவில் தோன்றிய சோயா அவரையை ஏறத்தாழ கிமு 11 ஆம் நூற்றாண்டில் வளர்க்கத்தொடங்கியதாகத் தெரிகிறது.[5] ஆனால், ரச வகைகள், பானங்கள் போன்றவற்றில் இதன் பயன்பாடு மிகப் பிந்திய காலத்திலேயே ஏற்பட்டது. கிமு மூன்றாம் நூற்றாண்டில் சோயாக் கஞ்சி இருந்ததற்கான குறிப்புக்கள் உள்ளன.[6][5] 4 ஆம் நூற்றாண்டில்[7][8] சோயா வைனும், 1365 இல் மங்கோல் யுவானின் வீழ்ச்சிக் காலத்தில் சோயாத் தயிரும் பயன்பாட்டில் இருந்தன.[1][2][3] டூஜியாங் என்னும் பெயரில் சற்று நீர்த்தன்மையான சோயாப் பால் சீனாவில் இன்றும் பயன்படுகின்றது. இது வழக்கமாகப் புதிய சோயா அவரையில் இருந்து தயாரிக்கப்படுகின்றது. இதன் பிரபலம் கிங் வம்சக் காலத்தில் மேலும் அதிகரித்தது. 18 ஆம் நூற்றாண்டில் தெரு வணிகர்கள் தெருக்களின் விற்கும் அளவுக்கு பிரபலமானதாக இருந்தது.[9] 19 ஆம் நூற்றாண்டில் டோஃபூக் கடைகளுக்குச் செல்லும்போது ஒரு கிண்ணத்தையும் எடுத்துச் சென்று டூஜியாங் வாங்கிக் குடிப்பது பொதுவான பழக்கமாக இருந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Han, Yi, Yiya Yiyi {{citation}}: Unknown parameter |authormask= ignored (help). (சீனம்)
  2. 2.0 2.1 Shurtleff & al. (2013), ப. 5 & 23–4.
  3. 3.0 3.1 Shurtleff & al. (2014), ப. 9.
  4. "Document 32013R1308: Regulation (EU) No 1308/2013 of the European Parliament and of the Council of 17 December 2013 Establishing a Common Organisation of the Markets in Agricultural Products...", EUR-Lex, Brussells: European Union, 20 December 2013.
  5. 5.0 5.1 Shurtleff & al. (2014), ப. 5.
  6. Xun, Kuang, Xunzi {{citation}}: Unknown parameter |authormask= ignored (help). (சீனம்)
  7. Wang, Xizhi, Shijiu {{citation}}: Unknown parameter |authormask= ignored (help). (சீனம்)
  8. Shurtleff & al. (2014), ப. 7.
  9. Shurtleff & al. (2013), ப. 29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோயாப்_பால்&oldid=2666423" இலிருந்து மீள்விக்கப்பட்டது