சோயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சோயா

முன்னுரை[தொகு]

உடல் வளர்ச்சிக்கு அடிப்படை புரதச்சத்தாகும். உடலில் புதிய திசுக்களைக் கட்டமைக்கவும், அழிந்த திசுக்களுக்குப் பதிலாக புதிய திசுக்களை உருவாக்கவும் புரதச்சத்து அவசியம். அந்த புரதச்சத்து அதிகளவில் நிறைந்திருக்கும். ஒரே பொருள் சோயா பீன்ஸ். 100 கிராம் சோயாவில் 43 கிராம் புரோட்டின் கிடைக்கிறது. இந்த புரோட்டினில் நம் உடலுக்குத் தேவையான அடிப்படை அமினோ அமிலங்கள் அனைத்தும் இருக்கின்றன. மாமிச புரோட்டினுக்கு இணையாக வரக்கூடிய ஒரே ஒரு சைவ புரோட்டின் சோயா பீன்ஸ்தான்.

சோயா பீன்ஸ் பயன்கள்[தொகு]

சோயாவில் தயாமின், நியாசின்,போலிக் ஆசிட், ரைபோபிளேவின் போன்றவை அதிகமாக இருக்கின்றன. இவை இருதயத்தின் சக்தியைக் கூட்டுவதில் அபாரமாகச் செயல்படுகிறது. இரத்தக் குழாய்களில் இளகுத் தன்மையை அதிகரித்து கொலஸ்டிரால் அளவைக் குறைத்து, இர்தக் குழாய்களுக்குள் அடைப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது. சோயாவில் இயற்கையாகவே இருக்கிற ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட்,வைட்டமின் ஈ லெசித்தின் போன்றவை கெட்ட கொலஸ்டிராலைக் குறைத்து இருதயப் பாதுகாப்பில் ஈடுபடுகின்றன. சோயாவில் கொழுப்பு குறைவாகவே இருக்கிறது. 100 கிராமில் 20 கிராம் கொழுப்புதான் இருக்கிறது. மேலும் , சோயாவில் நல்ல நார்ச்சத்து இருப்பதால் தளர்ந்த சோர்வடைந்த இருதயத்திற்கு சோயாவின் பாதுகாப்பு அபரிமிதமானது. சோயாவில் கார்போஹைட்ரேட் அளவும் குறைவும்தான். 100 கிராமில் 30 கிராம்தான். அதுமட்டுமின்றி வைட்டமின் பி, போலிக் அமிலம், பொட்டாசியம், கால்சியம், மற்றும் ஏராளமான இரும்புச்சத்துக்கள் சோயாவில் நிறைந்திருக்கிறது. அத்துடன் மினரல்களும் சோயாவில் நிறைய இருக்கின்றன. மக்னீஷியம் 280 மி.கி. கால்சியம் 277 மி.கி. பாஸ்பரஸ் 704 மி.கி.இருக்கிறது. இதனால் சோயா எலும்புகளுக்கும் பற்களுக்கும் பாதுகாப்பளிக்கிறது. சோயாவில் இருக்கும் இரும்புச்சத்து இரத்தத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. பெண்களின் மெனோபாஸ் பிரச்சனைகளைத் தடுக்கும் ஆற்றல் சோயாவுக்கு உண்டு. இதில் இருக்கிற ஐசோ பிளேவினாஸ் பெண் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் போல செயல்படும் சக்தி கொண்டது இது அற்புதமாக மெனோபாஸ் நிலையின்போத ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்க்கும் சக்தி கொண்டது. சோயா சில வகை புற்றுநோய்களைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. தினசரி 25கி நீங்கள் நல்ல ஆரோக்கியமாக இருந்தால் போதும். ரிஸ்க் இருக்கிறது என்றால் 50கி எடுத்துக்கொண்டால் அது ப்ராஸ்டேட் கான்ஸர் உருவாக்குகிற என்ஸைதை; தடுக்கும் சக்தி கொண்டது. பெண்களுக்கு கர்ப்பப்பை கான்ஸர் வராமல் தடுக்கும். சோயா இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகிறது. சோயாவில் கரையும் நார்ச்சத்து உள்ளதால் இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. சோயா உணவு கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ரால் அளவைக் கூட்டுவதன் மூலம் மாரடைப்பைக் குறைக்கிறது. நாள்பட்ட பல்வேறு நோய்களைக் கட்டுப்படுத்துவதில் சோயா பெரும் பங்காற்றுகிறது. அமெரிக்காவில் உள்ள ஜார்ஜ்மேசன் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் சோயா பீன்ஸ் உள்ளிட்ட தாவரங்களில் ஆராய்ச்சி செய்தனர். அதில் சோயாபீன்சில் எய்;ட்ஸ் நோயை உண்டாக்கும் எச்.ஐ.வி. கிருமிகளை தடுக்கும் ஜெனிஸ்டின் என் மூலப் பொருள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஜெனிஸ்டின் செல்களில் எச.ஐ.வி. கிருமிகள் ஊடுருவி பரவாமல் தடுக்கும் சக்தி படைத்தது. இதன் மூலம் எய்ட்ஸ் நோயை சோயா பீன்ஸ் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். சோயாவில் அடங்கியுள்ள பீட்டா கரோட்டின் எனப்படும் வைட்டமின் ஏ சத்து சருமத்தை மென்மையாக்குவதுடன் கண் சம்பந்தமான முக்கியமான மாலைக் கண் நோயைத் தடுக்கிறது. குழந்தைகளுக்குத் தினமும் சோயா உணவில் சேர்க்கப்படும் போது உடல் எடை,உயரம் மற்றும் நினைவாற்றல் கூடுவதுடன் இரத்த நிறமிகளின் எண்ணிக்கையும் உயரும். சோயா உணவு கால்ஷியம்,மக்னீஷியம், மற்றும் பாஸ்பரஸ் சத்துக்களைக் கொண்டிருப்பதால் பற்களை உறுதிப்படுத்துவதுடன் நரம்பு சம்பந்தமான நோய்களையும் தடுக்கிறது. சோயா உணவு யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்தி மூட்டுவலியைக் குறைத்து சிறுநீரகக் கோளாறிலிருந்து பாதுகாக்கிறது. ஆக இத்தனை நன்மைகளைத் தரும் சோயாவை தினம்தோறும் நம் உணவில் தவறாமல் சேர்த்துக்கொள்வதே புத்திசாலித்தனமாகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. கல்கண்டு வார இதழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோயா&oldid=3179749" இருந்து மீள்விக்கப்பட்டது