பூக்கும் தாவரம்
பூக்கும் தாவரம் Angiosperms | |
---|---|
பூ வகைகள் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | அகல் இலைத் தாவரம்
Magnoliophyta |
வகுப்பு | |
இருவித்திலைத் தாவரம் |
பூக்கும் தாவரம் (angiosperms) நிலத் தாவரங்களின் முக்கிய வகைகளுள் ஒன்றாகும். இரு வகையான வித்துத் தாவரங்களுள் ஒன்று. விதைகளை, மெய்ப் பழத்தினுள் மூடி வைத்திருக்கும் சிறப்பியல்பு கொண்டது. இவை தங்கள் இனப்பெருக்க உறுப்புகளை, பூக்கள் எனப்படும் அமைப்புகளுள் கொண்டிருக்கின்றன. இவற்றின் சூல்வித்துக்கள் (ovule), சூல்வித்திலைகள் (carpel) என்னும் அமைப்புகளுள் மூடி வைக்கப்பட்டுள்ளன.
பூக்குந் தாவரங்களின் வகைப்பாடு
[தொகு]உயிரியல் வகைப்பாட்டின்படி, பூக்கும் தாவரங்களை முன்னர் ஒருவித்திலைத் தாவரம், இருவித்திலைத் தாவரம் என்று இரு வகையாகவே பிரித்திருந்தனர். எனினும் தற்காலத்தில் 2009 ஆம் ஆண்டின் பூக்குந்தாவரத் தொகுதித் தோற்றக் குழு III முறைப்படி (APG III system – Angiosperm Phylogeny Group III system), இவை எட்டு குழுக்களாகக் குறிக்கப்படுகின்றன. அவையாவன:
- அம்பொரெல்லா (Amborella)
- அல்லியம் (Nymphaeales)
- அவுத்திரோபியன் (Austrobaileyales)
- பசியவணி (Chloranthales)
- மூவடுக்கிதழிகள் (Magnoliidae)
- ஒருவித்திலையிகள் (Monocotyledonae)
- மூலிகைக்கொம்புகள் (Ceratophyllum)
- மெய்யிருவித்திலையிகள் (Eudicotyledonae)
பூக்குந்தாவரங்களின் குடும்பங்கள்
[தொகு]- பூக்குந்தாவரத் தொகுதித் தோற்றக் குழு III முறைப்படி, 2009(APG III system – Angiosperm Phylogeny Group III system), பின்வரும் 406 குடும்பங்கள், வகுக்கப்பட்டுள்ளன.[1] இவை இலத்தீனிய மொழியில், முதலில் அழைக்கப்பட வேண்டும் என்ற வகைப்பாட்டியல் விதி, இங்கு கையாளப்படுகிறது.
தமிழக பூக்கும் தாவரங்கள்
[தொகு]தமிழகத்தில் 5640 சிற்றினங்கள் உள்ளன. இது இந்திய நாட்டின் மொத்த பூக்கும் தாவரங்களின் 32% ஆகும். இவற்றுள் 533 சிற்றினங்கள் அகணிய உயிரிகளாகும். 230 சிற்றினங்கள் செம்பட்டியலில் உள்ளவை ஆகும். 1559 சிற்றினங்கள் மூலிகைகள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.[2] 260 சிற்றினங்கள் பயிரிடப்படும் பயிர்களின் மூதாதையத் தாவரங்களாகும். இந்தியாவின் இருநடுவக்குழல் தாவரங்களில்(Pteridophytes) (1022 சிற்றினங்கள்),184 சிற்றினங்கள்(18%) தமிழகத்தைச் சார்ந்தவை ஆகும்.[3] அவற்றில் கலன் தாவரங்கள் பெருமளவில் இடம்பெற்றுள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ theplantlist பரணிடப்பட்டது 2017-09-17 at the வந்தவழி இயந்திரம் என்ற இணையதளப்பக்கம்
- ↑ https://www.ck12.org/book/ck-12-biology-advanced-concepts/section/13.17/
- ↑ Tamil Nadu Forest Dept. Floral Diversity பரணிடப்பட்டது 2017-05-09 at the வந்தவழி இயந்திரம்