உள்ளடக்கத்துக்குச் செல்

மிதவெப்பமண்டலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலக வரைபடத்தில் பச்சை நிறத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது மிதவெப்பமண்டலம்

மிதவெப்ப மண்டலம் அல்லது மிதக்காலநிலை மண்டலம் அல்லது இடைக்காலநிலை மண்டலம் (Temperate zone) என்பது, ஒரு வகைப் புவியியல் பிரதேசத்தைக் குறிக்கும் சொல்லாகும். இப் பகுதிகள் புவியின் நடுப்பகுதியிலுள்ள நிலநடுக்கோட்டை உள்ளடக்கி, அதனை அண்டியுள்ள, அயன மண்டலம், அதனை அடுத்து வடக்கிலும், கிழக்கிலுமாக இரு புறமும் காணப்படும் அயன அயல் மண்டலம் என்பவற்றைத் தாண்டி, அவற்றிற்கும், வடமுனை, தென்முனையை உள்ளடக்கிய முனைவட்டங்களுக்கும் இடையில் உள்ள பகுதிகளைக் குறிக்கும்.

இப்பகுதிகளில் கோடைகாலம், குளிர்காலம் ஆகிய காலநிலைகளில், முனை வட்டங்களில் போல் மிகக் கடுமையான வெப்பம், அல்லது மிகக் கடுமையான குளிர் என இல்லாமல், ஓரளவு மிதமான காலநிலையே காணப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிதவெப்பமண்டலம்&oldid=2192066" இலிருந்து மீள்விக்கப்பட்டது