உள்ளடக்கத்துக்குச் செல்

பபேசியே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பபேசியே (Fabaceae)
புதைப்படிவ காலம்:Paleocene–Recent[1]
Swainsona galegifolia
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Rosids
வரிசை:
Fabales
குடும்பம்:
பபேசியே (Fabaceae)

John Lindley (ஆய்வாளர்)
மாதிரிப் பேரினம்
Faba ( Vicia என்பதில் இணைக்கப்பட்டுள்ளது)
Mill.
துணைக்குடும்பங்கள்[3]

Caesalpinioideae[2] (80பே – 3200சி)
Mimosoideae (170பே – 2000சி)
Faboideae (470பே 14,000சி)

The biomes occupied by Fabaceae
பபேசியே பரவல்
நிலைஉயிரின நிலத்தில் நான்கிலும் காணப்படுகின்றன: மழைக்காடுகள், வெப்ப வலயம்,புல்வெளி, சதைப்பற்றுத் தாவரம்.[4]
பூமியின் வெப்பமண்டலப் பகுதிகள்
பூமியின் மிதவெப்பமண்டலப் பகுதிகள்

பபேசியே என்பது (தாவர வகைப்பாட்டியல்: Fabaceae) பூக்கும் தாவரங்களிலுள்ள, மூன்றாவது பெரிய குடும்பம் ஆகும்.[5] இக்குடும்பம், மிகவும் பொருளாதார முக்கியத்துவம் உடையது[6]. இக்குடும்பத்தில் 732[7] பேரினங்களும், அவற்றினுள் ஏறத்தாழ 19,400 இனங்களும் உள்ளன. உலகெங்கும் இத்தாவரங்கள் காணப்பட்டாலும், வெப்ப, மிதவெப்ப மண்டல நாடுகளில் மிகுதியாக காணப்படுகின்றன, இக்குடும்பத் தாவரங்களுள், 100 பேரினங்களும், 754 சிற்றினங்களும் இந்தியாவில் வளர்வதாக கண்டறியப் பட்டுள்ளன. தமிழில் இதன் பெயரை அவரைக் குடும்பம் அல்லது பருப்பினக் குடும்பம் எனலாம்.

வளரியல்பு

[தொகு]
  • இக்குடும்பத் தாவரங்கள் பலதரப்பட்ட வளரியல்பை பெற்றுள்ளன.
  1. தரைபடர்ந்த சிறுசெடி (எ.கா.) இன்டிகஃபெரா எனியஃபில்லா (Indigofera enneaphylla Linn.) (செம்பு நெருஞ்சி)
  2. நிமிர்ந்த சிறுசெடி (எ.கா.) குரோட்டலேரியா வெருகோசா (Crotalaria verrucosa)
  3. பின்னுகொடி (எ.கா.) கிளைட்டோரியா தெர்னேசியா (Clitoria ternatea)
  4. பற்றுக்கம்பியுள்ள ஏறுகொடி (எ.கா.) பைசம் சத்திவம் (Pisum sativum) (பட்டாணித் தாவரம்)
  5. புதர்ச்செடி (எ.கா.) கச்சானஸ் கச்சான் (Cajanus cajan)
  6. மரங்கள் (எ.கா.) பொங்கேமியா கிளாபரா (Pongamia glabra) என்பற்குள்ள வேறு பெயர்கள் ( Pongamia glabra = Pongamia pinnata = Millettia pinnata )
  7. நீர்த்தாவரம் (எ.கா.) ஆசுக்கினோமினி ஆசுப்பிரா (Aeschynomene aspera). (தக்கைத் தாவரம்)
  • வேர்: வேர் முண்டுகளைக் கொண்ட கிளைத்த ஆணிவேர்த் தொகுப்பு. வேர்முண்டுகளில் நைதரசனை நிலைநிறுத்தும் ரைசோபியம் லெகுமினோசாரம் (Rhizobium leguminosarum) என்ற பாக்டீரியாக்கள் உள்ளன.
  • தண்டு: நிலத்தின் மேல் காணப்படும். நந்த தண்டுடையது (எ.கா.) கிளைட்டோரியா தெர்னேசியா (Clitoria ternatea) (சங்குப்பூ) அல்லது கட்டைத்தன்மையுடைய தம்டு (எ.கா.)தால்பெர்ச்சியா இலாட்டிஃபோலியா (Dalbergia latifolia)

இலையமைப்பு

[தொகு]
  • தனி இலை (எ.கா.) குரோட்டலேரியா சன்சியா (Crotalaria shanica Lace-இணைய உலர்தாவரகப் படம் (ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள பெயர்))
  • இரு சிற்றிலைக் கூட்டிலை (எ.கா.) சோர்னியா தைஃபில்லா ?
  • மூன்று சிற்றிலைக் கூட்டிலை.
  • (எ.கா.) இலாப்லாப்பு பர்புரியசு என்ற இனத்தில், இதில் மூன்று சிற்றினங்கள்(Subspecies) உள்ளன.
    1. Lablab purpureus subsp. bengalensis
    2. Lablab purpureus subsp. purpureus
    3. Lablab purpureus subsp. uncinatus
  • ஒற்றைச் சிறகு கூட்டிலை
  • (எ.கா.) கிளைட்டோரியா தெர்னேசியா என்ற இனத்தில், இதில் மூன்று சிற்றினங்கள்(Subspecies) உள்ளன.
    1. Clitoria ternatea var. angustifolia
    2. Clitoria ternatea var. pleniflora
    3. Clitoria ternatea var. ternatea
  • நுனியிலுள்ள சிற்றிலைகள். (எ.கா. - பைசம் சட்டைவம் - Pisum sativum ) தாவரத்தில் பற்றுக்கம்பியாக உருமாற்றம் அடைந்துள்ளன.
  • இலைகள், மாற்றிலை அமைவில் உள்ளன. இலையடிச் செதிலையும். சிற்றிலையடிச் செதிலையும், அதைப்பு உடையனவாகவும், வலைப்பின்னல் நரம்பமைவையும் கொண்டுள்ளன.

இனப்பெருக்க வட்டம்

[தொகு]
Vicia angustifolia
பூ,கனி,விதைகள் (Clitoria ternatea )
(எ.கா. குரோட்டலேரியா வெருகோசா (Crotalaria verrucosa L.[கு 1] = கிலுகிலும்பை);
பானிக்கிள் (எ.கா. தால்பெர்சியா இலாட்டிஃபோலியா - Dalbergia latifolia Roxb (ஏற்றுக்கொள்ளப்பட்டது)[கு 2] அல்லது இலைக்கோணத்தில் தனிமலர் (எ.கா. கிளைட்டோரியா தெர்னிசியா = Clitoria ternatea )[கு 3]
  • மலர்: பூவடிச் செதிலுடையது.[9] பூக்காம்புச் செதிலுடையது. பூக்காம்புடையது. முழுமையானது. இருபால்தன்மை கொண்டது, ஐந்தங்கமலர்.[10] இரு உறைகள் உடையது. இருபக்க சமச்சீருடையது மற்றும் சூலக மேல் மலரைப் பெற்றுள்ளது.
  • தூள்தண்டுகள்: மொத்தம் பத்து உள்ளன. வழக்கமாக இருகற்றைகளையுடையவை. கிளைட்டோரியா தெர்னேசியாவில் ('Clitoria ternatea) ஒன்பது பூந்தூள் இழைகள் இணைந்தும், ஒன்று தனித்தும் (9)+1 என்ற நிலையில் உள்ளன. ஆசுக்கினோமினி ஆசுப்பிரா (Aeschynomene aspera) தாவரத்தில் பூந்தூள் இழைகள் இருகற்றைகளாக (5)+(5) இணைந்து காணப்படுகின்றன. குரோட்டலேரியா வெருகோசா (Crotalaria verrucosa) தாவரத்தில் 5 பூந்தூள் இழைகள் நீளமாகவும், மற்ற 5 பூந்தூள் இழைகள் நீளம் குறைந்து குட்டையாகவும் காணப்படுகின்றன. இவ்வாறு பூந்தூள் இழைகள் இருவேறு மட்டங்களில் உள்ளன. மேலும், பூந்தூள் பைகள் இரு உருவங்களில் உள்ளன, 5 பூந்தூள் பைகள் நீண்டும், ஈட்டி போன்றும். 5 பூந்தூள் பைகள் சிறியனவாகவும் நுனி மழுங்கியும் காணப்படும். இத்தகைய பூந்தூள் தாள் வட்டம் ஒருகற்றை இருமட்ட ஈருருவ பூந்தூள் தாள் வட்டம் எனப்படும், பூந்தூள் பைகள் இரு அறைகளையுடையவை. அடி இணைந்த பூந்தூள் இழைகள். நீள்வாக்கில் வெடிக்கும் இயல்புடையவை ஆகும்.
  • சூலகம்: மேல் மட்ட சூற்பையுடையது. ஒரு சூலக இலையுடையது. சூற்பை காம்புடையது. ஒரு சூலறையுடையது. ஒன்று அல்லது பல சூல்கள், விளிம்பு சூல் ஒட்டு முறையில் உள்ளன. சூல் தண்டு தனித்தது. உட்புறமாக வளைந்தது. சூல்முடி தட்டையாக அல்லது தூவிகளுடன் காணப்படும்.
  • கனி: இருபுற வெடிகனி (legume). கருவுறுதல் நிகழ்ச்சிக்குப் பிறகு. அராக்கிசு ஃகைபோசியா (Arachis hypogaea) தாவரமலரின் சூற்பைக் காம்பு, ஆக்கத்திசுவாக மாறி, வளர்ச்சி அடைந்து, கருவுற்ற சூற்பையை மண்ணிற்குள் செலுத்துகிறது. எனவே, நிலக்கடலை மண்ணிற்கு அடியில் உற்பத்தியாகிறது.
  • விதை:கருவூண் அற்றது மற்றும் சிறுநீரக வடிவமுடையது.

ஊடகங்கள்

[தொகு]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. Crotalaria verrucosa L. என்பதன், பிற பெயர்கள்வருமாறு:-
    1. Anisanthera hastata Raf.
    2. Anisanthera versicolor Raf.
    3. Crotalaria acuminata (DC.)G.Don
    4. Crotalaria angulosa Lam.
    5. Crotalaria arnottiana Benth.
    6. Crotalaria caerulea Jacq.
    7. Crotalaria coerulea Bedd.
    8. Crotalaria coerulea Jacq.
    9. Crotalaria flexuosa Moench
    10. Crotalaria hastata Steud.
    11. Crotalaria mollis Weinm.
    12. Crotalaria paramariboensis Miq.
    13. Crotalaria semperflorens Vent.
    14. Crotalaria verrucosa var. acuminata DC.
    15. Crotalaria wallichiana Wight & Arn.
    16. Phaseolus bulai Blanco
    17. Quirosia anceps Blanco (சான்று: its Synonyms பரணிடப்பட்டது 2021-02-28 at the வந்தவழி இயந்திரம்)
  2. = Dalbergia emarginata Roxb = Amerimnon latifolium (Roxb.)Kuntze )
  3. Clitoria ternatea L. என்பதன், பிற பெயர்கள்வருமாறு:-
    1. Ternatea vulgaris Kunth
    2. Ternatea ternatea (L.) Kuntze
    3. Clitoria albiflora Mattei
    4. Clitoria bracteata Poir.
    5. Clitoria parviflora Raf.
    6. Clitoria pilosula Benth.
    7. Clitoria ternatea var. pilosula (Benth.)Baker
    8. Clitoria ternatensium Crantz
    9. Lathyrus spectabilis Forssk.
    10. Ternatea vulgaris Kuntze
    11. Clitoria coelestris Siebert & Voss
    12. Clitoria philippensis Perr. (சான்று: its Synonyms)
    • இதன் வகைகள்
    1. Clitoria ternatea var. angustifolia
    2. Clitoria ternatea var. pleniflora
    3. Clitoria ternatea var. ternatea

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. Wojciechowski, M. F.; Lavin, M.; Sanderson, M. J. (2004). "A phylogeny of legumes (Leguminosae) based on analysis of the plastid matK gene resolves many well-supported subclades within the family". American Journal of Botany 91 (11): 1846–62. doi:10.3732/ajb.91.11.1846. பப்மெட்:21652332. 
  2. NOTE: The subfamilial name Papilionoideae for Faboideae is approved by the தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை, as is 'Leguminosae' for the Fabaceae sensu lato.
  3. "GRIN-CA". Archived from the original on 2007-09-26. பார்க்கப்பட்ட நாள் 2002-09-01.
  4. Schrire, B. D.; Lewis, G. P.; Lavin, M. (2005). "Biogeography of the Leguminosae". In Lewis, G; Schrire, G.; Mackinder, B.; Lock, M. (eds.). Legumes of the world. Kew, England: Royal Botanic Gardens. pp. 21–54. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-900347-80-6.
  5. Stevens, P. F. (2001 onwards). Angiosperm Phylogeny Website Version 9, June 2008 Mobot.org
  6. http://www.plantphysiol.org/content/131/3/872.full#T1
  7. பபேசியே பூக்குடும்பத்தின் பேரினங்கள் பட்டியல்
  8. தாவரவியல் கலைச்சொல் விளக்கம் பக்கம். 99
  9. தாவரவியல் கலைச்சொல் விளக்கம் பக்கம். 103
  10. தாவரவியல் கலைச்சொல் விளக்கம் பக்கம். 105

துணைநூல்

[தொகு]
  • இ.இரா.சுதந்திர பாண்டியன்; ஆ.விஜய குமார்; ச.ஜீவா (1994). தாவரவியல் கலைச்சொல் விளக்கம். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம். {{cite book}}: |access-date= requires |url= (help)

வெளியிணைப்புகள்

[தொகு]
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Fabaceae
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பபேசியே&oldid=3860622" இலிருந்து மீள்விக்கப்பட்டது