விட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வட்டம் விளக்கப்படம்: வட்டத்தின் சுற்றளவு (கருப்பு, C), விட்டம் (மயில் நிறம், D), ஆரம் (சிவப்பு, R), மையம் அல்லது ஆரம்பப்புள்ளி (நன்னிறம், O).

ஒரு வட்டத்திலுள்ள எதிரெதிரே உள்ள எந்த இரு புள்ளிகளையும் வட்டத்தின் மையப் புள்ளி வழியாக இணைக்கும் நேர்கோட்டுத் துண்டிற்குப் (Line segment) பெயர் விட்டமாகும் (Diameter). விட்டம் என்பதை வட்டத்தின் மிக நீளமான நாண் எனவும் வரைவிலக்கணம் கூறலாம். ஒரு கோளத்தின் விட்டத்துக்கும் இதே வரைவிலக்கணம் பொருந்தும். விட்டம் என்ற சொல் மேலே வரையறுக்கப்பட்ட நேர்கோட்டின் அளவையும் குறிக்கும். ஒரு வட்டத்தின் அனைத்து விட்டங்களும் ஒரே அளவுடையதாக இருக்கும். விட்டத்தின் அளவு வட்டத்தின் ஆரத்தின் (Radius) இரு மடங்கு அளவாக இருக்கும்.

d = 2r \quad \Rightarrow \quad r = \frac{d}{2}.

மேற்காட்டிய சமன்பாடுகளில் "d" விட்டத்தையும், "r" ஆரத்தையும் குறிக்கும்.

குவி வடிவங்களின் விட்டமானது அவ்வடிவங்களின் எல்லைக் கோட்டில் எதிரெதிராக அமைந்த இரு புள்ளிகளுக்குத் தொடலியாக உள்ள இணைகோடுகளிடையே அமையக்கூடிய அதிகூடிய தூரம் ஆகும். இவ்வாறு அமையக்கூடிய மிகக் குறைந்த தூரம் அவ்வடிவத்தின் அகலம் ஆகும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=விட்டம்&oldid=1650221" இருந்து மீள்விக்கப்பட்டது