ஒட்டகப் பால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் - கறந்த ஒட்டகப் பால்

ஒட்டகப் பால் பாலைவன நாடோடி பழங்குடியினரின் பிரதான உணவுகளில் ஒன்று. ஒரு நாடோடி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஒட்டக பால் மட்டுமே குடித்து வாழ முடியும் [1][2][3][4] ஒட்டக பாலில் வைட்டமின்கள், தாதுக்கள், புரதங்கள், மற்றும் இம்யுனோக்ளோபுலின்ஸ் அதிகமாக உள்ளது. [5] மேலும் பசுவின் பாலுடன் ஒப்பிடும்போது, கொழுப்பு மற்றும் லாக்டோஸ் குறைந்த அளவும் பொட்டாசியம், இரும்பு, மற்றும் வைட்டமின் சி அதிகமாகவும் உள்ளது.[6]

ஒட்டகப்பால் பண்ணைகள் உலகின் வறட்சியான பகுதிகளில் மாட்டுப்பண்ணைகளுக்கு மாற்றாக உள்ளன. வறண்ட பகுதிகளில் மாடுகளுக்குத் தேவையான நீரையும் வெப்பநிலையைக் குறைப்பதற்கான மின்சாரச் செலவுகளும் கூடுதலாக ஆகும் என்பதால் ஒட்டகப் பால் பண்ணைகள் இப்பகுதிகளில் முக்கியத்துவம் பெறுகின்றன.

ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அரபு எமிரேட்டுகள், சோமாலியா முதலான நாடுகளில் ஒட்டகப்பால் பேரங்காடிகளில் கிடைக்கிறது. பல நாடுகளில் ஊட்டச்சத்து குறைவான குழந்தைகளுக்கும் ஒட்டகப்பால் கொடுக்கப்படுகின்றது.

உற்பத்தித் திறன்[தொகு]

ஒட்டகப்பால் உற்பத்தி
(வெண்ணை எடுக்காதது, கறந்தது) – 2017
நாடு டன்கள்
 சோமாலியா
953,673
 கென்யா
876,224
 மாலி
300,000
 எதியோப்பியா
171,706
 சவூதி அரேபியா
134,266
 நைஜர்
107,745
உலகம்
2,852,213
மூலம்: ஐக்கிய நாடுகளின் புள்ளியியல் தரவுத்தளம்[7]

பாக்கித்தானிய, ஆப்கானிய ஒட்டகங்கள் நாளொன்றுக்கு 30 இலிட்டர் வரை பால் கறக்கும். நாளொன்றுக்கு இரட்டைத்திமில் ஒட்டகங்கள் 5 லிட்டரும் அரேபிய ஒட்டகங்கள் சராசரியாக 20 இலிட்டர்களும் கறக்கும்.[1]

இந்தியா[தொகு]

இந்தியாவின் வறண்ட பகுதிகளில் இராய்க்கா முதலான இனங்கள் ஒட்டகப்பாலை பயன்படுத்துகின்றனர். மேலும் ஆயுர்வேத மருத்துவமுறையிலும் ஒட்டகப்பால் பற்றிய குறிப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இராசத்தானின் பிகானேரில் உள்ள தேசிய ஒட்டக ஆராய்ச்சி நிலையத்தில் ஒட்டகப்பாலின் மருத்துவப் பயன்கள் உள்ள பல்வேறு பயன்கள் பற்றிய ஆய்வுகள் நடைபெறுகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Bactrian & Dromedary Camels". Factsheets. San Diego Zoo Global Library (March 2009). மூல முகவரியிலிருந்து 22 செப்டம்பர் 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 4 December 2012.
  2. Davidson, Alan; Davidson, Jane (15 October 2006). Jaine, Tom. ed. The Oxford Companion to Food (2nd ). Oxford University Press, USA. பக். 68, 129, 266, 762. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0192806815. 
  3. Bulliet, Richard W. (1975). The Camel and the Wheel. Columbia University Press. பக். 23, 25, 28, 35–36, 38–40. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780231072359. 
  4. "Camel Milk". Milk & Dairy Products. FAO's Animal Production and Health Division (25 செப்டம்பர் 2012). பார்த்த நாள் 20 திசம்பர் 2013.
  5. Shamsia, S. M. (20 திசம்பர் 2013). "Nutritional and therapeutic properties of camel and human milks". International Journal of Genetics and Molecular Biology 1 (2): 52–58. http://www.academicjournals.org/ijgmb/pdf/pdf2009/july/Shamsia.pdf. 
  6. "The amazing characteristics of the camels". Camello Safari. பார்த்த நாள் 26 November 2012.
  7. "Camel milk production in 2017, Livestock primary/Regions/World list/Production Quantity (pick lists)". UN Food and Agriculture Organization, Corporate Statistical Database (FAOSTAT) (2018). பார்த்த நாள் 30 August 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒட்டகப்_பால்&oldid=3237181" இருந்து மீள்விக்கப்பட்டது