கொழுமியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பொதுவான சில கொழுமியங்களின் வேதிவடிவங்கள். படத்தில் மேலேயுள்ளது கொலஸ்டிரால்[1] மற்றும் ஒலெயிக் அமிலம்[2]. நடுவில் உள்ளது கிளிசரால் அடிதளத்துடன் இணைக்கப்பட்ட ஓலேயோயில், ஸ்டியரோயில், பால்மிடோயில் தொடரிகளைக் கொண்ட டிரைகிளிசரைடு. கீழே உள்ளது பாஸ்போகொழுமியம், பாஸ்படைடில் கோலின்[2]

கொழுமியம் (Lipid) என்பது, கொழுப்புகள், எண்ணெய்கள், மெழுகுகள், கொலஸ்டிரால், ஸ்டெரால்கள், கொழுப்பில் கரையும் உயிர்ச்சத்துக்கள் மானோகிளிசரைடுகள், டைகிளிசரைடுகள், பாஸ்போகொழுமியங்கள் போன்ற கொழுப்பில் கரையக்கூடியவையும், இயற்கையில் கிடைப்பனவுமான மூலக்கூறுகளைக் குறிக்கும். ஆற்றலைச் சேமித்து வைப்பதும், முக்கிய கொழுமிய சமிக்ஞை மூலக்கூறுகளாகவும், உயிரணு (கல) மென்தகடுகளுக்கான அமைப்புக் கூறுகளாகவும் இருப்பதுமே கொழுமியங்களின் முக்கியமான செயல்பாடுகளாகும்[3][4]. ஒப்பனை மற்றும் உணவுப் பொருட்கள் தயாரிப்பதிலும், நுண்ணுட்பத் தொழில்நுட்பத்திலும் கொழுமியங்கள் பெருமளவுப் பயன்படுகின்றன[5].

கொழுமியங்களைப் பொதுவாக நீர் விலக்கும் அல்லது இருநிலை விரும்பும் சிறு மூலக்கூறுகள் என வரையறை செய்யலாம். கொழுமியங்களின் இருநிலை விரும்பும் பண்பானது சிலக் கொழுமியங்களை நீர்மயமானச் சூழலில் மெல்லிய சவ்வுகள், புடகங்கள் (vesicles) அல்லது இலைப்போசோம்கள் வடிவங்களாக உருபெறுவதற்கு வழிவகுக்கின்றது. உயிரியல்-சார்ந்த கொழுமியங்கள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ கீட்டோ-அசைல், ஐசோப்பிரீன் என்ற இரண்டு வெவ்வேறு வகை உயிர்வேதியியல் துணையலகுகள் அல்லது கட்டுறுப்புத் தொகுதிகளால் தொடங்கப்படுகின்றன[3]. இந்த அணுகுமுறையைப் பின்பற்றி கொழுமியங்களைக் கொழுப்பு அமிலங்கள், கிளிசரோக்கொழுமியங்கள் கிளிசரோபாசுபோக்கொழுமியங்கள், இஸ்பிங்கோக்கொழுமியங்கள், சாக்கரோக்கொழுமியங்கள், பல்கீட்டைடுகள் (கீட்டோ-அசைல் துணையலகுகள் சுருக்கும் வினைக்குட்படுவதால் உருவாக்கப்படுபவை), இஸ்டீரால் கொழுமியங்கள், பிரனோல் கொழுமியங்கள் (ஐசோப்பிரீன் துணையலகுகள் சுருக்கும் வினைக்குட்படுவதால் உருவாக்கப்படுபவை) என எட்டு வகைகளாகப் பிரிக்கலாம்[3].

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Maitland, Jr Jones (1998). Organic Chemistry. W W Norton & Co Inc (Np). p. 139. ISBN 0-393-97378-6. 
  2. 2.0 2.1 Stryer L, Berg JM, Tymoczko JL (2007). Biochemistry. San Francisco: W.H. Freeman (6th ed.). p. 328. ISBN 0-7167-8724-5.  பிழை காட்டு: Invalid <ref> tag; name "isbn0-7167-8724-5" defined multiple times with different content
  3. 3.0 3.1 3.2 Fahy E, Subramaniam S, Murphy R, Nishijima M, Raetz C, Shimizu T, Spener F, Van Meer G, Wakelam M and Dennis E.A (2009). "Update of the LIPID MAPS comprehensive classification system for lipids". Journal of Lipid Research 50: S9–S14. doi:10.1194/jlr.R800095-JLR200. பப்மெட் 19098281. 
  4. Subramaniam S, Fahy E, Gupta S, Sud M, Byrnes R.W, Cotter D, Dinasarapu A.R and Maurya M.R (2011). "Bioinformatics and Systems Biology of the Lipidome". Chemical Reviews 111 (10): 6452–6490. doi:10.1021/cr200295k. பப்மெட் 21939287. http://pubs.acs.org/doi/abs/10.1021/cr200295k. 
  5. Mashaghi S., Jadidi T., Koenderink G., Mashaghi A. (2013). "Lipid Nanotechnology". Int. J. Mol. Sci. 2013 (14): 4242–4282. doi:10.3390/ijms14024242. http://www.mdpi.com/1422-0067/14/2/4242. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொழுமியம்&oldid=2201823" இருந்து மீள்விக்கப்பட்டது