தேங்காய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தென்னை மரத்தில் தேங்காய்க் குலை
புறப்பட்டையை உரித்த தேங்காய்
தேங்காய் திருவும் ஆங்கிலச் சிறுவர்கள்

தேங்காய் என்பது தென்னைமரத்தின் பழம் ஆகும். இதனை தெங்கம் பழம் என்றும் கூறுவதுண்டு. இது கெட்டியாக இருப்பதால், பழமாக இருப்பினும், வழக்கத்தில் காய் என்றே அழைக்கப்படுகின்றது. தென்னை மரம் தெற்கில் இருந்து வருவதால், அதன் பழம் ("காய்"), தெங்கம்+ "காய்" = தேங்காய் என அழைக்கப்படுகின்றது. தேங்காயின் புறத்தே பச்சையாக இருப்பினும், பழுப்பு நிறத்தில் அடர்த்தியாக நார்கள் உள்ளே இருக்கும். இந்த நார்களை உரித்தால் உள்ளே மண்பழுப்பு நிறத்தில் மிகக்கெட்டியான ஓட்டுடன், ஒரு பெரிய கொட்டை போல் இருப்பது தான் தேங்காய். அந்த தேங்காய்க்குள் தேங்காய்நீர் இருப்பதை ஆட்டிப் பார்த்தால் உணரலாம். அளவாக முற்றிய தேங்காயை நெற்று என்பர். அந்த கெட்டியான ஓட்டை உடைத்தால் உள்ளே வெள்ளைநிறத்தில் ஏறத்தாழ 1 செ.மீ பருமனுக்கு பருப்பு காணப்படும். இந்தப் பருப்புதான் சமையலுக்குப் பெரிதும் பயன்படுகிறது. தேங்காய் மிக இளசாக இருந்தால் அதனுள் நிறைய தேங்காய்நீர் இருக்கும். இதனை இளநீர் என்பர். கோடை காலங்களில் வெய்யிலின் வெக்கையைத் தணிக்க இளநீரை அருந்துவர்.

கொப்பரை[தொகு]

தேங்காய் அளவுக்கு மீறி முற்றி இருந்தால் உள்ளிருக்கும் தேங்காய் நீர் முற்றிலுமாய் வற்றி விடும், அப்படி மிக முற்றிய தேங்காயை கொப்பரைத் தேங்காய் என்பர். கொப்பரை தேங்காய் எண்ணெய் எடுப்பதற்கு பயன்படுகிறது. நீர் முற்றாக வற்றாத தேங்காய்களை வெயிலில் நன்கு உலர்த்தி அதை கொப்பரை ஆக்குவர். கொப்பரையிலிருந்து எண்ணெய் எடுத்த பிறகு உள்ள தேங்காய் கழிவு புண்ணாக்கு ஆகும். புண்ணாக்கு கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுகிறது.

சமையல்[தொகு]

தேங்காய் தென்னிந்தியாவில் சமையலில் பெரும்பங்கு வகிக்கிறது. தேங்காயைத் துருவி அதை குழம்பில் மசாலாவுடன் சேர்த்து சமைத்தால் சமையலுக்கு மிகவும் சுவை சேர்க்கும். இதன் பயன்பாடு இந்தியா முழுவதும் மற்றும் மேற்கு நாடுகளிலும் பரவி வருகின்றது.

Coconut, meat, raw
100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து
ஆற்றல் 350 kcal   1480 kJ
மாப்பொருள்     15.23 g
- சர்க்கரை  6.23 g
- நார்ப்பொருள்  9.0 g  
கொழுப்பு 33.49 g
புரதம் 3.3 g
தயமின்  0.066 mg   5%
ரிபோஃபிளாவின்  0.02 mg   1%
நியாசின்  0.54 mg   4%
பான்டோதெனிக் அமிலம்  0.300 mg  6%
உயிர்ச்சத்து பி6  0.054 mg 4%
இலைக்காடி (உயிர்ச்சத்து பி9)  26 μg  7%
உயிர்ச்சத்து சி  3.3 mg 6%
கால்சியம்  14 mg 1%
இரும்பு  2.43 mg 19%
மக்னீசியம்  32 mg 9% 
பாசுபரசு  113 mg 16%
பொட்டாசியம்  356 mg   8%
துத்தநாகம்  1.1 mg 11%
Percentages are relative to US
recommendations for adults.
Source: USDA Nutrient database
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேங்காய்&oldid=1619686" இருந்து மீள்விக்கப்பட்டது