எண்ணெய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

எண்ணெய் என்பது சூழ் வெப்பநிலையில் நீர்மமாக இருப்பதும், நீரில் கரையாததும், பிற கரிமக் கரைசல்களில் கரையும் தன்மையதுமான ஒரு பொருளைக் குறிக்கும். இது முதலில் எள், நெய் ஆகிய இரண்டு சொற்களின் கூட்டுச் சொல்லாக (எள் + நெய் = எண்ணெய்) எள்ளிலிருந்து எடுக்கப்படும் நெய்யையே குறித்தது எனினும், இப்போது எல்லா நெய்களையும் குறிக்கும் பொதுச் சொல் ஆகிவிட்டது.

தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய் என வெவ்வேறு அடைபெற்று வெவ்வேறு வகை எண்ணெய்களைக் குறிக்கின்றது. நிலத்தடியினின்று தோண்டி எடுக்கப்பட்ட எண்ணெய்யும் பாறைநெய் அல்லது பாறை எண்ணெய் என வழங்கப்படும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=எண்ணெய்&oldid=1465006" இருந்து மீள்விக்கப்பட்டது